வென்றவரே சென்று வாருங்கள்

Updated : ஆக 17, 2019 | Added : ஆக 17, 2019 | கருத்துகள் (1)
Advertisement





கோடி மக்களின் மனங்களை வென்றவரேசென்று வாருங்கள்





கடந்த 48 நாட்களாக ஒரு கோடி பக்தர்களுக்கு மேல் தரிசனம் தந்த காஞ்சி அத்திவரதர் இனி 2059-ம் ஆண்டுதான் மீண்டும் தண்ணீரை விட்டு மீண்டும் வந்து காட்சி தரவிருக்கிறார்.
இவர் இனி அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கு வாசம் செய்யப்போகும் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் அனந்த சரஸ் எனப்படும் கோவில் குளத்தினுள் உள்ள மண்டபத்தை பார்வையிட அபூர்வமாக அனுமதி கிடைத்தது.





குளத்தில் இரண்டு மண்டபம் உள்ளது அதல் சிறிய மண்டபத்திற்கு உள்ள நிலவறையில்தான் சுவாமி ஸ்தாபிதம் செய்யப்பட இருக்கிறார்.





அந்த நிலவறையில் கடந்த முறை அத்திவரதரை எப்போது எல்லாம் எடு்த்தார்கள் என்பதற்கான கல்வெட்டுகள் உள்ளது. நாகலிங்கம் உள்ளது சிறிதாக ஒரு திண்டு உள்ளது மற்றபடி செங்கல் தரை எல்லாம் சிதிலமடைந்துதான் காணப்படுகிறது.




காஞ்சியில் உள்ள ஆட்டோக்காரர் முதல் அர்ச்சகர் வரை அனைவருக்கும் அள்ளி அள்ளி தந்த அத்திவரதரை ஸ்தாபிக்கப்போகும் இடத்தை இன்னும் கொஞ்சம் நன்றாக சீரமைத்திருக்கலாம்
எப்படியோ நம் வீட்டிற்கு வந்த நம் விருப்பத்திற்கு உரிய ஒரு விருந்தினரை தற்காலிகமாகவே என்றாலும் பிரியும் போது ஒரு வலி ஏற்படும் அந்த வலிதான் தற்போது அத்திவரதரை பிரியும் போதும் ஏற்படுகிறது, இந்த தற்காலிக பிரிவிற்கு வயது நாற்பது ஆண்டுகள் எனும் போது அந்த வலி கூடுதலாகி மனம் கனக்க செய்கிறது.
-எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LovelyMarees - Kutty Japan, Cracker City.,இந்தியா
17-ஆக-201916:48:16 IST Report Abuse
LovelyMarees அத்திவரதரை ஐந்தாம் நாளே தரிசித்துவிட்டேன். அத்திவரதரை பற்றிய செய்தியை அவ்வப்போது தெரிவித்த தினமலருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X