மிகவும் கஷ்டம்!

Added : ஆக 17, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 மிகவும் கஷ்டம்!

மிகவும் கஷ்டம்!

கங்கிரஸ் கட்சியை, நேரு - இந்திரா குடும்பத்தை சாராத ஒருவர், தலைமை ஏற்று நடத்துவது மிகவும் கஷ்டமானது. ஏனெனில், கட்சியில், அந்த குடும்பத்துக்கு தான், அதிக பொறுப்பு உள்ளது. பா.ஜ., போன்ற மதவாத கட்சியை எதிர்கொள்ள, காங்கிரஸ் போன்ற கொள்கை உறுதியுடைய கட்சியால் மட்டுமே முடியும்.ஆதிர் ரஞ்சன் சவுத்ரிலோக்சபா தலைவர், காங்.,
மந்தநிலை!

நாடு முழுவதும், பல்வேறு தொழில்கள் நசிந்து வருகின்றன. ஏற்றுமதி குறைந்துள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், விற்பனை ஆகாத நிலை உள்ளது. இதனால், உற்பத்தி நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளன. நாடு முழுவதும் பொருளாதார மந்தநிலை உருவாகிஉள்ளது. மத்திய அரசு, உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாயாவதிதலைவர், பகுஜன் சமாஜ்

கேடயமாக இருந்தது!

ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து, பயங்கரவாதிகளை பாதுகாக்கும் கேடயமாக இருந்தது. நாடு மற்றும் ஜம்மு - காஷ்மீர் நலன் கருதியே, சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு - காஷ்மீர் வளர்ச்சியடைய வேண்டும் என்பது தான், அரசின் எண்ணம். மத்திய அரசின் முடிவை, நாடு முழுவதும், அனைத்து தரப்பு மக்களும் வரவேற்றுள்ளனர்.ரவிசங்கர் பிரசாத்,மத்திய சட்ட அமைச்சர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18-ஆக-201904:45:52 IST Report Abuse
J.V. Iyer நல்ல, நேர்மையான, திறமையான, ஊழலற்ற ஆட்சி மத்தியில் நடை போடுகிறது. பாஜக அரசு பேசுவதெல்லாம் நாடு வளர்ச்சி, மக்கள் வளர்ச்சி, மக்கள் சந்தோஷம். நாட்டு வளர்ச்சியில் மேடு,பள்ளம் இருக்கத்தான் செய்யும். மக்கள் இதை உணரவேண்டும். இப்போது எந்தநாட்டில் வளர்ச்சி மேல்நோக்கி உள்ளது? அமெரிக்கா-சைனா உறவு மேம்பட்டால், அல்லது, ட்ரம்ப் கேழே இறங்கினால் உலக வளர்ச்சி மேன்மையுறும். பொறுத்திருப்போம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X