அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு செய்கிறது இளைஞர் காங்கிரஸ்

Added : ஆக 17, 2019
Advertisement

உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., இளைஞரணிக்கு போட்டியாக, வேட்பாளர்களை தேர்வு செய்யும் வகையில், வரும், 27ல், கோவையில், இளைஞர் காங்கிரஸ் மண்டல மாநாடு நடக்கிறது.


உதயநிதி



உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., இளைஞர் அணி நிர்வாகிகளை, வேட்பாளராக்குவது குறித்து ஆலோசிக்க, வரும், 25ல், சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், இளைஞரணி செயலர், உதயநிதி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.அதற்கு போட்டியாக, இளைஞர் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்யும் வகையில், மண்டல மாநாடு, 27ம் தேதி, கோவையில், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர், ஹசன் தலைமையில் நடக்கவுள்ளது. அதில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர், சஞ்சய் தத், அகில இந்திய காங்கிரஸ் செயலர், கிருஷ்ணா அல்லவேலு, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர், பி.வி.ஸ்ரீனிவாஸ் பங்கேற்க உள்ளனர்.தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் பெறும் மேயர் பதவிகளில், நாகர்கோவில் மட்டும், இளைஞர் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை, அம்மாநாட்டில் நிறைவேற்ற உள்ளனர்.


பங்கீடு


தி.மு.க.,விடம் பெறும் பங்கீட்டில், இளைஞர் காங்கிரசுக்கு, குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும், வலியுறுத்த உள்ளனர்.மேலும், இளைஞர் காங்கிரசில், தற்போது, அமைப்பு ரீதியாக, 72 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திற்கும், 10 வேட்பாளர்களை தயார் செய்து, அவர்களின் தகுதி, சொந்த செல்வாக்கு பற்றிய அறிக்கை தயாரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X