புதுடில்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு பட்டம் பறக்க விடப்பட்டதில் சீன மாஞ்சா கயிற்றில் அடிப்பட்டு 200 பறவைகள் இறந்துள்ளன. 550 பறவைகள் காயமுற்றுள்ளன. டில்லியில் நடந்துள்ள இத்துயர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:

முக்கிய விழாக்கள் வரும் போது டில்லியில் பட்டம் பறக்க விடும் பழக்கம் மக்களிடையே இருந்து வருகிறது. நேற்றுமுன்தினம் நாடு முழுவதும் சுதந்திரதினம் கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி டில்லியில் கடந்த 13 முதல் 15 ம் தேதி வரை மக்கள் பட்டம் விட்டனர். இந்த 3 நாட்களில் டில்லி சாந்தினி சவுக் பகுதியில் உள்ள பறவைகள் சிகிச்சை மருத்துவமனைக்கு பலரும் புறாக்கள், மைனாக்கள், கழுகு மற்றும் கிளி உள்ளிட்ட பறவைகளை காயங்களுடன் சிகிச்சைக்காக எடுத்து வந்தனர்.

குறிப்பாக சீன மாஞ்சாவால் தான் அதிகபட்ச காயம் ஏற்பட்டதாகவும், சீனா மாஞ்சாவால் 15 ம்தேதி மட்டும் 60 பறவைகள் பலியானதாக தெரிகிறது.
சீன மாஞ்சா கயிற்று பட்டத்திற்கு டில்லி அரசு கடந்த 2017 ல் தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த தடை முழுமையாக அமல்படுத்தி வெற்றி பெற முடியவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE