சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வள்ளியூர் போலீஸ் ஸ்டேஷனில் பெண் அடித்துக் கொலை

Added : ஆக 18, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
வள்ளியூர், போலீஸ் ஸ்டேசன்,  பெண், அடித்து கொலை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்றும், கிறிஸ்டோபர் 56, என்பவர் சிறுமியிடம் தவறாக நடந்ததற்காக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். அவர் அடிக்கடி தொலைபேசியில் பேசிய கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லை சேர்ந்த லீலாபாய் 52, என்ற பெண்ணை போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்தனர்.
வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் இரவில் விசாரணையின் போது கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அப்போது ரத்த வாந்தியெடுத்து ஸ்டேஷனிலேயே இறந்து விட்டார். சம்பவம் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸ் ஸ்டேஷனில் இரவில் பெண்களை வைக்க கூடாது என்ற விதிமுறைகளை மீறி வைத்திருந்ததால் இந்த லாக் அப் இறப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று(ஆக.,17) இரவில் லாக் அப் தாக்குதலில் இறந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி கொண்டு செல்லப் பட்டது. சம்பந்தப்பட்ட போலீசார், உயர்அதிகாரிகளின் உத்தரவிற்காக காத்திருக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - chennai,இந்தியா
18-ஆக-201919:28:09 IST Report Abuse
mohan அந்த காலத்து அரசர்கள் யாரும், அடித்து உண்மையை வாங்க வில்லை, தங்களது புத்தி சாலித்தனத்தினால் உண்மையை வாங்கினார். அடித்தால், இறந்து விட்டால், உண்மை எப்படி வரும்....
Rate this:
Cancel
puratchiyalan - Nagercoil,இந்தியா
18-ஆக-201912:41:54 IST Report Abuse
puratchiyalan சம்பந்த பட்ட போலீஸ் குண்டர்களை, கொலை குற்றத்தில் சிறையில் அடைத்து, ஆயுள் தண்டனை குடுக்க வேண்டும்.. சட்டம் சரியாக செயல்படவில்லாவிட்டால், பொது மக்கள், அந்த குண்டர்களை அடித்து கொல்ல வேண்டும்.
Rate this:
THENNAVAN - CHENNAI,இந்தியா
18-ஆக-201914:58:56 IST Report Abuse
THENNAVANஎன்னங்கய்யா விசாரிக்காமல் ரெஸ்ட் எடுக்கவா போலீசு இருக்கு ,அந்த அம்மா போன் நம்பரில்தான் அந்த குற்றவாளி அடிக்கடி பேசி இருக்கான் அதை சொல்லிப்புட்டு போக்கவேண்டியதுதானே ,சொல்லாமல் தப்பிக்க பார்த்தால் இப்படி தான் நடக்கும்....
Rate this:
Cancel
puratchiyalan - Nagercoil,இந்தியா
18-ஆக-201912:37:38 IST Report Abuse
puratchiyalan இந்த போலீஸ்களை போன்று இருப்பதால் தான் மொத்த போலீஸ் டெபார்ட்மெண்ட்க்கும் அவமானம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X