ஒபாமா போட்டார் கையெழுத்து., முடிந்தது ஒசாமா தலைஎழுத்து; அமெரிக்கா முன்னேற்பாடு பிளான்

Updated : மே 02, 2011 | Added : மே 02, 2011 | கருத்துகள் (209) | |
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவின் சிம்மசொப்பனமாக விளங்கிய ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அமெரிக்க உளவுப்படையினரின் அதிரடி ஆப்ரேஷன் திட்டத்தில் குறி வைத்து காலி செய்யப்பட்டான். அமெரிக்காவின் நீண்டகால ஆசையும், முக்கிய நோக்கமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவரது பலி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் பராக்ஒபாமா டி.வி.,யில் தோன்றி அறிவித்தார்.
World's, most, wanted,terrorist,Osama,bin Laden, dead, US media., Osama Bin Laden, AlQaeda, dead, America, ஒசாமா, அமெரிக்கா, பயங்கரவாதி,பலி

வாஷிங்டன்: அமெரிக்காவின் சிம்மசொப்பனமாக விளங்கிய ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அமெரிக்க உளவுப்படையினரின் அதிரடி ஆப்ரேஷன் திட்டத்தில் குறி வைத்து காலி செய்யப்பட்டான். அமெரிக்காவின் நீண்டகால ஆசையும், முக்கிய நோக்கமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவரது பலி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் பராக்ஒபாமா டி.வி.,யில் தோன்றி அறிவித்தார்.

சவுதியில் பிறந்து மதவாதியான ஒசாமா பின்லேடன் பயங்கரவாத அமைப்பான அல்குவைதாவின் தலைவரானான். இவனுக்கு வயது 54. ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு பயங்கரவாத அமைப்பை உலகமே கண்டு அச்சுறும் வகையில் மிக ரகசியமாக நடத்தி வந்தான். இவனது அமைப்பில் உள்ளவர்கள் தற்கொலை படை தாக்குதல் நடத்துவதில் கில்லாடிகள். அமெரிக்காவே எங்கள் எதிரி என்றும், அவர்களுக்கு எதிராகவே எங்களின் போர் நடக்கும் என ஒசாமா கூறி வந்தான்.


கடந்த 2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் தேதி அமெரிக்காவின் புகழ்பெற்ற வர்த்தக இரட்டை கோபுரத்தை விமானத்தை கொண்டு மோதி தூள், தூளாக்கினான். இதில் அமெரிக்கா நிலைகுலைந்து பெரும் அழிவை சந்தித்தது. ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இந்த நாள் முதல் சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தான் ஒசாமா .


இவனை உயிருடன் பிடித்து சட்டத்தின் முன்நிறுத்துவோம் என அமெரிக்க அதிபர்கள் புஷ், பராக்ஒபாமா உறுதியாக சொல்லி வந்தனர். ஒசாமா பாகிஸ்தான் பகுதிகளில்தான் பதுங்கி இருப்பான் என அமெரிக்க அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், உயர் அதிகாரிகள் கூறி வந்தனர். ( பாகிஸ்தான் இதனை மறுத்து வந்தது ) ஒசாமாவை பிடிப்பதே முக்கியப்பணியாக இருக்கும் என்றனர். இதனையடுத்து இந்த பகுதிகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தன.


ஒசாமாவின் வீடியோ காட்சிகள் அவ்வப்போது ஒளிபரப்பாகி வந்தன. இந்நிலையில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டான் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது. பல முறை ஒசாமா கொல்லப்பட்டான் என்ற செய்தி வருவதும், இதனை அல்குவைதா மறுப்பதும் நடந்திருக்கிறது. ஆனால் இதுவரை இன்றைய ஒசாமா பலி குறித்து அல்குவைதா அமைப்பினர் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.


இந்த முறை இவனது உடலை டி.என்.ஏ., டெஸ்ட் மூலம் ஒசாமாதான் என்று உறுதி செய்யப்பட்டதாக அமெரிக்க மத்திய உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. இவன் கொல்லப்பட்ட இன்றைய நாள் அமெரிக்காவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான நாள் என அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ்சின் தலைமை அதிகாரி ஆண்டிகார்ட்டு கூறியுள்ளார்.


ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டது எப்படி? : பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் அருகே 150 கி.மீட்டர் தொலைவில் அபாட்டாபாத் நகரில் பின்லேடன் பதுங்கி இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் மாற்று உடையில் சென்று கண்காணித்து இவனை எப்படி கொல்வது என திட்டமிடப்பட்டது.


இதனையடுத்து உளவு துறை அதிகாரிகள் ஹெலிகாப்டரில் இந்த பங்களா மேல் பறந்தபடி தாக்குதல் நடத்தி ஒசாமாவை கொன்றனர். இவருடன் இருந்த சிலரும் இறந்திருக்கலாம் என தெரிகிறது. இதில் பாகிஸ்தான் உதவியை அமெரிக்கா நாடவில்லை. ஒரு வாரத்தில் இந்த ஆப்ரேஷன் கச்சிதமாக முடிக்கப்பட்டது. எப்போதும் வனப்பகுதி , மலைப்பள்ளத்தாக்கில்தான் ஒசாமா பதுங்கி இருப்பான் என்ற செய்தியைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம் இந்தமுறை இஸ்லாமாபாத் நகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் ஒசாமா தங்கியிருந்திருக்கிறான். இந்த பண்ணை வீட்டின் வெளியே ஒசாமா பிணமானான். அமெரிக்காவின் முக்கியப்பணி முடிந்தது.


