பொது செய்தி

தமிழ்நாடு

அத்திவரதர் அனந்த சரஸ் குளத்தில் ஸ்தாபனம்: 253 பேருக்கு மட்டுமே அனுமதி

Updated : ஆக 17, 2019 | Added : ஆக 17, 2019 | கருத்துகள் (15)
Advertisement
காஞ்சிபுரம், அத்திவரதர்,

காஞ்சிபுரம்: மாலை 5 மணிக்கு உற்சவரை அத்திவரதர் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதை தொடர்ந்து அத்திவரதர் காட்சி அளித்த வசந்த மண்டபம் மூடப்பட்டது. அத்திவரதரை அனந்தசரஸ் குளத்தில் வைக்கும் நிகழ்வு இன்று இரவு 10 மணி முதல் நள்ளிரவு மணி 12 வரை நடைபெறுகிறது. ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.


253 பேருக்கு அனுமதி


அத்திவரதரை அனந்தசரஸ் குளத்தில் வைக்கும் நிகழ்ச்சியில், பட்டாச்சாரியார்கள் 15 பேர், வல்லுநர்கள் குழு 20 பேர், பணியாளர்கள் 50 பேர் உள்ளிட்ட 253 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இந்த 253 பேருக்கு இன்று இரவு மட்டும் செல்லதக்க வகையில் அனுமதி அட்டை வழங்கப்படும்.காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம் நேற்றுடன் சிறப்பாக நினைவடைந்த நிலையில், இன்று(ஆக.,17) இரவு அத்திவரதரை அனந்த சரஸ் குளத்தில் ஸ்தாபனம் செய்ய உள்ளனர். சுமார், 5 மணியளவில், அத்திவரதர்- உற்சவர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக அத்திவரதருக்கு ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இது மீடியாக்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.


அத்திவரதருடன் அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கு ஸ்தாபிக்கப் போகும் நிலவறை

அத்திவரதருடன் அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கு ஸ்தாபிக்கப் போகும் நிலவறை

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்தி வரதர் வைபவம் ஜூலை 1ல் துவங்கி சிறப்பாக நடைபெற்று வந்தது. ஒவ்வொரு நாளும் விதவிமான பூ மற்றும் பட்டு ஆடைகளில் ராஜ அலங்காரத்தோடு அத்தி வரதர் அருள்பாலித்தார். நேற்று ரோஜா நிற பட்டாடையில் எழுந்தருளினார். அத்தி வரதரை தரிசிக்க வெளியூர் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் நோக்கி படையெடுத்தனர். வைபவ கடைசி நாளான நேற்று(ஆக.,16) பொது தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
Advertisementநேற்று 3.50 லட்சம் பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். தரிசனம் நடைபெற்ற 47 நாட்களில் ஒரு கோடியே 45 ஆயிரம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர். நேற்று நள்ளிரவு வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட பின் நடை சாற்றப்பட்டது.குளத்திற்குள் வைக்கப்படும் நிகழ்வு விபரங்கள்:அத்தி வரதரை அனந்தசரஸ் குளத்தில் மீண்டும் ஸ்தாபனம் செய்ய தேவையான பணிகள் நேற்று இரவில் இருந்து நடைபெற்றது. அத்தி வரதர் வைக்கப்படும் இடம் துாய்மை செய்யப்பட்டது.சுப்ரபாத பாடலும், மங்கள வாத்தியங்களுடன் அத்தி வரதர் இன்று காலை எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்; கோவிலில் இட்லி, பொங்கல், தோசை உள்ளிட்ட நிவேதனங்கள் சுவாமிக்கு படைக்கப்படும். வெட்டி வேர், பச்சை கற்பூரம் உள்ளிட்டவை சேர்த்து தைலகாப்பு அணிவிக்கப்பட்டு புஷ்பாஞ்சலி செய்யப்படும். மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டு மண்டபத்திலிருந்து அனந்தசரஸ் குளத்தில் உள்ள நான்கு கால் நீராவி மண்டபத்திற்கு அத்தி வரதரை எடுத்து சென்று ஸ்தாபனம் செய்யப்படும்.


