பொது செய்தி

இந்தியா

ஜெட்லி கவலைக்கிடம்

Updated : ஆக 18, 2019 | Added : ஆக 18, 2019 | கருத்துகள் (23)
Advertisement
ஜெட்லி கவலைக்கிடம்

புதுடில்லி, : டில்லி 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி பியுஷ் கோயல் மருத்துவமனைக்கு சென்று அவரது உடல் நிலை குறித்து விசாரித்தனர்.பா.ஜ. மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜெட்லிக்கு 66 கடந்த ஆண்டு மே மாதம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின் அவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை.





கடந்த பிப். 1ல் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டை கூட ஜெட்லிக்கு பதில் அமைச்சர் பியூஸ் கோயல் தான் தாக்கல் செய்தார். உடல்நலக்குறைவை காரணம் காட்டி கடந்த ஏப்ரல் - மே மாதத்தில் நடந்த லோக்சபாதேர்தலிலும் அவர் போட்டியிடவில்லை.இந்நிலையில் 9-ம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார். நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகதகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் இது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி பியுஷ் கோயல் ஹர்ஷ் வர்தன் விமானப்படை தலைமை தளபதி பிரேந்தர் சிங் தனோவா காங். தலைவர்கள் அபிஷேக் சிங்வி ஜோதிராதித்யா சிந்தியா பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோர் சென்று அருண் ஜெட்லியின் உடல் நிலை பற்றி விசாரித்தனர்.


Advertisement


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RM -  ( Posted via: Dinamalar Android App )
18-ஆக-201920:45:08 IST Report Abuse
RM whether you like him or not ,he is counting his minutes. Say some thing good for his recovery .
Rate this:
Share this comment
Cancel
சீனு, கூடுவாஞ்சேரி ஜேட்லி மருத்துவமனையில் அனுமதித்த செய்தி வந்ததிலிருந்து இன்று வரை திரு சுந்தரம் மிகவும் சுறுசுறுப்பாக பதிவுகள் இட்டுள்ளார். இன்று நான் நாளை நீ என்ற தத்துவம் அறியாதவர் போல. அது தான் உலக நியதி. இதில் விதிவிலக்கு இல்லை. ஜேட்லியின் நடவடிக்கைகளால் மிகவும் பாதிக்கப்பட்டவர் போல தோன்றுகிறது. வருத்தம் தான். ஜேட்லியின் நடவடிக்கைக்களை பாராட்டுபவர்களும் உண்டு. பூனைக் கண்ணை மூடினால் உலகம் அதற்கு மட்டுமே இருட்டு. மற்றவர்களுக்கு அல்ல.
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
18-ஆக-201914:37:54 IST Report Abuse
சுந்தரம் கலைஞரின் மரணத்திற்குப்பின் அவருக்கு பாரத ரத்னம் வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தது பாஜக. இதில்தான் உங்களுக்கும் எனக்கும் முரண்பட்டு....
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
18-ஆக-201914:42:00 IST Report Abuse
சுந்தரம் இதே அருண் ஜெட்லீ எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது பெட்ரோல் டீசல் விலைகளை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்தால்பொருளாதாரம் பாதிக்கப்படும் இரண்டு மாதம் அல்லதுமூன்று மாதத்துக்கு ஒரு முறைதான் நிர்ணயம் செய்யவேண்டும் என்று பேசினார். அத்துடன் அப்படி நிர்ணயம் செய்வது அரசாகத்தான் இருக்கவேண்டும் எண்ணை கம்பெனிகள் அல்ல என்றார். ஆனால் இவர் ஆளும் கட்சி பக்கம் வந்த பின்னர்?...
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
18-ஆக-201916:58:34 IST Report Abuse
சுந்தரம் சித்தராமையா மகன் மரணத்துக்கு சாபம் காரணம் என்று முரசொலித்தது பாஜக. அதையும் தவறு என்று இன்றுவரை நீங்களும் உங்கள் கட்சியும் ஒப்புக்கொள்ளவில்லை. அதே நேரம் உங்கள் கட்சியை சார்ந்த ஒருவருக்கு மரணம் நேரிடுகையில் மற்றவர்கள் அப்படி சொல்லிக்காட்டக்கூடாது என்கிறீர்கள். இது என்ன நியாயம்?...
Rate this:
Share this comment
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
18-ஆக-201912:54:27 IST Report Abuse
RM God bless Jatleyji.!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X