எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

சவால்களை சமாளிப்பாரா சோனியா? காங்கிரஸ் நிர்வாகிகளிடம் பெரும் எதிர்பார்ப்பு

Updated : ஆக 18, 2019 | Added : ஆக 17, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
சவால், சமாளிப்பு, சோனியா, காங்கிரஸ், நிர்வாகி, எதிர்பார்ப்பு

தற்காலிக ஏற்பாடாக, காங்கிரஸ் தலைவர் பதவியை மீண்டும் ஏற்றுள்ள சோனியாவால், தற்போதைய அரசியல் களத்தில் உள்ள சவால்களை சமாளித்து, கட்சியை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல முடியுமா என்ற எதிர்பார்ப்பு, அந்த கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியால், காங்கிரஸ் தலைவர் பதவியை, அதிரடியாக ராஜினாமா செய்தார், ராகுல். கட்சி நிர்வாகிகள், எவ்வளவோ சமாதானப்படுத்தியும், தன் முடிவில், அவர் உறுதியாக இருந்ததால், புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.இதற்காக, சமீபத்தில், காங்கிரஸ் செயற்குழு கூட்டம், டில்லியில் கூடியது.

இதில், பல கட்டங்களாக நடத்திய ஆலோசனையின் அடிப்படையில், நேரு குடும்பத்தை சேர்ந்தவர்களை தவிர, வேறு யாரை தலைவராக நியமித்தாலும், கட்சி பிளவு படுவதை தவிர்க்க முடியாது என்பது தெரிந்தது.இதையடுத்து, தற்காலிக ஏற்பாடாக, 72 வயதான சோனியாவையே, மீண்டும் தலைவராக நியமித்துள்ளனர், கட்சி நிர்வாகிகள்.காங்., தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த அவர், 2004 - 14 வரை, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய காரணமாக இருந்தவர்.

உடல் நலக்குறைவு காரணமாக, தீவிர அரசியலில் இருந்து படிப்படியாக ஒதுங்கி, இரண்டு ஆண்டுகளுக்கு முன், தன் மகன் ராகுலிடம் கட்சி பொறுப்பை கொடுத்தார். தற்போது, மீண்டும் அவரின் தோள்களிலேயே, அந்த பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த முறை, சோனியா முன், பல்வேறு சவால்கள் உள்ளன.


சட்டசபை தேர்தல்


மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஹரியானா, டில்லி, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில், அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்கவுள்ளன. பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, அசுர பலத்துடன், மத்தியில் ஆட்சியில் உள்ள நிலையில், அவர்களை முறியடித்து, இந்த மாநிலங்களில், காங்கிரஸ் ஆட்சியை அமைக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பும், சவாலும், சோனியா முன் உள்ளது.

இதற்கு முன், ஐ.மு., கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக, சோனியா, திறம்பட செயல்பட்ட இருந்தாலும், இப்போது, அவருக்கு நெருக்கடி அதிகம் உள்ளது. மிகப் பெரிய பலத்துடன், எதிர்க்கட்சி கூட்டணியில் அங்கம் வகித்த, இடதுசாரி கட்சிகள், இப்போது, தோல்வி பாதையில் சிக்கி தவிக்கின்றன. இது தவிர, மாநில கட்சிகளின் தலைவர்களிடையே, கருத்து வேறுபாடு அதிகம் இருப்பதால், அவர்களை ஒருங்கிணைப்பது, தற்போதைய சூழ்நிலையில், சாதாரண விஷயமல்ல.

நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆட்சி தான் நடக்கிறது. மோடி - அமித் ஷா கூட்டணியின் அதிரடியான அரசியல் செயல்பாடுகளால் தான், இது, சாத்தியமானது. இந்த இரட்டையர் கூட்டணியை முறியடித்து, வெற்றி காண்பது, சோனியாவுக்கு, மிகப் பெரிய சவாலான விஷயமாக இருக்கும்.


தலைவர்கள் ஓட்டம்



லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின், பல மாநிலங்களிலும், காங்கிரஸ் கட்சியில் உள்ள முக்கிய தலைவர்கள், பா.ஜ.,வில் ஐக்கியமாகி விட்டனர். காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா கொறடா, புவனேஸ்வர் கலிடா, சமீபத்தில், பா.ஜ.,வில் இணைந்தார். இதுபோல், மேலும் பல தலைவர்கள், கட்சி தாவ தயாராகி வருகின்றனர்இவர்களை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பும், சோனியாவுக்கு உள்ளது.'நேரு குடும்பத்தினரை தவிர, வேறு யாருக்கும்,

காங்கிரஸ் தலைவர் பதவியை வகிக்க தகுதி இல்லையா' என, பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள், பிரசாரம் செய்கின்றன. ஆனால், நேரு குடும்பத்தை தவிர, வேறு யாரையாவது, தலைவராக நியமித்தால், கட்சியில் பிளவு ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்பது, அனைவருக்குமே தெரிந்த விஷயம்.இது தவிர, காங்கிரசில் உள்ள மூத்த நிர்வாகிகளை மீறி, எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலை, கட்சியில் உள்ளது.

