தமிழகத்தில் பால் விலை உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் பால் விலை உயர்வு

Updated : ஆக 17, 2019 | Added : ஆக 17, 2019 | கருத்துகள் (33)
Share

சென்னை: தமிழகத்தில் பால் கொள்முதல் விலை, விற்பனை விலை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பசும்பால் கொள்முதல் விலை ரூ.4 உயர்ந்து ரூ.32 ஆகிறது. எருமைபால் கொள்முதல் விலை ரூ.6 உயர்ந்து ரூ.41 ஆகிறது. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.6 உயருகிறது. பால் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலை உயர்வு வரும் திங்கட்கிழமை முதல்( ஆக.19 ) அமலுக்கு வருகிறது.



latest tamil news





பால் கொள்முதல் விலை உயர்வு


*பசும்பால் லிட்டருக்கு ரூ.28 லிருந்து ரூ. 32 ஆக உயருகிறது.
*எருமை பால் லிட்டருக்கு ரூ.35 லிருந்து ரூ.41 ஆக உயருகிறது.


latest tamil news



அமைச்சர் கூறியதாவது: பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை ஏற்று இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் 5 ஆண்டுகளுக்கு பின்னர் தான் பால் விலை உயர்த்தி உள்ளதாகவும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். இந்த பால் கொள்முதல் விலை உயர்வால் பால் உற்பத்தியாளர்கள் 4.60 லட்சம் பேர் பயனடைவர். என அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X