மேற்கு திசையில் தலையும், கிழக்கு திசையில் சுவாமி பாதமும், இருக்கும்படி சயன கோலத்தில் அத்தி வரதர் ஸ்தாபனம் செய்யப்படுவார். பேழை எதுவும் இல்லாமல் அத்தி வரதர் மட்டுமே வைக்கப்படுவார். தண்ணீரில் மிதக்காமல் இருக்க சிலை மீது நாக வடிவிலான சிலைகள் வைக்கப்படும். அத்தி வரதரை ஸ்தாபனம் செய்யும் நிகழ்வை புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாது. அத்தி வரதரை ஸ்தாபனம் செய்த பின் பொற்றாமரை குளத்தில் இருந்து தண்ணீரை எடுத்து அனந்த சரஸ் குளத்தை நிரப்புவர்.


அத்திவரதருடன் அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கு உடனிருக்கப் போகும் நாகலிங்கம்

அத்திவரதருடன் அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கு உடனிருக்கப் போகும் நாகலிங்கம்


கல்வெட்டில் கூறியிருப்பது என்ன


கடந்த,1937ம் ஆண்டு, அத்திவரதர்,குளத்திலிருந்து எழுந்தருளிய விபரங்கள் குறித்த கல்வெட்டு, அத்தி வரதரை வைக்க உள்ள மண்டபத்தின் கீழ் உள்ளது.அந்த கல்வெட்டில் கூறியிருப்பதாவது: சாலிவாஹனசகாப்தம் - 1860 ஈசவா வருஷம் ஆனி மாதம் 29 (12.-7-.1937) ஸ்ரீ அத்தி வரதர் வெளியில் எழுந்தருள பண்ணி 48 நாள் வஸந்தேரத்ஸவ மண்டபத்தில் ஆராதிக்கப்பட்டு ஆவணி மாதம், 13ம் தேதி மறுபடி இந்த நடவாபியில் எழுந்தருள பண்ணப் பட்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இன்று இரவு அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் ஸ்தாபனம் செய்யப்படுகிறார். மீண்டும் அத்திவரததர காண இன்னும் 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். 2059 ல் தான் இனி அத்திவரதரை காணமுடியும்.
Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar periyaar - Chennai,இந்தியா
22-ஆக-201918:00:29 IST Report Abuse
Kumar periyaar அவரை ஏன் திருமப திரும்ப கொண்டு போய் அங்கே வைக்கிறார்கள், இப்பொழுது தான் வெள்ளைக்காரன் போய் விட்டானே வெளியிலேயே வைத்தால் மக்களுக்கு நல்லது தானே, இந்த 40 ஆண்களில் எது வேண்டும் நடக்கும், எவ்வளவோ பேர் பாக்காமல் இறந்து போவார்கள்.
Rate this:
Share this comment
Indian - COIMBATORE,இந்தியா
23-ஆக-201917:02:36 IST Report Abuse
Indianகொள்ளைக்காரர்கள் இன்னும் இருக்குறாங்களே??????...
Rate this:
Share this comment
Kumar periyaar - Chennai,இந்தியா
25-ஆக-201915:17:56 IST Report Abuse
Kumar periyaarகடவுளை யாரிடம் பாதுகாத்து வைக்க வேண்டும்? அவரை மனிதனிடமே பாதுகாத்து கொள்ள அவருக்கு தெரியாதா...
Rate this:
Share this comment
Cancel
Sundararaman Iyer - Bangalore,இந்தியா
17-ஆக-201922:52:12 IST Report Abuse
Sundararaman Iyer Some people have made enough money in the name of Aththi Varadar. It is very fortunate that some brahmins too made money in this episode - especially the archakas, ayyengars especially. Normally brahmins never get benefit in any function in Tamilnadu.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
17-ஆக-201922:06:19 IST Report Abuse
A.George Alphonse ஒருவழியாக ஆண்டவர் அத்திவரதர் நாற்பது ஆண்டுகள் சயனிக்க திரு குளத்திற்கு சென்று விட்டார்.அதுவரை பிராப்தம் இருந்தால் 2059- ல் மீண்டும் பக்தர்கள் தரிசிக்க அந்த ஆண்டவர் Aththi வரதர் வரம் அளிப்பார் அதுவரை வணக்கம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X