அரசியல் செய்தி

தமிழ்நாடு

குலக்கல்வி திட்டம் திருமா கடும் எதிர்ப்பு

Added : ஆக 17, 2019 | கருத்துகள் (4)
Advertisement

சென்னை, ''ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முழுவதும் பனை விதைகள் ஊன்றும் திட்டம் செயல்படுத்தப்படும்'' என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி: செப். 17 வரை தேசிய கல்வி கொள்கையை எதிர்த்து தமிழகம் முழுவதும் பரப்புரை செய்ய உள்ளேன். பனை விதை ஊன்றும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முழுவதும் பனை விதைகளை ஊன்ற உள்ளோம்.தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மோடி அரசு 'ஒன்பதாம் வகுப்பிலிருந்து குலத்தொழில் கற்றுத் தரப்படும்' எனக் கூறியுள்ளது. மூன்றாம் வகுப்பு ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த கல்விக் கொள்கை வழிவகுக்கிறது. இதனால் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்கள் எண்ணிக்கைஅதிகரிக்கும். குலக்கல்வி திட்டத்தை மறைமுகமாக திணிக்கிற முயற்சி இது. மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை திணிக்க முயற்சிக்கின்றனர்.இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GOPALASAMY - bengaluru,இந்தியா
18-ஆக-201920:19:28 IST Report Abuse
GOPALASAMY 'ஒன்பதாம் வகுப்பிலிருந்து குலத்தொழில் கற்றுத் தரப்படும்' என்று எப்பொழுது எங்கு கூறி உள்ளது என்று சொன்னால் நன்றாக இருக்கும். அப்படி என்றால் கட்ட பஞ்சாயத்து செய்யும் கட்சினரின் வாரிசுகளுக்கு என்ன சொல்லி தருவார்கள் ? யாரோ வீசி எரியம் காசுக்காக எந்த விஷத்தை வேண்டுமானாலும் பரப்பும் அரசியல்வாதிகளின் வாரிசுகள் என்ன படிப்பார்கள் ? அல்லது ஐ டி ஐ நிறுவங்களை மூடி விடலாமா
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
18-ஆக-201919:41:11 IST Report Abuse
RajanRajan ஏம்பா நீ இப்போ இத்தனை பனங் கொட்டை நட்டு பனைமரம் வளர்கிற சரி. அந்த பனைஏறுறவங்க குலத்தொழில் வேண்டாம் என்று நீ போராடினால் ஏன் இத்தனை கொட்டை விதைப்பு படம் ஓட்டுற. இன்னிக்கு பனையேற எத்தினி பேர் இருக்கிறாங்கன்னு விரல் விட்டு எண்ணிவிடலாம். உன்னமாதிரி ஆளுங்களாலே தான் குலத்தொழில் சார்ந்த விவசாயமே அழிந்து விட்டது தேவையா உன்னை மாதிரி ஆளுங்க கட்சி இந்த நாட்டுக்கு. தேவையே இல்லை. பெருசா குலத்தொழில் பற்றி பேச வந்துட்டானுங்க. அங்கே ஒரு கூட்டம் லைசென்ஸ் வாங்கி சாராயம் காய்ச்சி காசு பார்க்கிறானுங்க இங்கே இயற்கையாக கள் இறக்க அனுமதி இல்லை. அதற்காக போராடுற உருப்படியான காரியம் பண்ண பாரு.
Rate this:
Share this comment
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
18-ஆக-201917:49:08 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan தமிழக மாணவர்களை முட்டாளாக்க நினைக்கிறான் . வருடாவருடம் தேர்வு வைப்பது மாணவர் அறிவை வளர்க்கத் தான். தேர்வில்லாததால் பட்டம் வாங்கிய முட்டாளுக்கு தேசிய கல்விக் கொள்கை என்றால் புரியுமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X