அதிபர் பராக் ஒபாமா மகிழ்ச்சி: பின்லேடன் இறந்ததகவலை அமெரிக்க அதிபர் ஒபாமா உறுதி செய்தார். நாட்டு மக்களுக்கு டி.வி., மூலம் அறிவித்த போது அமெரிக்காவின் நீண்டகால ஆசை நிறைவேறியிருக்கிறது என்றும், நீதி நிலைநாட்டப்பட்டிருப்பதாகவும் கூறினார். அவர் மேலும் கூறுகையில், 10 ஆண்டு காலத்துக்கும் மேலாக ஒசாமா பின்லேடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் , உளவு அதிகாரிகளுக்கு அமெரிக்கா மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.


இந்த வெற்றி செப்டம்பர் 11ம் தேதி இரட்டைக் கோபுர தாக்குதலில் பலியான அப்பாவி மக்களின் ஆத்ம சாந்திக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. அந்த பயங்கரவாத தாக்குதலில் உற்றார் , உறவினர்களை பலி கொடுத்த அமெரிக்க குடும்பங்களை மறந்து விடவில்லை. இந்த தருணத்தில் அவர்களை நினைவு கூர்கிறோம். அல்குவைதாவை அழிக்கும் பணி தொடர்ந்து நடக்கும். இத்துடன் முடிவதில்லை. இவ்வாறு ஒபாமா கூறினார்.


ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட தகவல் கிடைத்ததும் அமெரிக்கர்கள் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். வீதிகளில் நாட்டுக்கொடியை ‌கையில் ஏந்தி கொண்டு வலம் வருகின்றனர்.இந்தியா பாகிஸ்தானுக்கு கண்டனம் : பின்லேடன் கொல்லப்பட்ட சம்பவம் மூலம் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் வழங்கியது அப்பட்டமாக தெரிகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில் ; மும்பை தாக்குதலில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளும் பாகிஸ்தானில்தானனில் உள்ளனர் அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.


ஒபாமா கையெழுத்து- ஒசாமா தலை எழுத்து: சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கொலை செய்ய ஏப்ரல் 29ம் தேதியன்று அமெரிக்க அதிபர் ஒபாமா கையெழுத்திட்டுள்ளார். ஆகஸ்ட் மாதம் முத‌ல் திட்டம் தீட்டி, நேர்த்தியாக அதை வழிநடத்திச் சென்ற அமெரிக்கா, எப்ரல் 29ம் தேதியன்று ஒசாமாவை கொல்ல அமெரிக்க ராணுவத்துக்கு அனுமதி அளித்துள்ளது. அலபாமாவுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த அதிபர் ஒபாமாவுக்கு, பாகிஸ்தானில் இருந்த அமெரிக்க உளவு அதிகாரிகள் ஒசாமாவை நெருங்கி விட்ட செய்தியை கூறினர். அதனை கேட்ட ஒபாமா, ஒசாமாவை கொன்று விடுமாறு உத்தரவிட்டார்.


தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாம் டானிலன் தான் அதிபர் ஒபாமாவின் உத்தரவை தயார் செய்து அதனை படை கமாண்டர்களுக்கு அனுப்பியுள்ளார். முன்னதாக நேற்று வெள்ளை மாளிகையில் நடந்த உயர் மட்ட குழு கூட்டத்தில் ஒசாமாவை தீர்த்துக்கட்டுவது குறித்து உயர் மட்ட ஆலோசனை கூட்டமும் நடந்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (209)

Eswaran - Palani,இந்தியா
11-ஜூன்-201101:58:09 IST Report Abuse
Eswaran இந்த நேரத்தில் நமது அரசுக்கு மக்களாகிய எங்களது வேண்டுகோள் "அமெரிக்கவைப் பாருங்கள் கொஞ்சமாவது நமக்கு உணர்வு வரவேண்டாமா? நமது நாட்டில் பயங்கரவாதச் செயல்களைச் செய்து மரண தண்டனையும் பெற்று ஆனால் ஹாயாக சிறையில் சகல வசதிகளையும் அனுபவித்துக் கொண்டு வாழவைத்துகொண்டு இருக்கும் நம்மை நினைத்துப் பாருங்கள் "எதற்கு எடுத்தாலும் அமெரிக்காவைப் பார்க்கும் நாம் இந்தமாதிரி காரியங்களில் மட்டும் ஓட்டைப் பார்ப்பது ஏன்? ........ஈஸ்வரன்,பழனி.
Rate this:
Cancel
noornesto - dubai,உக்ரைன்
03-ஜூன்-201112:36:23 IST Report Abuse
noornesto very good
Rate this:
Cancel
கேசவ கிருஷ்ணா - சென்னை,இந்தியா
19-மே-201114:43:12 IST Report Abuse
கேசவ கிருஷ்ணா நல்லவரோ தீயவரோ, மரியாதை மிக அவசியமான ஒன்று. நல்ல வேலை அவர் இறந்து விட்டார் என்பதை மனதில் கொண்டு அது, இது என்று எழுதாமல் இருந்தீர்களே. மரியாதை தராததை நான் கடுமையாக கண்டிக்கிறேன். ஒசாமா இறந்தது உலகிற்கே நல்ல செய்தி. ஆனால் அமெரிக்கா சந்தோஷத்தில் மூழ்கி விட வேண்டாம். ஒசாமாவிற்கு நிறைய வாரிசுகளாம். மிகவும் மகிழ்ச்சியான செய்தி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X