அரசியல் செய்தி

தமிழ்நாடு

வெளுக்கிறது அரசியல் சாயம் :கட்சியினரை ஏமாற்ற தினகரன் தந்திரம்

Added : ஆக 17, 2019 | கருத்துகள் (8)
Advertisement
  வெளுக்கிறது அரசியல் சாயம் :கட்சியினரை ஏமாற்ற தினகரன் தந்திரம்


லோக்சபா தேர்தல் படுதோல்விக்கு பின், கட்சி அமைப்பு ரீதியாக உள்ள, நான்கைந்து மாவட்டங்களை இணைத்து, ஒருங்கிணைந்த வருவாய் மாவட்ட அளவில், செயல்வீரர் கூட்டத்தை, அ.ம.மு.க., பொதுச்செயலர், தினகரன் நடத்துகிறார். இதன் வாயிலாக, அவரது அரசியல் செல்வாக்கு சரிந்து விட்டது, உறுதியாகி உள்ளது.லோக்சபா தேர்தல், 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலில் போட்டியிட்ட, அ.ம.மு.க., படுதோல்வி அடைந்தது.


கூட்டம்இதனால், அக்கட்சி நிர்வாகிகள் பலர், வரிசையாக வெளியேறி, அ.தி.மு.க., - தி.மு.க.,வில் இணைந்தனர். கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்ட வில்லை என்பதை போல, லோக்சபா தேர்தல் தோல்வியை பொருட்படுத்தாமல், கட்சியை பலப்படுத்தும் வகையில், மாவட்ட வாரியாக, தொண்டர்களை சந்திக்க, தினகரன் விரும்பினார்.உள்ளாட்சி தேர்தலுக்குள், அ.ம.மு.க.,வை பலப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தோடு, செயல் வீரர்கள் கூட்டங்களை நடத்தி வருகிறார். அவரது கட்சியில், அமைப்பு ரீதியாக, 70 மாவட்டங்கள் உள்ளன. லோக்சபா தேர்தலுக்கு முன், கட்சி அமைப்பு ரீதியான உள்ள அனைத்து மாவட்டங்களிலும், தனித்தனியாக செயல் வீரர்கள் கூட்டம் நடத்தியதால், அவருக்கு தொண்டர்கள் செல்வாக்கு அதிகமாக இருப்பது போல காட்டப்பட்டது.ஆனால், தற்போது, கட்சி அமைப்பு ரீதியாக உள்ள மாவட்டங்களில், தனித்தனியாக செயல் வீரர்கள் கூட்டங்களை நடத்த, தினகரன் முன்வரவில்லை. அப்படி நடத்தினால், தொண்டர்கள் கூட்டத்தை சேர்க்க முடியாது. லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின், மாவட்ட வாரியாக, அ.ம.மு.க., தொண்டர்கள், அ.தி.மு.க., பக்கம் சாய்ந்து விட்டனர்.எனவே, நான்கைந்து மாவட்டங்களை சேர்த்து, ஒருங்கிணைந்த மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் என்ற பெயரில் நடத்தி வருகிறார்.


விமர்சனம்


கடந்த, 15ம் தேதி, சென்னை, புரசைவாக்கத்தில், வட சென்னை வடக்கு, வட சென்னை தெற்கு என, இரண்டு மாவட்டங்களை ஒருங்கிணைத்து, செயல் வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டது.இப்படி, வருவாய் மாவட்ட அடிப்படையில், இரண்டு அல்லது நான்கைந்து மாவட்ட நிர்வாகிகள் கூடும்போது, கல்யாண மண்டபம் நிரம்பி வழிகிற தோற்றத்தை உருவாக்கலாம். பொது மக்களையும், தொண்டர்களையும் ஏமாற்றும் விதமாக, தினகரன் செயல்பாடு இப்படி இருப்பதாக, அக்கட்சியில், விமர்சனம் எழுந்துள்ளது.இது குறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:மாவட்ட வாரியாக நடக்கும் செயல் வீரர்கள் கூட்டத்தில், தினகரன் பேசுகையில், 'நமக்கு எதிரி, தி.மு.க., - துரோகி, அ.தி.மு.க.,' என குறிப்பிடுவதை, கட்சியினர் விரும்பவில்லை. அ.தி.மு.க., அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க.,வினரின் வீட்டு விசேஷங்களுக்கு போகக் கூடாது; மீறி போனால், நடவடிக்கை எடுப்பேன் என, தினகரன் எச்சரிப்பதையும், யாரும் ரசிக்கவில்லை.

கடந்த, 40 ஆண்டுகளாக, அ.தி.மு.க.,வினருடன் குடும்ப ரீதியாக பழகியவர்கள் தான், அ.ம.மு.க.,வினர் என்பதை, தினகரன் மறந்து பேசுகிறார். 'உள்ளாட்சி தேர்தலில், தனித்து போட்டியிடலாம்' என்று, அவர் வலியுறுத்துவதையும், நிர்வாகிகளால் ஜீரணிக்க முடியவில்லை.இவ்வாறு, அ.ம.மு.க., வட்டாரங்கள் கூறின.- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TamilArasan - Nellai,இந்தியா
24-ஆக-201914:51:10 IST Report Abuse
TamilArasan என்னத்த சொல்ல தினகரனுக்கு சசி சித்தியா அல்லது பெரியமாவா - அது கிடக்குது கழுதை... ஜெயா அவர்களின் உறவு மட்டும் கிடைக்கலை என்றால் தினகரன் போன்ற ஆட்கள் எதாவது தியேட்டர் எதிரில் திருட்டு டிக்கெட் வித்துக்கொண்ட இருந்திருப்பர்...
Rate this:
Share this comment
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
21-ஆக-201911:27:06 IST Report Abuse
Varun Ramesh 1972 க்குப்பிறகு புதிதாக கட்சி தொடங்கியவர்களும் பெரிய கட்சிகளிலிருந்து பிரிந்து வந்து வேறு கட்சிகளை துவங்கியவர்களும் ஆட்சியை பிடிக்குமளவிற்கு பலமான கட்சிகளாக வளரவே இயலவில்லை என்பது தான் தமிழகத்தின் வரலாறு. ஏன்? எந்த கட்சிகளை குறை கூறி குற்றம் சொல்லி கட்சி தொடங்கினார்களோ, எந்த கட்சியின் குற்றம் குறைகள் இல்லாத முற்றிலும் மாறுபட்ட கட்சியாகத்தான் தங்களது கட்சி இருக்கும் என்று அறைகூவல் விடுத்தார்களோ, அவர்களே குற்றம் காணப்பட்ட கட்சிகளோடு மாறி மாறி கூட்டணியமைத்து தான் தேர்தலை சந்தித்திருக்கிறார்கள். எனவே, டி டி வி தினகரன்கள் பத்தொடொன்று என்ற ரீதியிலேதான் இருப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
amicos - Bali,இந்தோனேசியா
21-ஆக-201900:19:29 IST Report Abuse
amicos இவர் இன்னுமா கட்சி நடத்துறார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X