பொது செய்தி

தமிழ்நாடு

பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் வருகிறது விருப்ப ஓய்வு

Updated : ஆக 18, 2019 | Added : ஆக 17, 2019 | கருத்துகள் (24)
Share
Advertisement
புதுடில்லி: 'விருப்ப ஓய்வு பெறுவதற்கான அறிவிப்புஇம்மாத இறுதியில் வெளியாகும்' என்ற எதிர்பார்ப்பில் பி.எஸ்.என்.எல்.அதிகாரிகள் உள்ளனர்.தனியார் நிறுவனங்களுக்கு இணையாக பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் நாடு முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் மேலான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். மொத்த வருவாயில்
பி.எஸ்.என்.எல்., நிறுவனம்,  விருப்ப ஓய்வு

புதுடில்லி: 'விருப்ப ஓய்வு பெறுவதற்கான அறிவிப்புஇம்மாத இறுதியில் வெளியாகும்' என்ற எதிர்பார்ப்பில் பி.எஸ்.என்.எல்.அதிகாரிகள் உள்ளனர்.

தனியார் நிறுவனங்களுக்கு இணையாக பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் நாடு முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் மேலான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். மொத்த வருவாயில் 65 சதவீதம் ஊழியர்கள் சம்பளத்திற்கு போய் விடுகிறது.

இதனால் பி.எஸ்.என்.எல். நிர்வாகம் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.எனவே ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கவும் ஓய்வூதிய வயதை 58 ஆக குறைக்கவும் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்கூறியதாவது: ஊதிய உயர்வை வழங்கவும் '4ஜி' அலைக்கற்றையை உடனடியாக வழங்கவும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் அடிக்கடிகோரிக்கை வைத்தனர்.இதனால் ஓய்வூதிய வயதை 58 ஆக குறைக்கவும் 56 வயதுக்கு மேல் உள்ளவர்களை விருப்ப ஓய்வில் வீட்டுக்குஅனுப்பவும் இந்த ஆண்டு துவக்கத்தில் கார்ப்பரேட் அலுவலகம் ஆலோசனை நடத்தியது.இந்த ஆலோசனை தற்போது முடிவாக மாறி உள்ளது. இதற்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
18-ஆக-201921:16:50 IST Report Abuse
தமிழ் மைந்தன் எங்கள் ஊரில் காங்கிரஸ் ஆட்சியில் டெலிபோன் இணைப்பு கொடுக்கப்பட்டது.......ஆனால் முதல் மாத பில் பல ஆயிரங்கள் எனவே அடுத்த மாதமே பலர் சரண்டர் செய்து விட்டனர்........கொஞ்சம் சுமாராக ஓடிக்கொண்டிருந்தது.........ஊழல்கம்பெனி வந்து இதில் கால் வைத்தது.....சர்வ நாசம்......மேலும் இட ஒதுக்கீட்டில் வந்த காங்கிரஸ் ஆட்கள்....அலுவலகமே வருவதில்லை.........எந்த புகாரையும் சரி செய்வதில்லை...........தற்போது செல்போன் கோபுரங்களுக்கு வழங்கும் டீசலைகூட திருடும் இட ஒதுக்கீடு அதிகாரிகளை நான் நேரில் பார்த்துள்ளேன்.......இன்றுவரை அரசு அலுவலகங்களில் பி.எஸ்.என்.மோடம் மட்டுமே உள்ளது......அப்புறம் உங்களை போன்ற ஊழல்கம்பெனி ஆட்கள் தவறாக உபயோகப்படுத்துகிறார்கள் என்பதால் உங்களை போன்ற நடுநிலை பள்ளிகளில் மோடத்தின் பாஸ்வேடு போடப்பட்டுள்ளது.........மேலும் தாங்கள் ரயிலில் போனதுண்டா?.......ரயில் நிலையங்களிலும்உள்ளது தெரியுமா?........அப்புறம் 2யில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்ய தெரியாத இந்த ஆட்களை வைத்துத்க்கொண்டு.....4ஜி/5ஜி க்கு ஆசைப்படும் ஏன்......உங்களுக்கு பிடித்த மாதிரி ஸ்டாலின் முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் போல?........முடவன் கொம்பு தேனுக்கு ஆசைபட்ட மாதிரி........அந்த 1760000000000 இருந்தால் சம்பளம் பென்சன் கூட கொடுக்கலாம்?........திருடியவன், அதை புடுங்கியவன் இனி கொடுக்கவா போறான்
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
18-ஆக-201920:56:41 IST Report Abuse
J.Isaac தனியாருக்கு தாரை வார்க்க திட்டமிட்டு பிஎஸ்என்எல்ஐ நஷ்டத்தில் இயங்க வைத்துவிட்டார்கள்.
Rate this:
Cancel
Kundalakesi - Coimbatore,இந்தியா
18-ஆக-201920:44:44 IST Report Abuse
Kundalakesi My family has 3 bsnl employee who crossed 50 years age. 1. they gave dob certificate where age is வ்ரோங் 2. They work only 2 hours a day and takes 2/3 days off every மோந்து 3. They work hard but it is stopped by lazy employees and union பெஒப்லே 4. Union people don't work any single minute.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X