அரசியல் செய்தி

தமிழ்நாடு

விழுந்த கட்சியை தூக்கி நிறுத்த விஜயகாந்த், பிரேமலதா முயற்சி

Added : ஆக 17, 2019 | கருத்துகள் (9)
Advertisement
 விழுந்த கட்சியை தூக்கி நிறுத்த  விஜயகாந்த், பிரேமலதா முயற்சி

கட்சியை துாக்கி நிறுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், தே.மு.தி.க.,வில் துவங்கியுள்ளது. இதில், பங்கேற்ற திருவள்ளூர் மாவட்ட, தே.மு.தி.க.,வினர், விஜய காந்திற்கும், பிரேமலதாவிற்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.கடந்த, 2011 சட்டசபை தேர்தலுக்கு பின், தே.மு.தி.க., தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. சமீபத்திய லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்ற, தே.மு.தி.க., தோல்வி அடைந்ததுடன், ஓட்டு வங்கியையும் கணிசமாக இழந்துள்ளது.


நடவடிக்கை


உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று, கட்சியின் பலத்தை, மீண்டும் நிரூபிக்க வேண்டும் என, அக்கட்சி தலைவர், விஜய காந்த், அவரது மனைவி, கட்சியின் பொருளாளருமான பிரேமலதாவும் கணக்கு போடுகின்றனர்.இதற்காக, கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை, இருவரும் கையில் எடுத்துள்ளனர். இதன் முதல் நடவடிக்கையாக, மாவட்ட வாரியாக, நிர்வாகிகள் கூட்டம் துவங்கியுள்ளது. கடந்த, 15ல், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், சென்னை, கோயம்பேடில் உள்ள, கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.இதில், கட்சியை பலப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, நிர்வாகிகளிடம், விஜயகாந்தும், பிரேமலதாவும் கருத்து கேட்டுள்ளனர். அதற்கு, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள், 'முதலில், மாவட்ட செயலரை நியமனம் செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளனர்.திருவள்ளூர் மாவட்ட செயலர் பதவி, பல மாதங்களாக காலியாக உள்ளது. மாநில துணை செயலர், பார்த்தசாரதியிடம், இப்பொறுப்பை, கட்சி தலைமை ஒப்படைத்து உள்ளது. அவர், கட்சியின் தலைமை அலுவலக பணிகளை கவனிப்பதால், மாவட்டத்தில் கவனம் செலுத்த முடியவில்லை.


அதிர்ச்சி



'இதே நிலை தொடர்ந்தால், உள்ளாட்சி தேர்தலிலும் தோல்வி உறுதி' என்று வெளிப்படையாக, சில நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதை கேட்டு விஜயகாந்தும், பிரேமலதாவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதை வெளிக்காட்டாமல், உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியை தொடர்வது குறித்தும், எந்தெந்த வார்டுகளை கேட்பது என்றும் பேசியுள்ளனர்.விஜயகாந்தின் பிறந்த நாளை, வரும், 25ல், தடபுடலாக கொண்டாட, மாவட்ட நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்கும்படி, பிரேம லதா கூறியுள்ளார். இதேபோல தொடர்ந்து, மாவட்ட வாரியாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தவும், தேதி குறிக்கப்பட்டுள்ளது.- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
POORMAN - ERODE,இந்தியா
22-ஆக-201911:08:41 IST Report Abuse
POORMAN பூட்ட கேஸ் நைனா இது. எள்ளுந் தண்ணியும் எறைச்சு விட்டுட்டு போய் நிம்மதியா ட்ரீட்மெண்ட் எடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
19-ஆக-201909:34:40 IST Report Abuse
Nalam Virumbi வயசாகிப் போயிப்பிடுச்சுங்கோ... இனி தூக்கி நிறுத்த முடியாது.... கட்சியை
Rate this:
Share this comment
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
19-ஆக-201908:50:27 IST Report Abuse
PANDA PANDI பாஜக வில் கலந்துவிடுங்கள். வடை கட்சியுடன் கை கோர்த்து காய் நகர்த்திய உங்கள் கதி இதோ. இனி NEXT ஒரு கொள்கையில்லா கூட்டம், சுயநல கூட்டம், தர்மயுத்தம் என்று சொல்லி தர்மம் பண்ண கூட்டம். வாய் யில் வடை சுடும் கூட்டம், அறிவுஜீவி பிறந்திருக்கவேண்டிய கூட்டம் இப்படி பற்பல சின்னாபின்னமாக போகும் காலம் விரைவில் வரும். அன்று தமிழகம் தலைகுனிந்து நிற்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X