அரசியல் செய்தி

தமிழ்நாடு

100 நாள் திட்டத்தில் மீண்டும் பணி பொதுமக்கள் கோரிக்கை

Added : ஆக 18, 2019
Advertisement

வருஷநாடு : கடமலை-- மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100நாள் வேலை திட்டம்) மூலம் மீண்டும் பணி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில ஆண்டாக கடமலை-- மயிலை ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம் மூலம் கண்மாய், குளம், ஊரணி, வரத்துகால்வாய் துார்வாரும் பணி நடந்தது. இந்நிலையில் கடந்தாண்டு மேற்கண்ட பணிகள் செய்ய தடை விதிக்கப்பட்டு தனி நபர் கழிப்பறை கட்டுதல், பண்ணைக்குட்டை அமைத்தல், அங்கன்வாடி மை யங்கள் கட்டுதல், சேவை மையம் கட்டுதல், மரக்கன்று நடு தல், கல் வரப்பு, மண்வரப்பு போன்ற பணிகளுக்கு முன்னுரி மை வழங்கப்பட்டது. இதனால் பயனாளிகளுக்கு வேலை கிடைக்கவில்லை. கடந்த மூன்று ஆண்டாக மாவட்டத்தில் பரு வமழையும் போதிய அளவு பெய்யவில்லை. விவசாயப் பணிகளும் தடைபட்டுள்ளன.

இதனால் விவசாயக் கூலித் தொழிலா ளர்களும் வேலையின்றி தவிக்கின்றனர். எனவே கடமலை-- மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட மலைக்கிராமங்களில் மீண்டும் இத் திட்டத்தை துவக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X