பொது செய்தி

தமிழ்நாடு

பால் விலை உயர்வு: முதல்வர் விளக்கம்

Added : ஆக 18, 2019 | கருத்துகள் (18)
Share
Advertisement
பால் விலை, முதல்வர் இ.பி.எஸ்.,

சேலம்: சேலம் விமான நிலையத்தில் முதல்வர் இ.பி.எஸ்., அளித்த பேட்டி: பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை ஏற்று கொள்முதல் விலை, விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக விலை உயர்த்தவில்லை. விற்பனை விலை கொள்முதல் விலை இரண்டும் கணக்கிட்டுதான் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
பெரும்பாலான பால் கூட்டுறவு சங்கங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. டீசல் விலை உயர்வால் போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில்தான் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தி வருகிறோம். கால்நடை தீவனங்கள் ரேசன் கடைகளில் விற்பனை செய்ய வாய்ப்பு இல்லை. டெல்டா பகுதியில் பெய்துவரும் மழையை கணக்கிட்டுதான் முதல்கட்டமாக தண்ணீர் திறக்கப்படுகிறது. 5 அல்லது 6 நாட்களில் தேவையான தண்ணீர் திறக்கப்படும். புதிய கல்வி கொள்கையில் வெளிப்படையாக உள்ளோம். குறிப்பாக இருமொழி கொள்கை பின்பற்றுவதில் திடமாக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலை மற்றும், விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் பழனிசாமி கூறினார். 5 ஆண்டுகளாக பால் விலை உயர்த்தவில்லை; விற்பனை விலை கொள்முதல் விலை இரண்டையும் கணக்கிட்டுதான் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. பெரும்பாலான பால் கூட்டுறவு சங்கங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. டீசல் விலை உயர்வால் போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில்தான் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்றார். கால்நடை தீவனங்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வாய்ப்பு இல்லை. டெல்டா பகுதியில் பெய்துவரும் மழையை கணக்கிட்டு தேவையான தண்ணீர் திறக்கப்படும். புதிய கல்வி கொள்கையை பொருத்தவரை இருமொழி கொள்கை பின்பற்றுவதில் திடமாக உள்ளோம் என்றும் முதல்வர் பழனிசாமி கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish - Chennai ,இந்தியா
19-ஆக-201906:49:36 IST Report Abuse
Krish காபி டீயை குறைத்து மோர் சாப்பிடுங்கள், வாங்கும் பாலை விஷம் ஆக்காமல் மோர் என்னும் அமிர்தம் ஆக மாற்றி குடியுங்கள். 1 லிட்டர் பாலில் செலவே இல்லாமல் ஐந்து லிட்டர் மோர் கிடைக்கும்.
Rate this:
Cancel
bellie kumar - jubail,சவுதி அரேபியா
19-ஆக-201906:02:42 IST Report Abuse
bellie kumar உங்கள் (admk ) தேர்தல் வாக்குறுதியில் பாலுக்கு லிட்டர் 25 ரூபாய்க்கு விற்கப்படும் என்று மாண்புமிகு அம்மா சொன்னார்கள். இப்பொழுது 25 ரூபாயாக குறைக்காவிட்டாலும் பரவாயில்லை ஏற்றிக்கொண்டு போகிறீர்களே இது நியாயமா ??
Rate this:
Cancel
Sundar - Madurai,இந்தியா
18-ஆக-201921:32:13 IST Report Abuse
Sundar பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலை மற்றும், விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக...Escalation of milk price is justified Price of Cattle feed is raised, Transport charge is raised. Cattle feed is not cultivated enough due to drought and hence raised. Maintenance of raising cattle is raised. Salary of the employees in this sector is raised due to Unions. No body objecting escalation of 'TASMAC'. Escalation price will not affect people. Oppositions are against this is for political gain. Government can close ration shops and can sell milk in subsidy rate. Objection from sector is not maintainable. Rs.1.5 per half liter will not affect the people.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X