காஷ்மீர்: பாக்.,ஐ விளாசும் முஸ்லிம் அறிஞர்| 'Be honest, Kashmir was never yours,' Islamic scholar slams Pakistan | Dinamalar

பொது செய்தி

இந்தியா

காஷ்மீர்: பாக்.,ஐ விளாசும் முஸ்லிம் அறிஞர்

Updated : ஆக 17, 2019 | Added : ஆக 17, 2019 | கருத்துகள் (64)
Share
புதுடில்லி: காஷ்மீர், பாகிஸ்தானுக்கு சொந்தமாக இதுவரை இருந்தது இல்லை. இனியும் இருக்காது என ஆஸ்திரேலியாவை சேர்ந்த முஸ்லிம் மத போதகர் முகமது தவ்ஹிதி என்பவர் கூறியுள்ளார்.ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் இமாம் முகமது தவ்ஹிதி. முஸ்லிம் மத போதகர் . இவர் கடந்த காலங்களில், பயங்கரவாதிகளை புகலிடம் அளிப்பதற்கு பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். பயங்கரவாதிகளை
Kashmir,Pakisthan,காஷ்மீர்,பாகிஸ்தான், முஸ்லிம் அறிஞர், இமாம், முகமது தவ்ஹிதி,

புதுடில்லி: காஷ்மீர், பாகிஸ்தானுக்கு சொந்தமாக இதுவரை இருந்தது இல்லை. இனியும் இருக்காது என ஆஸ்திரேலியாவை சேர்ந்த முஸ்லிம் மத போதகர் முகமது தவ்ஹிதி என்பவர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் இமாம் முகமது தவ்ஹிதி. முஸ்லிம் மத போதகர் . இவர் கடந்த காலங்களில், பயங்கரவாதிகளை புகலிடம் அளிப்பதற்கு பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். பயங்கரவாதிகளை ஆதரிக்கக்கூடாது எனவும் கூறியிருந்தார்.


latest tamil news
இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:காஷ்மீர், பாகிஸ்தானின் ஒரு அங்கமாக இருந்தது இல்லை. இனியும் பாகிஸ்தானின் அங்கமாக இருக்காது. பாகிஸ்தானும், காஷ்மீரும் இந்தியாவுக்கு சொந்தமானவை. முஸ்லிம்கள், ஹிந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியிருந்தாலும், ஒட்டு மொத்த நிலமும் ஹிந்து நிலம் என்ற உண்மை மாறாது. முஸ்லிம் மதத்தை விட, இந்தியா பழமை வாய்ந்தது என பதிவிட்டுள்ளார்.


மற்றொரு டுவிட்டர் பதிவில்,ராகுல் மோசமான அரசியல்வாதி. மோடியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக, எதிரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். சோனியாவும் சிறந்தவர் அல்ல. காசாவில் உள்ள பிரிவினைவாதிகளுடனான , அவரது தொடர்பை மறக்கக்கூடாது. கேமரா முன் அழுவதை காட்டிலும், சொந்த நலனுக்காக செயல்படுவதில் நிபுணர்கள். அவர்கள் திறமையான அரசியல்வாதிகள் அல்ல எனக்கூறியுள்ளார்.latest tamil news
முன்னதாக, கடந்த 4ம் தேதி அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,காஷ்மீர் விவகாரத்தில் எனது நிலைப்பாடு மாறவில்லை. அது ஹிந்துக்கள் நிலம். பாகிஸ்தானுக்கு சொந்தமானது அல்ல. இந்தியா சென்றிருந்த போது, இந்த விவகாரம் தொடர்பாக, இந்திய அரசியல்வாதிகள் மற்றும் மத தலைவர்களுடன் ஆலோசித்தேன் எனக்கூறியிருந்தார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X