ராஜதந்திரம்!காஷ்மீர் விவகாரத்தில் பாக்., - சீனா மூக்குடைப்பு

Updated : ஆக 19, 2019 | Added : ஆக 17, 2019 | கருத்துகள் (22)
Share
Advertisement
 ராஜதந்திரம், காஷ்மீர், விவகாரம், பாக்.,  சீனா, மூக்குடைப்பு

நியூயார்க்: ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலுக்கு இழுத்து, அதை சர்வதேச பிரச்னையாக்கவும்,உலக நாடுகளின் ஆதரவை பெறுவதற்கும், பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள், இந்தியாவின் ராஜதந்திரநடவடிக்கையால், தவிடுபொடியாகின. இதனால், பாகிஸ்தானுக்கு மட்டுமின்றி, அந்நாட்டுக்கு ஆதரவாக செயல்பட்ட சீனாவுக்கும், மூக்குடைப்பு ஏற்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, காஷ்மீரின் வளர்ச்சிக்கு, இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் பாராட்டு தெரிவித்துள்ளது, பாகிஸ்தானுக்குகடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற்றது முதல், அரசியல் சாசனத்தின் பிரிவு, 370 கீழ், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு, சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்தது.காஷ்மீரில், தொடர்ந்து நடந்து வரும் பயங்கரவாத செயல்கள், வன்முறைகளுக்கு முடிவு கட்டி, அம்மாநிலத்தின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை, மத்திய அரசு தீவிரப்படுத்தியது.இதற்காக, ஜம்மு -காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்ததை, சமீபத்தில் ரத்து செய்தது. அத்துடன், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை, லடாக், ஜம்மு - காஷ்மீர் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், அண்டை நாடான பாகிஸ்தானுக்கு, இந்த முடிவு, பெரும் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய துாதரை திருப்பி அனுப்புவது, தார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை ரத்து செய்வது போன்றநடவடிக்கைகளை, பாகிஸ்தான் எடுத்தது.

காஷ்மீர் விவகாரத்தில், இந்தியாவின் நடவடிக்கை குறித்து, உலக நாடுகள்பலவற்றிடமும், பாக்,. புலம்பியது. ஆனால், 'இது எங்களின் உள் விவகாரம்' என, இந்தியா கூறியதை, அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உட்பட, பெரும்பாலான நாடுகள் ஏற்றுக் கொண்டன.இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பும், இந்த விவகாரத்தில், பாக்., நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்காமல், மவுனம் காத்தது.

இந்த விவகாரத்தில், பாகிஸ்தான், சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டது, அந்நாட்டுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது.இதையடுத்து, காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்கும், கடைசி முயற்சியையும் பாக்., மேற்கொண்டது. காஷ்மீர் பற்றி விவாதிக்க, 'ஐ.நா., தொடர்ச்சி 11ம் பக்கம்பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தை கூட்ட வேண்டும்' என, பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது.

இதற்கு, பாதுகாப்பு கவுன்சிலில், நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றான சீனா மட்டுமே, வழக்கம் போல், பாக்.,குக்கு ஆதரவு தெரிவித்தது.இதைத் தொடர்ந்து, காஷ்மீர் பிரச்னையை, சர்வதேச பிரச்னையாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இழுக்கும் நடவடிக்கைகளை பாக்., தீவிரப்படுத்தியது. பாதுகாப்பு கவுன்சிலின், நிரந்தர உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளிடமும், தற்காலிக உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளிடமும், ஐ.நா.,வுக்கான பாக், சிறப்பு துாதர், பேசினார்.

இதற்கிடையில், இந்த விவகாரத்தில், இந்தியாவும் ராஜதந்திர நடவடிக்கைகளை எடுத்தது. ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர துாதர், அக்பருதீன், பல நாடுகளின் பிரதிநிதிகளிடம் பேசினார்.ஜம்மு - காஷ்மீர் பிரச்னை பற்றியும், அங்கு, சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதுஏன், என்பது பற்றியும் எடுத்துரைத்தார்.

மேலும், ஜம்மு - காஷ்மீர் விவகாரம், இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை என்பதை, ஆனித் தரமாக எடுத்தரைத்த அக்பருதீன், அங்கு, அமைதியை ஏற்படுத்தி, வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் விவரித்தார்.இதனால், பாகிஸ்தானுக்கு, சீனாவை தவிர, வேறு எந்த நாடும் ஆதரவு தெரிவிக்க முன்வரவில்லை. இதையடுத்து, அமெரிக்காவின் ஆதரவை பெறும் முயற்சியில், பாகிஸ்தான் ஈடுபட்டது.

பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் துவங்குவதற்கு முன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பாக்., பிரதமர் இம்ரான் கான் பேசினார். அப்போது, 'காஷ்மீர் விவகாரத்தில், இந்தியா அத்தமீறி செயல்படுகிறது' என, டிரம்பிடம் இம்ரான் புலம்பினார். அதற்கு, 'இந்தப் பிரச்னையை, இந்தியாவும், பாகிஸ்தானும், இரு தரப்பு பேச்சு வார்த்தை மூலமே தீர்த்து கொள்ள வேண்டும்' என, டிரம்ப், அறிவுரை கூறி, அதில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.

இதையடுத்து, அமெரிக்காவின், நியூயார்க் நகரில் உள்ள, ஐ.நா.,தலைமை அலுவலகத்தில், பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டம், இந்திய நேரப்படி, நேற்று முன்தினம் இரவு, 7:30 மணியளவில் துவங்கியது.இந்த கூட்டத்தில், அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நிரந்தர உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும், 10 தற்காலிக உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.எனினும், இந்த விவகாரத்தில் தொடர்புள்ள, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும், இந்த கூட்டத்தில் பங்கேற்க, அனுமதி வழங்கப்படவில்லை.

