குலக்கல்வி திட்டம் திருமா கடும் எதிர்ப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

குலக்கல்வி திட்டம் திருமா கடும் எதிர்ப்பு

Added : ஆக 17, 2019 | கருத்துகள் (4)

சென்னை, ''ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முழுவதும் பனை விதைகள் ஊன்றும் திட்டம் செயல்படுத்தப்படும்'' என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி: செப். 17 வரை தேசிய கல்வி கொள்கையை எதிர்த்து தமிழகம் முழுவதும் பரப்புரை செய்ய உள்ளேன். பனை விதை ஊன்றும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முழுவதும் பனை விதைகளை ஊன்ற உள்ளோம்.தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மோடி அரசு 'ஒன்பதாம் வகுப்பிலிருந்து குலத்தொழில் கற்றுத் தரப்படும்' எனக் கூறியுள்ளது. மூன்றாம் வகுப்பு ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த கல்விக் கொள்கை வழிவகுக்கிறது. இதனால் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்கள் எண்ணிக்கைஅதிகரிக்கும். குலக்கல்வி திட்டத்தை மறைமுகமாக திணிக்கிற முயற்சி இது. மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை திணிக்க முயற்சிக்கின்றனர்.இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X