கடவுளுக்காக வாதாடும் இரு தமிழர்கள்

Updated : ஆக 18, 2019 | Added : ஆக 18, 2019 | கருத்துகள் (66)
Advertisement

புதுடில்லி: ராமர் பிறந்த அயோத்தியில், சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில், தினசரி நடைபெற்று வருகிறது. பரபரப்பான இந்த வழக்கின் தீர்ப்பு, நவம்பர், 17க்கு முன் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


காரணம், இந்த வழக்கை விசாரிக்கும், அரசியல் சாசன அமர்வில் உள்ள தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், நவம்பர், 17ல் தான் ஓய்வு பெறுகிறார். எனவே, அதற்கு முன்பாக, அவர் தீர்ப்பளிக்க வேண்டும்.

இந்த வழக்கில், ராமரும் ஒரு மனுதாரார். கடவுளுக்கும், அதாவது சிலைக்கும், தன்னை பாதுகாத்து கொள்வதற்கான உரிமை உள்ளது என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்து உள்ளதால், ராமர் தரப்பில், இரண்டு வழக்கறிஞர்கள் வாதாடி வருகின்றனர்.

அவர்கள் இருவரும் தமிழர்கள். அவர்களில் ஒருவர், கே. பராசரன். மறைந்த, இந்திரா மற்றும் ராஜீவ் பிரதமராக பதவி வகித்த போது, அட்டர்னி ஜெனரலாக பணியாற்றிய பராசரனுக்கு, இப்போது, 91 வயதாகிறது. இந்து மதம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் கற்றுத் தெரிந்தவர். 'நீங்கள் உட்கார்ந்தே வாதாடலாம்' என, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் கூறியதையும் மறுத்து, இரண்டு நாட்களுக்கு மேலாக, நின்று கொண்டே வாதாடியவர். வயதானதால் எந்த வழக்கையும் எடுத்துக் கொள்ளாமல், அயோத்தி வழக்கில் மட்டும் ஆஜராகி, 'இதுதான் என்னுடைய கடைசி வழக்கு; இதற்குப் பிறகு, சுப்ரீம் கோர்ட் பக்கம் வர மாட்டேன்' என, சொல்லிவிட்டார் பராசரன்.

ராமருக்காக வாதாடும் இன்னொரு தமிழர், சி.எஸ். வைத்தியநாதன். மூத்த வழக்கறிஞரான இவர், தமிழக அரசு சார்பாக, காவிரி உட்பட பல வழக்குகளில் வாதிட்டவர். 70 வயதை நெருங்கும் இவர், ஆறு மாதமாக, இரவு, பகலாக பல ஆவணங்களை புரட்டி, அயோத்தி வழக்கிற்காக தன்னை தயார் செய்தார். அயோத்தியில் கோவில் இருந்ததா என்பது குறித்த தொல்பொருள் துறையின் ஆய்வு அறிக்கை, இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டு யாத்ரீகர் யுவான் சுவாங் உட்பட பலரின் புத்தகங்களைப் படித்து, அவர்கள் அயோத்தி பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதையெல்லாம் குறிப்பெடுத்து, வாதாடிக்கொண்டிருக்கிறார் வைத்தியநாதன்.இந்த வழக்கின் தீர்ப்பு, இந்திய அரசியலில் பெரும் பரபரப்பையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

Advertisement
வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
19-ஆக-201904:36:09 IST Report Abuse
 nicolethomson அவர்கள் வாதிடுவதை விட இங்கே கருத்து வாதிட்டால் மிக அழகு , ஆனால் சில பாலைவனத்தாரின் வரம்பு மீறல் இந்த அழகை கெடுக்குது , கண்டின்யு பண்ணுங்க , நான் என்னோட வயலை பார்க்க போறேன்
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
19-ஆக-201903:05:28 IST Report Abuse
skv srinivasankrishnaveni சத்யமேவஜயதே இந்துக்கடவுள் ஸ்ரீ ராமன் வந்தேற்கடவுள்கள் தான் அல்ல அண்ட் ஜீசஸ் மறுக்கமுடியுமா ????மதத்தை காசாக்கும் மதம்மாற்றம் செய்து காசுபார்க்கும் கூட்டம்களேதான் யாரென்று மக்களுக்கு தெரியும் என்பது தெரிஞ்சும் வெறி பிடிச்சு மதம் மாற்றமுடியலேன்னு தவிக்கும் கூட்டம்களேதான் காரணம்
Rate this:
Share this comment
Cancel
Sasikumar -  ( Posted via: Dinamalar Android App )
18-ஆக-201921:08:04 IST Report Abuse
Sasikumar Jai Sriram
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X