அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிவகங்கை - சென்னைக்கு 2 புதிய விரைவுப்பேருந்து

Added : ஆக 18, 2019
Advertisement

சிவகங்கை : சிவகங்கையில் இருந்து சென்னைக்கு இரண்டு புதிய அரசு விரைவுப்பேருந்துகள் துவக்கப்பட்டன.காரைக்குடி மண்டலம் சிவகங்கை அரசுப்போக்குவரத்துக்கழக பணிமனை மூலம் சிவகங்கையில் இருந்து சென்னைக்கு படுக்கை வசதியுடன் கூடிய இரண்டு புதிய அரசு விரைவுப்பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்கான துவக்க விழா சிவகங்கை பஸ்நிலையத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடந்தது. அமைச்சர் பாஸ்கரன் கொடியசைத்து பேருந்துகளை துவக்கி வைத்தார். இப்பேருந்தில் உட்கார்ந்து பயணிக்க சாதாரண கட்டணமாக ரூ.470 வசூலிக்கப்படும்.படுக்கை வசதியுடன் பயணம் செய்வதற்கு திங்கள் முதல் வியாழன் வரை சலுகை கட்டணமாக ரூ. 635 ம், வெள்ளி, சனி, ஞாயிறு கிழமை களில் ரூ. 730 ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

நிகழ்ச்சியில் கோட்ட மேலாளர் அழகர்சாமி, காரைக்குடி அரசு விரைவுப்பேருந்து கிளை மேலாளர் முருகேசன், சிவகங்கை கிளை மேலாளர் முத்துராமன், கண்காணிப்பு அலுவலர் தமிழ்ச்செல்வன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X