ஐதராபாத், :தெலுங்கானாவில், சுதந்திர தின விழாவில், சிறந்த கான்ஸ்டபிள் விருது வாங்கியவர், மறுநாளே லஞ்ச வழக்கில் சிக்கினார்.தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மெஹபூப் நகர், ஐ டவுன் காவல் நிலையத்தில், கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தவர், திருப்பதி ரெட்டி.சிறப்பாக பணியாற்றியதற்காக, கடந்த, 15ல் நடந்த சுதந்திர தின விழாவில், அவருக்கு, மாநில கலால் வரித் துறை அமைச்சர், சீனிவாஸ், 'சிறந்த கான்ஸ்டபிள்' விருதை வழங்கினார். மாவட்ட, எஸ்.பி. முன்னிலையில், இந்த விருதை, திருப்பதி ரெட்டியிடம் அமைச்சர் வழங்கினார்.விருது பெற்ற மறுநாளான நேற்று முன்தினம், திருப்பதி ரெட்டி லஞ்சப் புகாரில் சிக்கினார். இது பற்றிய விபரம்:ரமேஷ் என்பவர், லாரியில் மணல் ஏற்றிச் சென்றுக் கொண்டிருந்தார். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருப்பதி ரெட்டி, அவரை தடுத்து நிறுத்தினார். லாரியில், மணல் ஏற்றிச் செல்வதற்கான அனுமதி சான்றிதழ் உட்பட முறையான ஆவணங்கள், ரமேஷிடம் இருந்தன.எனினும், மணலை கடத்துவதாக குற்றம் சாட்டி, வழக்குப்பதிவு செய்யப்போவதாக, ரமேஷை திருப்பதி மிரட்டினார்; புகார் செய்யாமல் இருக்க, தனக்கு, 17 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என, கேட்டார்.இது பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசில், ரமேஷ் புகார் செய்தார். போலீசார் உத்தரவுப்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, திருப்பதியிடம், ரமேஷ நேற்று முன்தினம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த போலீசார், திருப்பதியை, கையும் களவுமாக கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE