மாலே: சார்க் உறுப்பு நாடுகளில் சுற்றுலாத்துறையில் சிறந்த நாடான, மாலத்தீவில் அதிபர் முகமது நஷீத் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் கலவரம் நடந்தது.கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸôர் தடியடி நடத்தியும் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். இதில் பலர் காயம் அடைந்தனர். மாலத்தீவுகளில் அதிபராக முகமது நஷீதின் பதவி வகித்து வருகிறார். தற்போது இவரது நிர்வாகத் பதவி விலக வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்கள் மீது போலீஸôர், தடியடி நடத்தினர். ஈடுபட்டவர்கள் போலீஸôர் மீது கற்களை வீசி தாக்க முயன்றனர். பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கவும் அவர்கள் முயன்றனர். இவ்வாறு வன்முறையில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்' என காவல் துறை செய்தித் தொடர்பாளர் அகமது ஷியாம் கூறினார். இந்நாட்டின் பொருளாதாரம் சுற்றுலாத் துறையைச் சார்ந்தே உள்ளது.