தீய சக்திகளை விரட்டுவதாக கூறி சித்ரவதை

Added : ஆக 17, 2019
Share
Advertisement
தானே, போதை மறு வாழ்வு மையம் நடத்தி, தீயசக்திகளை விரட்டுவதாக கூறி, நோயாளிகளை அடித்து சித்ரவதை செய்த, சகோதரர்கள் மூவருக்கு, ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து, தானே நீதிமன்றம் தீர்ப்பளித்தது,மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.மறு வாழ்வு மையம்இங்குள்ள, பால்கர் மாவட்டம், வடா பகுதியில், போதை மீட்பு மறுவாழ்வு

தானே, போதை மறு வாழ்வு மையம் நடத்தி, தீயசக்திகளை விரட்டுவதாக கூறி, நோயாளிகளை அடித்து சித்ரவதை செய்த, சகோதரர்கள் மூவருக்கு, ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து, தானே நீதிமன்றம் தீர்ப்பளித்தது,மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.மறு வாழ்வு மையம்இங்குள்ள, பால்கர் மாவட்டம், வடா பகுதியில், போதை மீட்பு மறுவாழ்வு மையம் ஒன்றை, சகோதரர்களான, காந்திலால் புருஷோத்தம் தேஷ்முக், 52, நந்தகுமார், 58, உமேஷ், 48 ஆகியோர் நடத்தி வந்தனர்.இந்த மையத்தில் சேர்க்கப்படும் நோயாளிகளை பிடித்துள்ள தீய சக்திகளை விரட்டுவதாக கூறி, சகோதரர்கள் மூன்று பேரும், அவர்களை கடுமையாக அடித்து சித்ரவதை செய்துள்ளனர். 'நாங்கள் சொல்வதை கேட்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திப்பீர்கள்' என, நோயாளிகளை மிரட்டியுள்ளனர்.பாதிக்கப்பட்ட நோயாளிகளின் குடும்பத்தினர் சிலர், இது பற்றி, கடந்த, 2015ல், போலீசில் புகார் செய்தனர்.போலீசார் நடத்திய விசாரணையில், சகோதரர்கள், எந்தவித அனுமதியும் பெறாமல், மையம் நடத்தி வந்தது தெரிந்தது,ரூ.௧.௨ லட்சம்இதையடுத்து, மையத்துக்கு, 'சீல்' வைத்த போலீசார், சகோதரர்கள் மூன்று பேரையும் கைது செய்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதி, சைலேந்திர டாம்பே, நேற்று முன்தினம் அளித்த தீர்ப்பில் கூறியதாவது:போதை பழக்கத்திலிருந்து மீட்பதாக கூறி, நோயாளிகளின் குடும்பத்திலிருந்து, பணம் வாங்கிக் கொண்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்காமல் சகோதரர்கள் மூவரும் ஏமாற்றியுள்ளது, ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், தீய சக்திகளை விரட்டுவதாக கூறி, நோயாளிகளை சித்ரவதை செய்துள்ளனர்.சகோதரர்கள் மூவரையும் குற்றவாளிகள் என அறிவித்து, அவர்களுக்கு, ஏழு ஆண்டு, கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், மூவருக்கும், தலா, 1.2 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X