அரசியல் செய்தி

தமிழ்நாடு

கமலின் ஏரியா அரசியல் கட்சிக்கு வெற்றி தருமா

Updated : ஆக 18, 2019 | Added : ஆக 17, 2019 | கருத்துகள் (6)
Advertisement
கமல், ஏரியா அரசியல், கட்சி, வெற்றி தருமா

சென்னை: கிராம சபை வாயிலாக அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்த கமல் 'ஏரியா சபை' வழியாக சட்டசபை தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கி லோக்சபா தேர்தலை சந்தித்த கமல் அடுத்ததாக உள்ளாட்சி மற்றும் தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறார்.


அதிகாரம்



இதற்காக கட்சி நிர்வாக வட்டத்தை விரிவுப்படுத்தியுள்ள அவர் 'பொது மக்கள் யாராக இருந் தாலும் கட்சி நிர்வாகிகளை எளிதில் சந்திக்கலாம்' என அறிவித்துள்ளார்.இந்நிலையில் கட்சி ஆரம்பித்த புதிதில் கிராம சபை கூட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழகம் முழுக்க ஒவ்வொரு கிராமத்திலும் நேரடியாக களமிறங்கி மக்களை கவர்ந்தார். தற்போது அதே பாணியில் ஏரியா சபை கூட்டங்கள் நடத்த தயாராகி வருகிறார் கமல்.

சுதந்திர தினவிழா அன்று தன் கட்சி அலுவலகத்தில் மாதிரி ஏரியா சபை கூட்டத்தையும் கமல் நடத்தினார்.கர்நாடகா கேரளா மேற்கு வங்கத்தில் ஏரியா சபை கூட்டம் நடைமுறையில் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர் 'கிராம மக்களுக்கு அதிகாரம் தருவதை போல் நகர மக்களுக்கும் அதிகாரம் தர ஏரியா சபை கூட்டத்தை நடத்த வேண்டும்' என கோரி உள்ளார்.


விழிப்புணர்வு



இதற்கான சட்ட திருத்தம் 2010ம் ஆண்டிலேயே இயற்றப்பட்டது என்பதையும் கமல் மேற்கோள் காட்டியுள்ளார்.சுதந்திர தினத்தை அடுத்து அக். 2ம் தேதி கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. அப்போது ஏரியா சபை குறித்த விழிப்புணர்வை நகர்ப்புறங்களில் ஏற்படுத்த கமல் திட்டமிட்டு உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
20-ஆக-201922:26:39 IST Report Abuse
Rafi சினிமா அரசியல் வாதிகளில் இவருடைய அணுகுமுறை மக்களை அரவணைத்தே இருக்கின்றது. கொஞ்சம் காலம் பிடிக்கும். அரசியலில் வெற்றி பெற கூட்டணி அவசியம். ஓத்த கருத்துடைய கட்சியுடன் கூட்டு சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
18-ஆக-201914:58:27 IST Report Abuse
s.rajagopalan பிளான் நல்ல போடுறாரு. ...கட்சி நிர்வாகிகளை எளிதாக யார் வேண்டுமானாலும் சந்திக்கக்கலாம் .இன்றாரு ...சந்திக்கலாம்தான் ..கூட்டம் இருக்காதே ஓட்டு விழறதுதான் ....பெரிய சிக்கலா இருக்கும் போல் தெரியுதே ?
Rate this:
Share this comment
Cancel
swega - Dindigul,இந்தியா
18-ஆக-201911:01:21 IST Report Abuse
swega எந்த ஏரியா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X