மேலும், இந்த கூட்டம், மூடிய அறைக்குள் ரகசியமாக நடத்தப்பட்டதால், கூட்டத்தில் நடந்த விபரங்கள் எதுவும் பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை.எனினும், பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், காஷ்மீர் விவகாரத்தில், இந்தியாவின் நியாயமான செயல்பாடுகளுக்கும், அதன் நிலைப்பாட்டுக்கும் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, காஷ்மீரின் வளர்ச்சிக்காக, இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

இதன் மூலம், இப்பிரச்னையில், பாகிஸ்தான் மற்றும் சீனா எடுத்த முயற்சிகள் தவிடு பொடியாக்கின.இந்தியா - பாகிஸ்தான் இடையே, 1971ல் போர் நடந்த பிறகு, காஷ்மீர் விவகாரம் பற்றி, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் ஆலோசித்தது. இப்போது, 48 ஆண்டுகளுக்கு பின், நேற்று முன்தினம், காஷ்மீர் பிரச்னை பற்றி, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் ஆலோசித்தது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவின் நிலைக்கு ஒப்புதல்பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்குப் பின், நிருபர்களிடம், ஐ.நா.,வுக்கான இந்திய துாதர்,அக்பருதீன் கூறியதாவது:ஜம்மு - காஷ்மீர் விவகாரம், இந்தியாவின் உள்நாட்டு விஷயம். இதில், மற்ற நாடுகள் தலையிட தேவையில்லை. இதைப் பற்றி, சர்வதேச அமைப்புகள் விவாதிக்கவும் தேவையில்லை.

காஷ்மீரின் நிர்வாக அமைப்புகளில் மாற்றம் செய்வது, இந்தியாவின் தனிப்பட்ட உரிமை. மக்களின் நலனுக்காக, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கும் உரிமை, இந்தியாவுக்கு எப்போதும் உண்டு.இந்த விவகாரத்தை, பாகிஸ்தானும், சீனாவும், மீண்டும் மீண்டும் எழுப்பி வருவது, கண்டிக்கத் தக்கது.காஷ்மீரில், இயல்புநிலை திரும்பவும், வளர்ச்சியை ஏற்படுத்தவும், இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் பாராட்டு தெரிவித்து, ஏற்று கொண்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவின் முயற்சிக்கு, உலக நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.


பாக்., நிருபருடன் கைகுலுக்கிய அக்பருதீன்ஐ.நா.,வுக்ககான, இந்தியாவின் நிரந்தர துாதர், அக்பருதீன், நிருபர்களை சந்தித்த போது, 'பாகிஸ்தானை சேர்ந்த, மூன்று நிருபர்கள் முதலில் கேள்வி கேட்கட்டும்' என்றார்.இதையடுத்து, பாக்., நிருபர், 'பாகிஸ்தானுடன், எப்போது பேச்சுவார்த்தையை துவக்குவீர்கள்' என, கேட்டார்.இதையடுத்து, கேள்வி கேட்ட நிருபர் அருகில் வந்த அக்பருதீன், அவரிடமும், மற்ற இரு பாக்., நிருபர்களுடன் கைகுலுக்கிய பின், 'சிம்லா ஒப்பந்தத்தில், இந்தியா உறுதியாக உள்ளது; எங்கள் நட்புறவுக்கு கரங்களை நீட்டியுள்ளோம், பாகிஸ்தானின் பதிலுக்காக காத்திருக்கிறோம்' என்றார்.

மற்றொரு பாக்., நிருபர், 'இரு அண்டை நாடுகளுடன், ஏன் தொடர்பு இல்லை. பேச்சுவார்த்தைக் கான கோரிக்கைக்கு, இந்தியா பதில் அளிக்காதது ஏன்' என, கேட்டார்.இதற்கு அக்பருதின், 'பேச்சுவார்த்தை நடக்க வேண்டுமானால், முதலில், பாக்., பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும். காஷ்மீரில், அபாயகரமான சூழ்நிலை உள்ளது போன்ற, பொய்யான தோற்றத்தை உருவாக்க, பாகிஸ்தான் முயற்சிக்கிறது. இந்தியாவுக்கு எதிராக, அந்நாட்டு தலைவர்கள், வன்முறையை தூண்ட முயற்சிக்கின்றனர். 'ஜிகாத்' நடத்த வேண்டும் என, கூறுகின்றனர். இந்தப் போக்கை பாகிஸ்தான் மாற்றிக் கொள்ளாதவரை, அதனுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியாது' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
21-ஆக-201919:13:00 IST Report Abuse
Sampath Kumar லால் பாதூர் சாஸ்திரி தொடக்கம் இந்திரா காந்தி வரை இதை சேய் முயற்சித்தார்கள் என்பதை வசதியாக மறந்து விட்டார்கள் மறதி நோய் இந்தியனின் வரம் அல்லவா
Rate this:
Cancel
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
18-ஆக-201920:45:01 IST Report Abuse
ராஜேஷ் National first
Rate this:
Cancel
K.GOPINATHRAJA - cuddalore,இந்தியா
18-ஆக-201916:55:59 IST Report Abuse
K.GOPINATHRAJA மத்தியில் கூட்டாட்சி (கூட்டுக்கொள்ளை ) மாநிலத்தில் சுயாட்சி (தனித்து கொள்ளை ) என்ற கொள்கை கொண்ட கலைஞரின் கட்சி காஷ்மீர் போலவே தமிழ்நாட்டுக்கு சிறப்பு அந்தஸ்து பெற்று தமிழ்நாட்டில் பரம்பரை பரம்பரையாக கொள்ளை கொள்ளலாம் என்று எண்ணி இருக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X