தவிக்கும் காங்கிரஸ் தலைவர்கள்

Updated : ஆக 18, 2019 | Added : ஆக 17, 2019 | கருத்துகள் (8)
Advertisement
delhi ush, காங்கிரஸ், சோனியா, சுஷ்மா, பா.ஜ., பாஜ, காங்., ராமர் கோவில், அயோத்தி, விஜயகுமார், காஷ்மீர்,

நான், காங்கிரஸ் கட்சியின் தலைவராக, மீண்டும் வர மாட்டேன் என, காங்., செயற்குழுவில், ராகுல் கறாராக சொன்ன பிறகு, சீனியர் காங்., தலைவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். கட்சி, ஒரு வழியாக தப்பித்தது என, கிண்டலடித்தனர். காரணம், ராகுல் தலைவராக இருந்த போது, இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார், வயதானவர்களை ஒதுக்கி வைத்தார்.இப்போது, சோனியா இடைக்கால தலைவராக உள்ளார். இதிலும் பிரச்னை இருக்கிறது. சோனியா, கட்சிக்காரர்கள் யாரையும் சந்திப்பதே இல்லை. மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பலர், சோனியாவை சந்திக்க, டில்லியில் காத்திருக்கின்றனர்.நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக, சோனியாவிடம் ஆலோசிக்க அவர்கள் விரும்புகின்றனர். ஆனால், இதுவரையிலும், சோனியாவிடமிருந்து எந்த பதிலும் இல்லையாம்.


தாய் வழியில் மகள்?

முன்னாள் மத்திய அமைச்சர், சுஷ்மா சுவராஜ் சமீபத்தில் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், பிரதமர், அமித் ஷா உட்பட அனைத்து பா.ஜ., தலைவர்களும் பங்கேற்றனர். சுஷ்மாவின் மகள், பன்சுரி, இந்நிகழ்ச்சியில் பேசினார். தன் குடும்பத்திற்கு, மோடி எவ்வளவு ஆதரவாக இருந்தார் என்றும், பா.ஜ., தலைவர்கள், தன் அம்மாவிற்கு எப்படியெல்லாம் உதவினார்கள் என்றும், ஒரு தேர்ந்த அரசியல்வாதி போல பேசினார்.சுஷ்மா உயிரோடு இருந்த வரை, பன்சுரி எந்தவோர் அரசியல் நிகழ்விலும் கலந்து கொண்டதில்லை; அரசியல்வாதிகளிடம் பேசியதும் இல்லை. அப்படிப்பட்டவர், தன் அம்மாவின் அஞ்சலி நிகழ்ச்சியில், சரளமாக பேசியது, அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. சுஷ்மா, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். அவருடைய, 25வது வயதில், ஹரியானாவின், அம்பாலா தொகுதியிலிருந்து, எம்.எல்.ஏ.,வாகி, தன் அரசியல் வாழ்க்கையை துவக்கியவர்.இந்த வருட இறுதியில், ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ., சார்பில், பன்சுரி, இம்மாநிலத்தில் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்கின்றனர், அதன் தலைவர்கள். பன்சுரியின் பேச்சு பிரதமர், மோடியையும், அமித் ஷாவையும் கவர்ந்துவிட்டதாம்.


துணை நிலை ஆளுநர் ஆவாரா விஜயகுமார்?


ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி போல, சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக இருக்கும். லடாக், சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக இருக்கும். சர்தார் வல்லபபாய் பட்டேலின் பிறந்த நாளான, அக்டோபர், 31 முதல், இந்த இரண்டு யூனியன் பிரதேசங்களும் இயங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இப்போது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கவர்னராக இருப்பவர், சத்யபால் மாலிக். ஆனால், அக்டோபர், 31ல், துணை நிலை ஆளுநர் தான், இந்த பதவியில் இருக்க வேண்டும் என்பதால், மாலிக் கவர்னராக தொடர மாட்டார்.வழக்கமாக, துணை நிலை ஆளுநர் பதவிக்கு, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் தான் நியமிக்கப்படுவார். ஜம்மு - காஷ்மீர், துணை நிலை ஆளுநர் பதவிக்கு, இரண்டு பெயர்கள், அடிபடுகின்றன. ஒருவர், நம்ம ஊர், முன்னாள், ஐ.பி.எஸ்., அதிகாரி விஜயகுமார். இப்போது இவர், ஜம்மு - காஷ்மீர் கவர்னரின் ஆலோசகராக இருக்கிறார். இன்னொருவர், தினேஷ் சர்மா. இவரும், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி தான். உளவுத்துறையின் தலைவராக பணியாற்றியவர்; ஜம்மு காஷ்மீர் விவகாரங்களை கையாண்டவர். விரைவில், இவர்களில் ஒருவரின் பெயரை, துணை நிலை ஆளுநராக, மத்திய அரசு அறிவிக்கும் என, சொல்லப்படுகிறது.