கட்சியை அடி மட்டத்திலிருந்து பலப்படுத்த வேண்டிய அவசியமும் உள்ளது. பல மாநிலங்களில், காங்கிரசின் பூத் கமிட்டிகள் பலவீனமாக உள்ளன என்பது உள்ளிட்ட, பல சவால்கள், சோனியா முன் உள்ளதாக, காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.kausalya - Chennai,இந்தியா
18-ஆக-201917:16:11 IST Report Abuse
S.kausalya இந்த அம்மாவுக்கும் காங்கிரஸுக்கும் என்ன.சம்பந்தம்? யாராவது விளக்கம் சொல்லுங்களேன். நேரு குடும்பத்திற்கும் இந்த அம்மாவுக்கும் தான் சம்பந்தம். காங்கிரசின்.பாரம்பரியம் இவருக்கு எப்படி தெரியும்? Congress காரனை போல ஒரு வடி கட்டிய மக்கை பார்த்ததே இல்லை அக்கட்சியின் நிதி வலிமை தெரிந்து தான் இவர் இங்கு உள்ளார். அவரே வியந்து போய் இருப்பார் இந்திய மக்கள்.இவ்வளவு முட்டாள்களா என்று. இவர்களே வந்து கட்சிந்தலைமை பொறுப்பை கொடுக்கிறார்கள், கட்சி கஜானா சாவி கொடுக்கிறார்கள், என்ன ஒரு முட்டால் மக்கள் என்று வியந்து இருப்பார். அவரை இந்த கட்சி காரர்கள் தான் கட்சியை காப்பாற்ற வந்த தெய்வம் என்று கூட்டி வந்து, பண ஆசை, பதவி ஆசை கொடுத்து உள்ளனர் இதில் இப்போது சவால்களை சந்திப்பது போன்ற பெரிய பொறுப்பை இவரிடம் கொடுத்து என்ன செய்ய போகிறார் என்று காங்கிரசின் மன் மோகன் சிங் இல் இருந்து தொண்டன் வரை எதிர்பார்த்து உள்ளார்களாம். சிரிப்பு ஒரு பக்கம், வேதனை ஒரு பக்கம்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
18-ஆக-201911:49:42 IST Report Abuse
Lion Drsekar இவர்கள் எல்லோரும் என்றைக்காவது வாழ்க்கையில் சிரித்திருப்பார்களா என்று தோன்றுகிறது, எப்போதுமே பதவி, பதவி, பணம், பணம் இப்படியே இருந்தால் இவர்களை அந்த இறைவன்தான் காப்பாற்றவேண்டும், நம்மவர்கள் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் தங்களுக்கு எது தேவையோ அது கிடைத்தால் போதும் என்று வாழும் மக்கள், வெட்கம், மானம், ரோசம், தன்மானம், கடமை,கணியம், கட்டுப்பாடு, மனித நேயம் எதுவுமே இல்லாமல் தலை வெட்டிய கோழிபோல் எந்த நாட்டுக்காரனாக இருந்தாலும் கூட்டத்தோடு கூட்டமாக செல்வதையே தொழிலாகக் கொண்டு செயல்பட்டு வருவதால் நாடு, நாட்டு வளர்ச்சி, என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விட்டது, ஒவ்வொரு குடும்பமும் பிழைக்க எது வேண்டுமானாலும் செய்ய துணிந்து விட்டது இந்த இயக்கங்கள்,வந்தே மாதரம்
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
18-ஆக-201908:46:28 IST Report Abuse
RajanRajan இங்கே சமாளிப்பதற்கு என்று ஒன்றுமே இல்லையே. தேசிய குடும்ப கட்சி கூடாரம் தானா கலைஞ்சிடும். இனி மணிமேகலை பப்பு பப்பி எல்லோருக்கும் நிரந்தர ஒய்வு தான். அடுத்து அந்த சுடலை கொம்பன் குடும்ப கட்சி கலைக்க படும் விரைவில்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X