பொது செய்தி

தமிழ்நாடு

நாகரூத்தில் அமைச்சர் ஆய்வு வீடு கட்டிக்கொடுப்பதாக உறுதி

Added : ஆக 17, 2019
Share
Advertisement

ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த சர்க்கார்பதி நாகரூத்து மலைக்கிராமத்தில், மழையால் ஏற்பட்ட சேதத்தை, உள்ளாட்சித்துறை அமைச்சர் பார்வையிட்டார்.பொள்ளாச்சி அடுத்த சர்க்கார்பதி பவர்ஹவுஸ் அருகே, 'நாகரூத்து 2' என்ற பழங்குடியினர் செட்டில்மென்டில், 22 குடிசைகளில், 80க்கும் மேற்பட்ட பழங்குடியினர் வசித்து வந்தனர்.
கடந்த, 8ம் தேதி இரவு, காண்டூர் கால்வாயில் பாறை, மண் விழுந்து அடைப்பு ஏற்பட்டு, வெள்ளம் ஏற்பட்டத்தில், குடிசைகள் அடித்து செல்லப்பட்டன. குடியிருப்புகளை இழந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வருவாய்த்துறையினர், அரசியல்கட்சியினர் நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர்.இந்நிலையில், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, சேதமடைந்த குடிசைகள், காண்டூர் கால்வாய் சீரமைப்பு பணிகளை, நேற்று பார்வையிட்டு, பழங்குடியினருக்கு ஆறுதல் தெரிவித்தார். உணவுப்பொருட்கள், உடைகள் வழங்கப்பட்டன.
துணை சபாநாயகர் ஜெயராமன், வால்பாறை எம்.எல்.ஏ., கஸ்துாரி, பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார், உதவி வன பாதுகாவலர் செல்வம், வனச்சரக அலுவலர் காசிலிங்கம் உடனிருந்தனர். பாதுகாப்பான கான்கிரீட் தொகுப்பு வீடுகள் கட்டித்தருவதாக, பழங்குடியினரிடம் அமைச்சர் உறுதியளித்தார்.திருமூர்த்தி பாசனத்துக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படாமல் இருக்க, காண்டூர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு, சிதிலமடைந்த பகுதிகளை, போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X