கடவுளுக்காக வாதாடும் இரு தமிழர்கள்


ராமர் பிறந்த அயோத்தியில், சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில், தினசரி நடைபெற்று வருகிறது. பரபரப்பான இந்த வழக்கின் தீர்ப்பு, நவம்பர், 17க்கு முன் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், இந்த வழக்கை விசாரிக்கும், அரசியல் சாசன அமர்வில் உள்ள தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், நவம்பர், 17ல் தான் ஓய்வு பெறுகிறார். எனவே, அதற்கு முன்பாக, அவர் தீர்ப்பளிக்க வேண்டும்.இந்த வழக்கில், ராமரும் ஒரு மனுதாரார். கடவுளுக்கும், அதாவது சிலைக்கும், தன்னை பாதுகாத்துகொள்வதற்கான உரிமை உள்ளது என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்து உள்ளதால், ராமர் தரப்பில், இரண்டு வழக்கறிஞர்கள் வாதாடி வருகின்றனர்.அவர்கள் இருவரும் தமிழர்கள். அவர்களில் ஒருவர், கே. பராசரன். மறைந்த, இந்திரா மற்றும் ராஜீவ் பிரதமராக பதவி வகித்த போது, அட்டர்னி ஜெனரலாக பணியாற்றிய பராசரனுக்கு, இப்போது, 91 வயதாகிறது. இந்து மதம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் கற்றுத் தெரிந்தவர். 'நீங்கள் உட்கார்ந்தே வாதாடலாம்' என, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் கூறியதையும் மறுத்து, இரண்டு நாட்களுக்கு மேலாக, நின்று கொண்டே வாதாடியவர்.வயதானதால் எந்த வழக்கையும் எடுத்துக் கொள்ளாமல், அயோத்தி வழக்கில் மட்டும் ஆஜராகி, 'இதுதான் என்னுடைய கடைசி வழக்கு; இதற்குப் பிறகு, சுப்ரீம் கோர்ட் பக்கம் வர மாட்டேன்' என, சொல்லிவிட்டார் பராசரன். ராமருக்காக வாதாடும் இன்னொரு தமிழர், சி.எஸ். வைத்தியநாதன். மூத்த வழக்கறிஞரான இவர், தமிழக அரசு சார்பாக, காவிரி உட்பட பல வழக்குகளில் வாதிட்டவர். 70 வயதை நெருங்கும் இவர், ஆறு மாதமாக, இரவு, பகலாக பல ஆவணங்களை புரட்டி, அயோத்தி வழக்கிற்காக தன்னை தயார் செய்தார். அயோத்தியில் கோவில் இருந்ததா என்பது குறித்த தொல்பொருள் துறையின் ஆய்வு அறிக்கை, இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டு யாத்ரீகர் யுவான் சுவாங் உட்பட பலரின் புத்தகங்களைப் படித்து, அவர்கள் அயோத்தி பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதையெல்லாம் குறிப்பெடுத்து, வாதாடிக்கொண்டிருக்கிறார் வைத்தியநாதன்.இந்த வழக்கின் தீர்ப்பு, இந்திய அரசியலில் பெரும் பரபரப்பையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ashak - jubail,சவுதி அரேபியா
24-ஆக-201904:08:13 IST Report Abuse
ashak மனிதன் எப்படி கடவுள் ஆவான்? ராமன் மன்னனே அல்லாது கடவுள் அல்ல, அதைத்தான் தமிழ் பழமொழி இப்படி சொல்கிறது " விண்டவர் கண்டிலர், கண்டவர் விண்டிலர் "
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramasamy - London,யுனைடெட் கிங்டம்
23-ஆக-201900:15:34 IST Report Abuse
Natarajan Ramasamy விஜயகுமார் மிக சரியான தேர்வாகும். முழு அதிகாரத்துடன் ,அவரை நியமித்தால் முழுமையான தீர்வு உண்டாகும். அரசியல் வாதிகளின் உதவியோடு வீரப்பன் கோலோச்சியபோது அடக்கியவர். அரசியல் வாதிகள் துணையுடன் கோலோச்சிய நக்ஸலைட்டுகளை ஒடுக்க அரசு இவரையே நாடியது. அவருடைய batch இல் அவருக்கு நிகராக சில அவருடைய நண்பர்களும் இருப்பார்கள் . எல்லோரையும் முழுமையாக உபயோகிக்க சரியான சந்தர்ப்பம்.
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
22-ஆக-201916:06:45 IST Report Abuse
RajanRajan மணிமேகலை முகபாவத்தை பார்க்கிறப்போ கட்சியை கலைத்துடலாமா என்னும் தீவிரவாத சிந்தனையில் இருக்கிறாப்புல இருக்கே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X