பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சி அத்தி வரதர் வைபவம் நிறைவு

Updated : ஆக 18, 2019 | Added : ஆக 18, 2019 | கருத்துகள் (50)
Advertisement

காஞ்சிபுரம் : காஞ்சி அத்தி வரதர் வைபவம் நேற்றுடன் நிறைவு பெற்றது. வரதராஜ பெருமாள் கோவிலில் அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் வைப்பதற்கான சடங்குகள் முடிந்து அத்தி வரதரை வைத்தனர். இன்று முதல் வரதராஜப் பெருமாள் கோவிலில் வழக்கமான வழிபாடு நடைபெறும் என கலெக்டர் பொன்னையா தெரிவித்தார்.


காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் ஜூலை 1ம் தேதி முதல் அத்தி வரதர் வைபவம் நடைபெற்று வந்தது. இதில் அத்தி வரதர் சயன கோலத்தில் 31 நாட்களும் நின்ற கோலத்தில் 16 நாட்களும் பொது மக்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் முதல் பொதுமக்கள் தரிசனம் நிறுத்தப்பட்டது.

வரதராஜ பெருமாள் கோவில் மேற்கு ராஜகோபுரம் நுழைவு வழியில் தரிசனத்திற்கு செல்வதற்கு வசதியாக தற்காலிக பாலம் அமைக்கப்பட்டதை நேற்று மதியம் முதல் அகற்றும் பணி நடந்தது. அத்தி வரதர் வைபவத்தில் பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க செட்டித் தெரு முதல் ரங்கசாமி குளம் வரை சாலையில் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தன. அவற்றையும் நேற்று அகற்றினர்.
Advertisement


கோவிலை சுற்றியுள்ள தெருக்களில் அமைக்கப்பட்ட தடுப்புகள் இன்னும் அகற்றப்படவில்லை. இருந்தாலும் அந்த தெருக்கள் நேற்று தான் அமைதியாக காணப்பட்டன. நேற்று காலை முதல் பொதுமக்களை யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. அத்தி வரதரை அனந்தசரஸ் குளம் நீராழி மண்டபத்தில் வைப்பதற்கான சடங்குகள் நடைபெற்றன. அத்தி வரதருக்கு காலை மாலையில் பூஜைகள் செய்யப்பட்டன.

அடுத்த 40 ஆண்டுகளுக்கு சிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அத்தி வரதருக்கு மூலிகைகள் கலந்த தைலகாப்பு சாத்தப்பட்டது. காஞ்சி மாவட்ட கலெக்டர் பொன்னையா பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: காஞ்சி அத்தி வரதர் வைபவத்தில் பணிபுரிந்த அனைத்து துறை அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். துப்புரவு பணியாளர்களுக்கு இன்னும் இரண்டு தினங்கள் பணி நீடிக்கும். போக்குவரத்து மாற்றத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து பணிகளும் முழுமையாக சீரமைக்க 15 நாட்கள் ஆகும். இந்த வைபவத்தின் போது போலி 'டோனர்' பாஸ் அச்சடித்ததாக ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று முதல் கோவிலில் வழக்கமான சுவாமி வழிபாடு நடைபெறும். காஞ்சிபுரம் நகர் பகுதியில் இன்று முதல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். இதுவரை 1 கோடியே 7500 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். மாலையில் வரதராஜப் பெருமாள் வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அத்தி வரதரை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக வரதராஜப் பெருமாள் புறப்பாடு நடைபெற்றதால் சுவாமி தரிசனத்திற்காக ஏராளமான மக்கள் கோவிலுக்குள் செல்ல முயன்றனர். ஆனால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.


நேற்று இரவு 10:00 மணிக்கு அத்தி வரதரை நீராழி மண்டபத்தில் வைப்பதற்கான சாஸ்திரங்கள் முடிந்ததும் வசந்த மண்டபத்தில் இருந்து கொண்டு சென்று அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் நள்ளிரவு 12.10 மணிக்கு சயன கோலத்தில் வைத்தனர்.
இதற்கு பின் 40 ஆண்டுகள் கழித்து 2059ம் ஆண்டு தான் அத்தி வரதர் தரிசனம் கிடைக்கும்.

Advertisement
வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RM -  ( Posted via: Dinamalar Android App )
18-ஆக-201920:55:03 IST Report Abuse
RM Mana niraivu.!
Rate this:
Share this comment
Cancel
vidhura - chennai,இந்தியா
18-ஆக-201919:44:08 IST Report Abuse
vidhura ஒரு சில வினாடிகள் தரிசனம் செய்த நமக்கு ..இவரின் பிரிவு மனதை கனக்க செய்கிறது .... 3 முறை முயன்று , 5 மணிநேரம் காத்து , பல சிரமங்களுக்கு ஆளானாலும் , அவரின் தரிசனம் எல்லா துன்பங்களும் போக்கி , ஒரு நிறைவை கொடுத்தது .... ..பெரியோர்கள் ...கண்ணனின் அவதாரம் முடிந்து , அர்ஜுனன் வந்து தர்மரிடம் கதறுவதை, ....ராமா அவதாரம் முடிந்த போது , அயோத்தி மக்கள் அவருடன் சரயு நதியில் இறங்கியதையும் ...சொல்லுவதை கேட்டு ....கண்ணீர் விட்ட நாட்கள் உண்டு ......அதே மாதிரி ஒரு அனுபவம். ....இறைவனுக்கு எல்லோரும் சமமே ....இருந்த இடத்தில் அத்தி வரதரை நினைத்து ...ஏங்கியவர்களையும் அவர் அருள் காக்கும் ......நமது தமிழகத்தில் மக்களை .....சினிமா , டிவி, இன்டர்நெட், பத்திரிகை என்ற மாய வலைகளில் இருந்து மீட்கவும்.....உண்மையை உணர்ந்து ....இறை தன்மையை ஒவ்வொருவரும் உணரவும் ......மற்றவர்களின் எண்ணங்களில் விஷத்தை விதைக்கும் பதர்களையும்.......திருத்தி ஆட்கொள்ளவும் வேண்டுவோம் .....எல்லோரும் இன்புற்று இருப்பது அன்றி வேறொன்றும் வேண்டாம் ..
Rate this:
Share this comment
Cancel
Mal - Madurai,இந்தியா
18-ஆக-201915:14:19 IST Report Abuse
Mal Well.... Many people have written about the beauty of Athi varathar, it's really a true feeling. What a face ? What a divinity... I really have to thank Dinamalar for the photos because I feel Athi varathar still resides in those photos in all our homes .. I even have his face as mobile wall paper... What a divine face... Well about the money gained by government, Don't worry, gods calculations we won't understand... He will get in back if they don't sp it for the welfare of Hindu temples... in 1951, missionaries set fire to aiyappa temple ..and Congress didn't bother to investigate... And communists said that they will look into it and people voted for them...but even communists didn't do anything about that...now after all these years of patient waiting, communists are getting eradicated by aiyappa again.... Though it hurt many aiyappa devotees it was for a great cause.. Likewise I, as one among many of the true representatives of pure Hindu devotees, say with full Bhakthi, whoever has looted, is looting or plan to loot Hindu temple income , lands or treasures will face the consequences (be it government looting temples n funding other religious buildings and functions) and will be punished and whatever they looted be brought back to the same temples.... Natural calamities results only in those places where temples are looted... Government is forced to sp again to reconstruct for what they looted from temples... India was prosperous in those days only because temples were taken care of by kings... Financial crisis atfects a place/country only because of mismanagement of temples and their properties...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X