பொது செய்தி

இந்தியா

திருமணமான ஒரு மணி நேரத்தில்"முத்தலாக்"

Updated : ஆக 17, 2019 | Added : ஆக 17, 2019 | கருத்துகள் (64)
Advertisement

ஆக்ரா : திருமணமான ஒரு மணி நேரத்தில் மனைவியை மூன்று முறை "தலாக்" சொல்லி விவாகரத்து செய்துள்ளார் ஒருவர்.

ராஜஸ்தானின் தோல்புர் மாவட்டத்தை சேர்ந்தவர் நதீம் என்ற பப்பன் (27). இவர் ஷூ ஷோரூம் ஒன்றில் காசாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஆக்ராவின் ஹரிபர்வத் பகுதியை சேர்ந்த ரூபி (26) என்ற பெண்ணிற்கும் ஆக.,15 அன்று இரவு திருமணம் நடைபெற்றது. ரூபி, பல் மருத்துவமனை ஒன்றில் வரவேற்பாளராக பணியாற்றி வருகிறார். 7 பேருடன் பிறந்த ரூபி, வீட்டில் 3 வது பிள்ளை.
திருமணத்தின் போது ரூபியின் வீட்டாரிடம் வரதட்ணையாக கார் வேண்டும் என நதீம் கேட்டுள்ளார். கார் தராததால், திருமணம் முடிந்த ஒரு மணி நேரத்தில், மவுலவி முன்னிலையில் மூன்று முறை "தலாக்" கூறி மனைவியை விவாகரத்து செய்துள்ளார். தங்களின் பெண்ணை ஏற்றுக் கொள்ளும்படி ரூபியின் வீட்டார் கெஞ்சியும் அவர் மனம் இரங்கவில்லை.
இதனையடுத்து ரூபியின் வீட்டினர் நதீமின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, அவர்கள் கற்களை வீசி தாக்கி உள்ளனர். இதனால் ரூபியின் வீட்டார் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து நதீம் மற்றும் அவரது உறவினர்கள் 8 பேர் மீது போலீசார் வரதட்சணை கொடுமை வழக்குப்பதிவு செய்தனர். இருந்தும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. முத்தலாக் தடை சட்டத்தை மத்திய அரசு, சட்டமாக நிறைவேற்றிய சில நாட்களிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
17-ஆக-201921:38:48 IST Report Abuse
வல்வில் ஓரி இவர்கள் முஸ்லீம் மே இல்லை ன்னு சொன்னா நம்பவா போறீங்க?.. இல்ல ரசாக் சார்? ...
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
17-ஆக-201921:03:00 IST Report Abuse
Rafi என்னுடைய உறவினர், முதல் மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார், வேறு ஒரு பெண்ணை பார்த்து மறுமணம் நடந்தது, முதல் இரவில் அப்பெண்ணிடம் பேசியபோது, அப்பெண்ணிற்கு இருதய ஆபரேஷன் செய்யப்பட்டவர் என்ற செய்தி அறிந்து அப்பெண்ணின் பெற்றோர்களை அழைத்து, நான் ஏற்கனவே முதல் மனைவியின் உடல்நிலையினால் மிகுந்த மன பாதிப்பு அடைந்துள்ளேன், இந்த செய்தியை எனக்கு தெரிவிக்கவில்லை என்ற செய்தியை நயம் பட சுட்டிக்காட்டி, அப்பெண்ணை தீண்டுவதற்கு முன்பே, அன்று இரவே அந்த பெற்றோர்களின் அனுமதியோடு கொடுத்த மகர் தொகையோடு, மேலும் நஷ்டஈடாக கொடுத்து அவர்களின் சம்மதத்துடன் பிரிந்து விட்டார். இஸ்லாம் இதற்கும் மணப்பெண்ணை தீண்டுவதற்கு முன், தீண்டிய பிறகு என்ற பாகுபாட்டுடன் அனுமதி அழித்துள்ளது. வாழ்க்கை வாழ்வதற்கே, கருத்து வேறுபாட்டுடன் வாழ்க்கையை தொலைப்பதை விட பிடித்த வாழ்க்கையை இருவரும் சம்மதத்தின் பேரில் விலகி, புதிய வாழ்க்கையை தொடரவே வலியுறுத்துகின்றது, உலக வாழ்க்கை 60 - 70 வயது வரை தான், நிலையான வாழ்க்கை என்பது மறுமையே, அதற்கு உள்ளம் ஏற்கும் நல்லவர்களாக, ஏழைகளுக்கு உதவி, உறவினர்களை அனுசரித்து, அத்துடன் ஒரே இறைவனை மட்டுமே ஐவேளை வணங்க வலியுறுத்துகின்றது இஸ்லாம்.
Rate this:
Share this comment
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
18-ஆக-201908:00:20 IST Report Abuse
கதிரழகன், SSLCஆனா கன்னி பொண்ணுகளுக்கு மஹ்ர் எக்க சக்க ஆச்சே? வசதி இல்லாத ஏழை பசங்க என்ன செய்வாக?...
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
17-ஆக-201920:10:09 IST Report Abuse
அம்பி ஐயர் காஷ்மீரில் கைது செய்யப்பட்டதற்குக் கொந்தளிக்கும் பப்பு போன்ற அறிவு ஜீவிக்கள் இந்தச் செயலுக்கு ஏன் ஒரு சிறு கண்டனம் கூடத் தெரிவிக்கவில்லை..... இதுவே முஸ்லிமிற்குப் பதிலாக இந்து பிராமணச் சமூகத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் இந்த திருட்டு திராவிஷ கூட்டங்களும் கான் + கிராஸ் கூட்டங்களும் என்னென்ன கூப்பாடு போட்டிருக்கும்....??? இப்படி ஓட்டிற்காக கேவலமாக நடந்துகொள்வதற்குப் பதிலாக................................. (உங்கள் இஷ்டப்படி நிரப்பிக்கொளுங்கள்....)
Rate this:
Share this comment
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
18-ஆக-201907:57:20 IST Report Abuse
கதிரழகன், SSLCபடிச்ச வேலைக்கு போற பொண்ணுக வெளி சாதி காதலிச்ச பெரிசா மறுப்பு சொல்லாத கட்டி வெச்சுடுறாக. இவிங்கள சாதி வெறியன் ன்னு சொல்லுறது அபாண்டம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X