பொது செய்தி

தமிழ்நாடு

2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

Updated : ஆக 18, 2019 | Added : ஆக 18, 2019 | கருத்துகள் (1)
Advertisement
TN,Tamilnadu,rain,தமிழகம்,தமிழ்நாடு,மழை, தமிழகம், சென்னை வானிலை

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமானமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், காரைக்கால் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில்,
வேலூர் மாவட்டம் ஆலங்காயம் 15 செ.மீ.,
திருப்பத்தூர்- 10
சிவகங்கை மாவட்டம் திருபுவனம், விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் தலா 9 செ.மீ.,திவளள்ளூர் மாவட்டம் திருவல்லங்காடு, காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தம், புதுச்சேரியில் தலா 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.







பரவலாக மழை


தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி திருவண்ணாமலை, ஈரோடு, விழுப்புரம், கடலூர், சேலம், நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலமாக மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் காலாபேட், முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, நெல்லிகுப்பம், வில்லியனூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
காஞ்சிபுரத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்த வருகிறது. பல நாட்களுக்கு பிறகு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் வண்டலூர், செம்பரம்பாக்கம், பெருங்களத்தூர், முடிச்சூர், தாம்பரம், ஒரக்கடம், மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் 3வது நாளாக கனமழை பெய்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
18-ஆக-201921:29:11 IST Report Abuse
தமிழ் மைந்தன் மூன்றாம் தமிழன் முதல் விவசாயி ஆட்சியில் நல்ல மழை.............
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X