சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளநோட்டு புழக்கம் : சிக்கிய அதிகாரிகள்

Added : ஆக 18, 2019 | கருத்துகள் (5)
Advertisement

நாகர்கோவில் : கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட கேரளாவை சேர்ந்த மத்திய அரசு ஊழியர் உட்பட மூன்று பேர் போலீசாரிடம் சிக்கினர்.

நாகர்கோவில் செட்டிக்குளம் பகுதி தியேட்டரில் ஒருவர் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு கொடுத்து டிக்கெட் எடுத்துள்ளார். இந்த நோட்டில் ஊழியருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அந்த ரூபாய் நோட்டு கொடுத்தவரை விசாரித்த போது அது கள்ள நோட்டு என்பது தெரிந்தது. அவரை விசாரித்ததில், மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது.

நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோடு கேசரி தெருவை சேர்ந்தவர் தினகரன் 43. இவர் கொச்சியில் மத்திய அரசின் கப்பல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மகளிர் கிறிஸ்தவ கல்லுாரி ரோட்டில் உள்ள அவரது கடையில் உள்ள கலர் ஜெராக்ஸ் இயந்திரத்தில் கள்ள நோட்டு தயாரித்தது தெரிய வந்தது. நோட்டை புழக்கத்தில் விட்ட பள்ளிவிளையை சேர்ந்த ரமேஷ் 43, உதவியாக இருந்த ஜோசப் மனோவா 40, தினகரன் ஆகிய மூவரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர்களிடம் இருந்த நான்கு 2000 ரூபாய் நோட்டு, ஒரு 200 ரூபாய் நோட்டு, ஜெராக்ஸ் இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
18-ஆக-201911:23:41 IST Report Abuse
Lion Drsekar எவ்வளவோ நேர்மையான அரசு ஊழியர்கள் இருக்க இது போன்ற சமூக விரோதிகள் லஞ்சம் வாங்க வழி இல்லாததால் இப்படி ஒரு தொழில் ஈடுபட்டிருக்கிறார்களா, வந்தே மதரம்
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
18-ஆக-201910:42:32 IST Report Abuse
ஆரூர் ரங் தினகரன் ?
Rate this:
Share this comment
Cancel
karupanasamy - chennai,இந்தியா
18-ஆக-201907:57:14 IST Report Abuse
karupanasamy நல்லா விசாரிங்க டம்பளர் பார்ட்டி காரனாத் தான் இருப்பானுங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X