பாக்., நிருபருடன் கைகுலுக்கிய இந்திய தூதர்

Updated : ஆக 17, 2019 | Added : ஆக 17, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement
India, UN Envoy, Hand Of Friendship, Pakistani Journalists,

ஐக்கிய நாடுகள்: ஐ.நா., சபையில், காஷ்மீர் குறித்த விவாதத்திற்கு பின், நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, பாக்., நிருபருடன், இந்திய தூதர் சையத் அக்பருதின நட்புரீதியில் கைகுலுக்கிய வீடியோ சமூக வலைதளங்ளில் வேகமாக பரவி வருகிறது.

காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை கூட்ட வேண்டும் என பாகிஸ்தான் கூறியது. இதற்கு நிரந்தர உறுப்பினர் நாடுகள் மற்றும் தற்காலிக நாடுகளில், சீனாவை தவிர மற்றவை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. சீனா மட்டும், 'காஷ்மீர் குறித்து பாதுகாப்பு கவுன்சிலில், ரகசியமான முறையில் விவாதம் நடத்தலாம்' என தெரிவித்தது. இதன் முடிவில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை சர்வதேச விவகாரமாக்க முயன்ற பாகிஸ்தான் மற்றும் சீனாவின் முயற்சி ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தோல்வியில் முடிந்தது.

இந்த கூட்டத்திற்கு பின்னர், ஐ.நா.,விற்கான இந்தியா தூதர் சையத் அக்பருதின் நிருபர்களை சந்தித்தார். அப்போது, முதலில் பாகிஸ்தானை சேர்ந்த மூன்று நிருபர்களை கேள்வி கேட்கலாம் என்றார்.
இதனையடுத்து கேள்வி கேட்ட பாகிஸ்தானை சேர்ந்த நிருபர் ஒருவர்,பாகிஸ்தானுடன் எப்போது பேச்சுவார்த்தையை துவங்குவீர்கள் என கேட்டார்.


latest tamil news




அப்போது, தான் இருந்த இடத்தில் இருந்து, கேள்வி கேட்ட நிருபர் அருகில் வந்த அக்பருதின், அவரிடம் கை குலுக்கினார். தொடர்ந்து, உங்கள் அருகில் வந்து கைகுலுக்கி எனது பதிலை தொடர்கிறேன் என்றார். மற்ற இரு நிருபர்களுடன் கைகுலுக்கிய பின்னர் அக்பருதின் கூறுகையில், சிம்லா ஒப்பந்தத்தில் இந்தியா உறுதியாக உள்ளது என்பதை நாங்கள் தெளிவாக கூறி எங்கள் நட்புறவை நீட்டியுள்ளோம். பாகிஸ்தானின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என்றார்.
மற்றொரு பாக்., நிருபர் , இரு அண்டை நாடுகளுடன் ஏன் தொடர்பு இல்லை. பேச்சுவார்த்தைக்கான கோரிக்கைக்கு ஏன் இந்தியா பதிலளிக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அக்பருதின், பேச்சுவார்த்தையை தொடர பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும். காஷ்மீரில், அபாயமாக சூழ்நிலை உள்ளது போன்ற பொய்யான தோற்றத்தை உருவாக்க பாகிஸ்தான் முயற்சி செய்கிறது. இந்தியாவுக்கு எதிராக, அந்நாட்டு தலைவர்கள், வன்முறையை தூண்ட முயற்சிக்கின்றனர். ஜிகாத் நடத்த வேண்டும் என கூறுகின்றனர் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வல்வில் ஓரி - தயிர் வடை,தத்தி சுடலை ,இந்தியா
17-ஆக-201921:35:22 IST Report Abuse
வல்வில் ஓரி நல்ல விஷயம்தானே?
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-ஆக-201921:09:12 IST Report Abuse
Pugazh V எந்த செய்தி வந்தாலும் ஸ்டாலின் எதுவுமே எழுத முடியவில்லை..நன்றி கெட்ட பிச்சைக்காரப் பசங்க. மிச்சம் மீதி எல்லாம் போட்டாலும் வீட்டை விட்டு போறதில்லை. கேட் கிட்டயே நின்னுண்டு ஸ்டாலினைத் திட்டண்டே இருக்கா
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
17-ஆக-201920:53:31 IST Report Abuse
Nallavan Nallavan இதில் தப்பென்ன ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X