பூடான் வளர்ச்சிக்கு இந்தியா உதவி: மோடி

Updated : ஆக 17, 2019 | Added : ஆக 17, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
திம்பு: பூடானின் வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து உதவும் எனவும், இதில் இந்தியா பெருமை கொள்கிறது எனவும் பிரதமர் மோடி கூறினார்.பிரதமர் மோடி அரசு முறை பயணமாக பூடான் சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு பிரதமர் லோடாய் ஷெரீங்கை சந்தித்து, இரு தரப்பு உறவு குறித்து விவாதித்தார். தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர், இரு தலைவர்களும்
இந்தியா, பூடான், பிரதமர் மோடி,

திம்பு: பூடானின் வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து உதவும் எனவும், இதில் இந்தியா பெருமை கொள்கிறது எனவும் பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக பூடான் சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு பிரதமர் லோடாய் ஷெரீங்கை சந்தித்து, இரு தரப்பு உறவு குறித்து விவாதித்தார். தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர், இரு தலைவர்களும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.


latest tamil news




அப்போது, பிரதமர் மோடி கூறியதாவது:பூடான் போன்ற அண்டை நாடுகளுடனான நட்பை எந்த நாடு வேண்டாம் என சொல்லாது. 130 கோடி இந்தியர்களின் இதயத்தில் பூடான் சிறப்பிடம் பெற்றுள்ளது. இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர், பூடான் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.பூடானின் வளர்ச்சிக்கு உதவுவதில் இந்தியா பெருமை கொள்கிறது.
பூடான் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவியையும் இந்தியா செய்யும். நீர்மின் திட்டம் இரு நாடுகளுக்கும் முக்கியமானது. இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு ரூபே கார்டை அறிமுகம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பூடானின் ஐந்தாண்டு திட்டத்தில், இந்தியாவின் பங்களிப்பு தொடரும் என்றார்.


latest tamil news




பூடான் பிரதமர் லோடாய் ஷெரீங் கூறுகையில், 2014ம் ஆண்டு, முதல்முறையாக , மோடி பூடான் வந்த போது, இரண்டு நாடுகளுக்கு இடையிலான எல்லை திறந்து விடப்பட்டதாலும், நமக்கு திறந்த இதயம் உள்ளதாலும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு வலுப்பெறும் என அவரிடம் கூறினேன். அளவில், இந்தியாவும், பூடானும் வேறுபடலாம். ஆனால், நம்பிக்கை, லட்சியம் ஆகியவை ஒன்றாக உள்ளன இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news



இதன் பின்னர் பிரதமர் மோடி, அங்கு மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஆக-201906:04:36 IST Report Abuse
ஆப்பு அவிங்களுக்கும் எப்படி கருப்புப் பணத்தை வெளியில் கொணாந்து 15 லட்சம் போடறதுன்னு சொல்லிக் குடுத்துட்டு வாங்க.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-ஆக-201921:40:04 IST Report Abuse
Pugazh V ஹா ஹா ஹா ஹா..செம்ம காமெடி
Rate this:
Cancel
17-ஆக-201921:18:27 IST Report Abuse
யாரோ இந்தியா வளர்ச்சிக்கு பூடான் உதவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X