அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க., கூட்டணி: வாசன்

Updated : ஆக 18, 2019 | Added : ஆக 17, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement
உள்ளாட்சி தேர்தல், அ.தி.மு.க., கூட்டணி, வாசன்

மதுரை:"தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி தொடரும்" என த.மா.கா., தலைவர் வாசன் தெரிவித்தார்.

மதுரையில் அக்கட்சியின் வட்டார, நகர், பேரூராட்சி தலைவர்கள் அரசியல் மாநாடு வாசன் தலைமையில் நடந்தது.நிருபர்களிடம் அவர் கூறியதாவது:சுதந்திரதின விழாவில் பிரதமர் மோடி திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றியதற்கு கட்சி சார்பில் வாழ்த்து தெரிவிக்கிறோம்.

நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றி விவசாயிகளின் பிரச்னை களுக்கு தீர்வுகாண வேண்டும். தமிழகத்தில் மழை நீர் சேமிப்பு திட்டத்தை கட்டாயப்படுத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க., வுடன் கூட்டணி தொடரும். இதுதொடர்பான தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டனஎன்றார்.

மாநாட்டில் மூத்த துணை தலைவர் ஞானதேசிகன், மதுரை நகர் தலைவர் சேதுராமன், மாவட்ட தலைவர்கள் தனுஷ்கோடி, காந்தி, முன்னாள் எம்.பி., ராம்பாபு, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ராஜேந்திரன், உடையப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
18-ஆக-201919:08:09 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் விருந்து பரிமாறுவதற்கு முன் இலையில் தண்ணி தெளிப்பார்கள். அதனால் வயிறு நிரம்புமுன்னு இவர் நினைத்துக் கொள்கிறார்.
Rate this:
Cancel
Rahim Gani - Karaikudi,இந்தியா
18-ஆக-201917:58:04 IST Report Abuse
Rahim Gani இனி நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன கவுண்டமணி ஜோக் நியாபகத்துக்கு வந்துச்சுங்கோவ்......
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
18-ஆக-201917:37:43 IST Report Abuse
Siva என்னத்த சொல்ல... கட்சி தலைவர் வாசன் .......ஹாஹாஹா ஹாஹாஹா.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X