பாக்.,ன் போலி முகத்தை அம்பலமாக்கிய எப்ஐஆர்

Updated : ஆக 18, 2019 | Added : ஆக 18, 2019 | கருத்துகள் (19)
Share
Advertisement

குஜ்ரன்வாலா : பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக காட்டிக் கொள்ள போலி எப்ஐஆர்., தயார் செய்து சர்வதேச அமைப்புக்களை பாகிஸ்தான் தவறாக வழி நடத்தி உள்ளது அம்பலமாகி உள்ளது.latest tamil news


பயங்கரவாத செயல்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்காக தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கள் இடையே நில ஒப்பந்தம் நடந்ததாகவும், இது தொடர்பாக அந்த அமைப்புக்கள் மீது குஜ்ரன்வாலா போலீஸ் ஸ்டேஷனில் எப்ஐஆர்., பதியப்பட்டுள்ளதாகவும் ஜூலை 1 ம் தேதி பாகிஸ்தான் அறிவித்தது. பயங்கரவாத அமைப்புக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க துவங்கியதால் பாக்., ஐ கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்கிவிடலாம் என சர்வதேச அமைப்பான நிதி நடவடிக்கை பணிக்குழு சிந்தித்து வருகிறது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அடுத்த வாரம் பாங்காக்கில் நடக்க உள்ளது.


latest tamil news


இந்நிலையில் பயங்கரவாத அமைப்புக்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டதாக பாக்., கூறிய எப்ஐஆர்., நகலை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், உண்மையாக பயங்கரவாத செயல்பாடுகளுக்காக நிலங்களை பயன்படுத்தும், மற்றும் பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி திரட்டும் லக்ஷர் இ தொய்பா அமைப்பின் தலைவன் ஹபீஸ் முகம்மது சையது மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளான அப்துல் ஜாபர், ஹபீஸ் மசூத், அமிர் ஹம்சா, மாலிக் ஜாபர் ஆகியோரின் பெயர்கள் ஏதும் இடம்பெறவில்லை.

எந்த சட்டத்தின் கீழ், எதற்காக, எந்த தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது என்ற விபரம் ஏதும் எப்ஐஆர்.,ல் குறிப்பிடப்படவில்லை. சிலரின் பெயர்கள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, அவர்கள் யார், எந்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் இல்லை. சட்டப்பிரிவுகள் ஏதும் குறிப்பிடாமல் போலியாக எப்ஐஆர்., தயார் செய்யப்பட்டிருப்பது அம்பலமாகி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22-ஆக-201908:31:39 IST Report Abuse
skv srinivasankrishnaveni இஷ்டத்துக்கு பொண்ணுகளை திருமணம் செய்து முத்தலாக் சொல்லி எஸ்கிப் ஆவரானுக பல முஸ்லீம்கள் இதனால் பல நேர்மையான முஸ்லீம்களுக்கும் மனதுலேவருத்தம் வருகிறது அவர்கள் நேர்மையாக வாழும் னநம்பர்களாவதால் கண்ணெடுக்காமலேபோறாங்க பலவருஷங்களாவே நாக்கிலும் அசிங்கம்தான் இந்த முத்தலாக் என்ற கேவலம்
Rate this:
Cancel
Parthasarathy Ravindran - Chennai,இந்தியா
18-ஆக-201919:33:10 IST Report Abuse
Parthasarathy Ravindran தமிழ்நாட்டில் இருக்கும் பிரிவினைவாதி சொல்லிக்கொடுப்பான் போலிருக்கு. இந்த வேலையெல்லாம் இங்க இருக்கறவனுக்கு அத்திப்பிடி.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18-ஆக-201917:11:20 IST Report Abuse
J.V. Iyer ஏமாற்றுப்பேர்வழிகள் பாக்கிகள். அவர்களுக்காக தமிழகத்தில் ஊளை இடும் நரிகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X