பிஷப் விவகாரம்: கேரள கன்னியாஸ்திரி வாடிகனில் புகார்

Updated : ஆக 17, 2019 | Added : ஆக 17, 2019 | கருத்துகள் (41)
Advertisement
 பிஷப் விவகாரம்: கேரள கன்னியாஸ்திரி வாடிகனில் புகார்

கொச்சி: கேரளாவில் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிஷப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரி லக்கி கலப்புரா, பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையில் இருந்து தான் நீக்கப்பட்டதை எதிர்த்து வாடிகனில் புகார் மனு அனுப்பியுள்ளார்.
பஞ்சாப் , ஜலாந்தரை சேர்ந்த , பிஷப் பிராங்கோ மூலக்கல் என்பவர் தனக்கு கீழ் பணியாற்றிய கேரள கன்னியாஸ்திரி ஒருவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் சிக்கினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி லக்கி கலப்புரா என்ற கன்னியாஸ்திரி, மேலும் சில கன்னியாஸ்திரிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினார்.





இந்நிலையில் லக்கி கலப்புராவின் வாழ்க்கை முறை குறித்து புகார் கூறப்பட்டதையடுத்து ரோமன் கத்தோலிக்க தேவாலாயத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் எப்.சி.சி. எனப்படும் ‛பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட்' சபையிலிருந்து இது குறித்து விளக்கம் அளிக்கும்படி லக்கி கலப்புராவுக்கு 'நோட்டீஸ்' அனுப்பியது. லக்கி கலப்புரா அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என கூறி அவரை சபையிலிருந்து நீக்குவதாக முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.சபையின் முடிவை எதிர்த்து வாடிகனில் புகார் கூறியிருந்தார் லக்கி கலப்புரா.
இது குறித்து லக்கி கலப்புரா கூறுகையில், என்னை நீக்கியது ரோமன் கத்தோலிக்க விதிமுறைகளுக்கு முரணானது. முடிவை எதிர்த்து நேற்று (ஆக.16) வாடிகனுக்கு இ.மெயில் மூலம் புகார் அனுப்பியுள்ளேன். இன்று தபால் மூலம் கடிதமும் அனுப்பியுள்ளேன்.சட்ட போராட்டம் மூலம் சந்திக்க தயாராக உள்ளேன் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
18-ஆக-201918:18:42 IST Report Abuse
Cheran Perumal பாத்து சூதானமா நடந்துக்கம்மா, இல்லேன்னா அங்கிருந்து ஒரு குழு விசாரணைக்கு வந்து இந்த கன்னியா ஸ்த்ரீ ஒழுக்கமில்லாதவர் என்று பட்டம் கட்டிவிட்டு போயிடுவாங்க. உலகெங்கும் கிறிஸ்தவ மடங்களில் இந்த கூத்துதான் நடக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
18-ஆக-201912:28:55 IST Report Abuse
Needhiyin Pakkam Nil சாட்சி சொன்னவருக்கு பதவி போச்சு, கற்பழிக்க பட்டவருக்கு கன்னியாஸ்திரி பட்டம் போச்சு, குற்றம் செய்தவருக்கு ஜாமீன் கிடைச்சிடுச்சி, அப்புறம் எதற்காக இந்த வீண் முயற்சி
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
18-ஆக-201911:24:50 IST Report Abuse
தமிழ்வேள் வாட்டிகனுக்கு போனாலும் நியாயம் கிடைக்காது அவர்கள் ஆண்களை அனுசரித்து போகவேண்டும் என்று இயேசுவின் நாமத்தால் கட்டளையிடுவார் பெண்கள் கிடைக்கவில்லை என்றால் சிறுவர்கள் என்று அட்ஜஸ்ட் செய்துகொண்டு வாழும் புழுக்கள் இவர்கள் இந்த கன்னியா ஸ்த்ரீகளும் அவ்வளவு யோக்கியமானவர்கள் கிடையாது ஆண்கள் செய்யும் அக்கப்போரில் பாதிப்பங்காவது துணிந்து செய்பவர்களே இவர்கள் பாதிக்கப்பட்டால் வெளியே தெரியும் ஆண்கள் தவறு செய்வது வெளிப்படுத்தப்படுவது கிடையாது அவ்வளவே இவை அனைத்துக்கும் காரணம் உணவு கட்டுப்பாடின்மை ஆண்டுமுழுவதும் இடையறாது புலால் உண்டால் மது அருந்தினால் உடல் மனம் இரண்டும் அடங்காது எனவேதான் ஹிந்து தர்மத்தில் துறவிக்கு கடும் உணவுக்கட்டுப்பாடு மடத்தில் உள்ளோர் எவ்வளவு வக்கணையாக உணவு உண்டாலும் அந்த மட துறவி மட்டும் மனக்கட்டுப்பாடுடன் உப்பு காரம் என எதையும் சேர்க்காமல் உண்ணவேண்டும் மதுவும் புலாலும் யில்லாத சர்ச் அல்லது குருஇல்லங்களை குருதத்துவ கல்லூரிகளை காட்டுங்கள் பார்ப்போம் நல்லவேளை இயேசு எழுந்து வரவில்லை வந்தால் அவரது வீட்டு பெண்களையும் குறிவைத்து கன்னியாஸ்திரீ ஆக்கி குடும்பம் நடத்துவார்கள் இந்த பாவிகள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X