அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் வேட்பாளராக்க முயற்சி: ரஜினிக்கு அமித் ஷா அழைப்பு

Updated : ஆக 19, 2019 | Added : ஆக 17, 2019 | கருத்துகள் (57)
Share
Advertisement
முதல்வர், வேட்பாளர், முயற்சி, ரஜினி, அமித் ஷா, அழைப்பு

தனிக்கட்சி துவக்குவதை விட, பா.ஜ.,வில் சேர்ந்தால், நடிகர் ரஜினிக்கு, தமிழக, பா.ஜ., தலைவர் பதவியும், முதல்வர் வேட்பாளர் பதவியும் தருவதாக, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.

அனைத்து மாநிலங்களிலும், பா.ஜ., ஆட்சி அமைக்கும் முயற்சியில், பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷாவும் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில், கர்நாடகாவில், முதல்வராக இருந்த குமாரசாமியின் அரசு கலைக்கப்பட்டு, அங்கு, பா.ஜ., அரசு ஏற்படுத்தப்பட்டது.


குழப்பம்



எனவே, தமிழகத்திலும், முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்கள், வெளிநாடு செல்லும் போது, கறுப்பு பணம் பதுக்குவதற்கான பயணம் என்ற வதந்தியை கிளப்ப, தி.மு.க., திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் அ.தி.மு.க.,வினர் பங்கேற்க உள்ள ஒவ்வொரு நிகழ்வையும் படம் பிடிக்க, பல குழுக்களையும், அணுகி வருகின்றனர்.

அதே நேரத்தில், பல வதந்திகளை கிளப்பி, போராட்டங்கள் நடத்தி, ஆட்சியிலும், ஆளும் கட்சியிலும் குழப்பத்தை, ஏற்படுத்த, தி.மு.க., திட்டமிட்டுள்ளது.இந்நிலையில், அடுத்த சட்டசபை தேர்தலுக்கு, பலமான கூட்டணி அமைக்கவும், ரஜினியை, தமிழக, பா.ஜ., தலைவராகவும், முதல்வர் வேட்பாளராகவும் அறிவிப்பதற்கான காய் நகர்த்தும் பணியை, அமித் ஷா துவக்கி உள்ளார்.

இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:சென்னையில் நடந்த, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு எழுதிய புத்தகம் வெளியீட்டு விழாவில், ரஜினி, காஷ்மீர் விவகாரத்தில் ராஜதந்திரத்துடன் செயல்பட்டதாக, அமித் ஷாவை பாராட்டினார்.

'பிரதமர் மோடியும், அமித் ஷாவும், கிருஷ்ணர், அர்ஜுனன் போன்றவர்கள்' என்றும் புகழ்ந்தார். இந்நிகழ்ச்சிக்கு பின், ரஜினியிடம் அமித் ஷா தனியாக பேசியுள்ளார். அப்போது, 'பா.ஜ., கட்சியில், ரஜினி மக்கள் மன்றத்தை இணைத்து விடுங்கள். உங்களை, தமிழக, பா.ஜ., தலைவராகவும், முதல்வர் வேட்பாளராகவும் கொண்டு வருகிறேன்' என, கூறியிருக்கிறார்.


தனிக்கட்சி



இதையடுத்த சில நாட்களில், ரஜினியிடம், 'சித்திரை மாதத்தில், தனிக்கட்சி துவக்குவீர்களா' என, நிருபர்கள் கேட்டனர். அதற்கு, ஆம் என்றோ, இல்லை என்றோ, அவர் பதிலளிக்காமல், 'உங்களிடம் சொல்லாமல் இருக்க மாட்டேன்' என, மழுப்பலாக தெரிவித்தார்.இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ
24-ஆக-201902:44:00 IST Report Abuse
Dr Kannan நந்தவனத்தில் ஓர் ஆண்டீ அவன் நாலாறு மாசமாய் குயவனை வேண்டி, கொண்டு வந்தான் ஒரு தோண்டி, அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தான்டீ, முயலுக்கும் ஆமைக்கும் ரேசு அதில ஜைக்கிற ஆள்தான்டா எப்போதும் பாஸு, ஃபையர் இல்லா ஆள் எல்லாம் க்ளோசு
Rate this:
Cancel
Karunan - udumalpet,இந்தியா
21-ஆக-201909:41:14 IST Report Abuse
Karunan அப்படியொண்ணு நிகழ்ந்தா திமுக அம்புட்டுதானேங்கோ ...அறிவாலயத்தில இன்னொரு மொக்க சிலை வருமுங்க ..
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
21-ஆக-201905:28:52 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மொட்டையும் மொட்டையும் சேந்துச்சாம்.. முருங்கை மரத்தில் ஏறிச்சாம்.. கட்டெறும்பு வந்திச்சாம்.. ..... பாத்து கடிச்சுச்சாம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X