அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வெற்றிக்கு வியூகம் வகுத்த சுனில் : ஸ்டாலினை விட்டு விலகுகிறாரா?

Updated : ஆக 18, 2019 | Added : ஆக 17, 2019 | கருத்துகள் (25)
Share
Advertisement
தி.மு.க., வெற்றி, வியூகம்,சுனில்,ஸ்டாலின், விலகுகிறார்

லோக்சபா தேர்தலில், தி.மு.க., வெற்றிக்கு வியூகம் அமைத்த, ஓ.எம்.ஜி., நிறுவனத்திற்கும், தி.மு.க., தலைவர், ஸ்டாலினுக்கும், அரசியல் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் சுனிலுக்கும், பா.ஜ., தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர்கள், அகிலேஷ் யாதவ், குமாரசாமி உள்ளிட்டோர் வலை விரித்துள்ளனர்.

இதனால், ஸ்டாலினிடமிருந்து, சுனில் விலகுகிறாரா என்ற கேள்வி, தி.மு.க., வட்டாரத்தில் எழுந்துள்ளது.தேசிய அரசியல் கட்சிகள் மத்தியில், புதிய கலாசாரம் ஒன்று உருவாகி உள்ளது. அதாவது, கட்சி சாராத அரசியல் நிபுணர் குழுவை, ஒவ்வொரு தலைவரும் உருவாக்கி, தங்கள் வெற்றியை தேடிக் கொள்கின்றனர்.

குறிப்பாக, தலைவரின் பிரசாரம், வேட்பாளர்கள் தேர்வு, தொண்டர்களின் உழைப்பு, தேர்தல் அறிக்கை, பொது மக்களுக்கு தொகுதி வாரியான வாக்குறுதிகள் என, பல்வேறு வியூகங்களை, அரசியல் நிபுணர் குழுவினர் வகுத்து தந்து, வெற்றிக்கு காரணமாக இருக்கின்றனர்.கடந்த, 2011 குஜராத் சட்டசபை தேர்தலிலும், 2014 லோக்சபா தேர்தலிலும், பிரதமர் மோடி வெற்றிக்கான வியூகங்களை வகுத்த, அரசியல் நிபுணர் குழுவின் ஒருங்கிணைப்பாளராக, பிரசாந்த் கிஷோர் பணியாற்றினார்.


கவனம்ஆந்திராவில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், ஜெகன்மோகன் ரெட்டியின் வெற்றிக்கு பணியாற்றிய, பிரசாந்த் கிஷோர், தற்போது, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர், கமலுக்கு பணியாற்றி வருவதாக தெரிகிறது.

இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் அதிகமாக சம்பளம் கேட்பதால், முதல்வர், இ.பி.எஸ்., மற்றும் வட மாநில முதல்வர்கள் சிலர், அவரை தவிர்த்து விட்ட தாக கூறப்படுகிறது.அதனால், தேசிய அளவில், பிரசாந்த் கிஷோருக்கு அடுத்ததாக, சுனிலை நோக்கி, வட மாநில அரசியல் தலைவர்களின் கவனம் திரும்பி உள்ளது. சுனில், ஏற்கனவே கிஷோரிடம் பணியாற்றியவர். தற்போது அவர், ஸ்டாலினுக்கும், 'ஒன்மேன் குரூப்' எனும், தி.மு.க.,வின், ஓ.எம்.ஜி., நிறுவனத்திற்கும் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி, 37 தொகுதி களில் வெற்றி பெற்றுள்ளதால், சுனிலை, பா.ஜ., தலைவர்கள் சிலரும், முன்னாள் முதல்வர்கள், அகிலேஷ் யாதவ், குமாரசாமி ஆகியோரும், தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுஉள்ளதாக தெரிகிறது.


'நமக்கு நாமே'


இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த, 2016 சட்டசபை தேர்தல் நடப்பதற்கு ஓராண்டுக்கு முன், ஸ்டாலினை, 'நமக்கு நாமே' என்ற பயணத்தின் வாயிலாக, முதல்வர் வேட்பாளராக்கிய பணிகளை, ஓ.எம்.ஜி., மேற்கொண்டது. கட்சி நிர்வாகிகளின் பின்னணி தெரிந்து, தொகுதி வாரியாக முகாமிட்டு, களப் பணிகளை ஆய்வு செய்து, மூன்று பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை தயாரித்து, ஸ்டாலினிடம் அளித்தது. அதிலிருந்து ஒருவரை தான், ஸ்டாலின் தேர்வு செய்தார்.

அதன் காரணமாக, பலமிக்க எதிர்க்கட்சியாக, தி.மு.க., உருவெடுத்தது.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., தேர்தல் விளம்பரங்கள், ஸ்டாலினின் வேன் பிரசாரம், சாலை வழி பிரசாரம், வேட்பாளர் தேர்வு, கட்சி பணிகள் குறித்து, பல்வேறு புதிய யுக்திகளை, சுனில் புகுத்தினார். அதனால், தி.மு.க., அமோக வெற்றி பெற்றது.


அழைப்புஎனவே, சுனிலுக்கு, மற்ற மாநிலங்களில் இருந்து, பா.ஜ., தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர்கள், அகிலேஷ் யாதவ், குமாரசாமி போன்றவர்களிடம் இருந்து, அழைப்பு வந்துள்ளது. அதனால், ஸ்டாலினை விட்டு, அவர் விலகலாம் என, தெரிகிறது.இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
22-ஆக-201905:46:06 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga மக்களுக்கு தொண்டு, தொண்டர்கள் அரவணைப்பு, நாட்டுமுன்னேற்றம் போன்ற செயல்களை பின்னுக்கு தள்ளிவிட்டு இதுபோன்ற நிறுவனங்களை நாடுவது நிரந்தரமான வெற்றியை தராது.
Rate this:
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
21-ஆக-201914:16:48 IST Report Abuse
இந்தியன் kumar காசு உள்ள கட்சிகள் இந்த மாதிரி ஆட்களை வைத்துக்கொள்வார்கள் , அந்த காசு யார் காசு கைகாசா என்ன ???
Rate this:
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
21-ஆக-201914:15:13 IST Report Abuse
இந்தியன் kumar காசுக்கு வோட்டு என்கிற நிலை மாறாதவரை எந்த முன்னேற்றமும் தமிழகத்தில் கொண்டு வர முடியாது . பணம் உள்ளவன்தான் வெற்றி பெறலாம் என்கிற நிலை தான் தமிழ்நாட்டில் உள்ளது மக்கள் மாறாதவரை மாற்றம் என்பது சாத்தியம் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X