பொது செய்தி

தமிழ்நாடு

தென்னைக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு அழைப்பு

Added : ஆக 17, 2019
Share
Advertisement

ராமநாதபுரம் : அவர் கூறியிருப்பதாவது: உச்சிப்புளி வட்டாரத்தில் 3,635 எக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வெள்ளம், புயல், வறட்சி , பூச்சி, நோய் தாக்குதலால் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டால் பயிர்காப்பீடு திட்டத்தில் இழப்பீடு வழங்கப்படும். ஆண்டுக்கு 30 காய்களுக்கு மேல் மகசூல் தரக்கூடிய மரங்கள், குட்டை மற்றும் ஒட்டு ரகங்கள் 4ம் ஆண்டு முதலும், நெட்டை ரகங்கள் 7ம் ஆண்டு முதல் 60 ஆண்டுகள் வரை காப்பீடு செய்யலாம். ஒரு எக்டேருக்கு 175 மரங்கள் காப்பீடு செய்ய முடியும்.

காப்பீடு செய்த தென்னை மரங்களை வண்ணம் பூசி 1,2,3 என எண்கள் குறிக்க வேண்டும். விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள மரங்களின் எண்ணிக்கை, வயது, தற்போதைய நிலை பற்றிய சுய உறுதி முன்மொழிவு அளிக்க வேண்டும். தென்னை விவசாயிகள் உச்சிப்புளி வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி முன்மொழிவு படிவத்தை பெற்று பூர்த்தி செய்து பிரிமியத் தொகையை வங்கி வரைவோலையாக எடுத்து தென்னை சாகுபடி ஆதாரத்துடன் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

நான்கு அல்லது 7 வயது முதல் 15 வயது வரை உள்ள வளமான காய்க்கும் தென்னை மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு 2.25 ரூபாயும், 16 வயது முதல் 60 வயது மரங்களுக்கு 3.50 ரூபாய் வீதம் பிரிமியம் செலுத்த வேண்டும். காப்பீடு செய்யப்பட்ட மரங்கள் குறைந்தது 4 மாதங்களாவது பாதிக்கப்பட்டிருந்தால் வேளாண்துறை அதிகாரிகள் அல்லது இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் (அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா) அதிகாரிகள் மதிப்பீடு செய்து சான்று செய்த பின் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை வேளாண் அதிகாரிகள் முன்னிலையில் வெட்டி நீக்க வேண்டும். வெட்டாமல் விட்டால் நஷ்ட ஈட்டில் 50 சதவீதம் மட்டுமே பெற தகுதியுடையவராவர். மேலும் விவரங்களுக்கு உச்சிப்புளி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X