புதிய பயங்கரவாத சட்டம்: பீஹார் எம்.எல்.ஏ., மீது வழக்கு

Updated : ஆக 18, 2019 | Added : ஆக 18, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement

பாட்னா; சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட, 'உபா' எனப்படும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ், பீஹாரைச் சேர்ந்த சுயேச்சை, எம்.எல்.ஏ., ஆனந்த் சிங், மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது.


'சோட்டே சர்க்கார்'

இங்குள்ள மோகாமா தொகுதியின், சுயேச்சை எம்.எல்.ஏ.,வாக இருப்பவர், ஆனந்த் சிங். இவர் மீது, கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் என, பல வழக்குகள் உள்ளன. இந்நிலையில், சமீபத்தில் பார்லி.,யில் நிறைவேற்றப்பட்ட, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சந்தேகப்படும் தனிநபரை, பயங்கரவாதியாக அறிவிக்க முடியும். 'சோட்டே சர்க்கார்' என்று அழைக்கப்படும், ஆனந்த் சிங்கின் பூர்வீக வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், ஏ.கே., - 47 துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் கையெறி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அதையடுத்து, இந்த சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


latest tamil news




பழிவாங்கும் நடவடிக்கை

போலீசார் நடத்திய சோதனை குறித்து, ஆனந்த் சிங் கூறியதாவது: சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், முங்கர் தொகுதியில், காங்., சார்பில் என்னுடைய மனைவி நீலம் தேவி போட்டியிட்டார். அந்தத் தேர்தலில், ஐக்கிய ஜனதா தளத்தின் சார்பில் போட்டியிட்ட, ராஜிவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் வென்றார். அது முதலே, என் மீது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். என்னுடைய வீட்டில் ஆயுதங்களை வைத்துவிட்டு, அது என்னுடையது என, பொய் வழக்கு தொடர முயற்சி நடக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
18-ஆக-201914:18:59 IST Report Abuse
Rafi தமிழகம் ஏற்கனவே அம்மா ஆட்சியில், பிடிக்காதவர்கள் வீடுகளில் கஞ்சா, அபின் போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கைப்பற்றியதை?? அறிந்திருக்கின்றோம்.
Rate this:
Cancel
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
18-ஆக-201911:52:16 IST Report Abuse
Needhiyin Pakkam Nil ஒருவனின் குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவன் குற்றவாளி கிடையாது குற்றம் சாட்டப்பட்டவர் என்று தான் சட்டம் சொல்கிறது அப்படி இருக்கையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சந்தேகப்படும் தனிநபரை, பயங்கரவாதியாக அறிவிக்க முடியும். இது மனிதநேயத்திற்கு எதிரானது, மேலும் சட்டத்திற்கே எதிரான சட்டமாக இது இருக்கிறது........
Rate this:
THENNAVAN - CHENNAI,இந்தியா
18-ஆக-201912:37:11 IST Report Abuse
THENNAVANகொஞ்ச நாளைக்கு உங்கள் நீதி போதனையை நிறுத்தி வையுங்கள் நன்றி....
Rate this:
Cancel
18-ஆக-201908:22:21 IST Report Abuse
ருத்ரா பல வழக்குகள் இவர் மேல் MLA மக்களுக்கு சேவை செய்பவர். பதவியை துஷ் பிரயோகம் செய்பவர் தண்டனைக்கு உரியவர் என்றால் அரசியலில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X