காங்., செய்த தவறு: பா.ஜ., எம்.பி., தாக்கு

Updated : ஆக 18, 2019 | Added : ஆக 18, 2019 | கருத்துகள் (27)
Advertisement
China, Demchok, Congress, Ladakh, BJP MP, Namgyal,

லே: பாதுகாப்பு கொள்கையில் லடாக் பகுதிக்கு முந்தைய காங்கிரஸ் அரசு முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தினால் தான், காஷ்மீரில் சில பகுதிகளை சீனா பிடித்ததாக, லடாக் தொகுதி எம்.பி., ஜம்யங் ஷெரிங் நம்கயால் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்; முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, கொள்கை ஒன்றை உருவாக்கி, சீனாவை நோக்கி, நகர வேண்டும் என்றார். இந்த கொள்கை அமல்படுத்தப்பட்ட போது, பின்னோக்கிய கொள்கையாக மாறியது. சீன ராணுவம் நமது எல்லைக்குள் ஊடுருவயது. அதனை மீட்க நாம் போராடி வருகிறோம். இதனால் தான், அக்சய் சின் பகுதி, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், லடாக் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தினால் தான், சீன ராணுவம் டெம்சோக்கில் உள்ள நல்லா என்ற பகுதி வரை வந்தது. சாலை, தொலைதொடர்பு, பள்ளிகள் மற்றும் மருத்துவமனை போன்ற வசதிகளுடன் எல்லை பகுதி, நகர் பகுதி போன்று மாறும்போதுதான் பாதுகாப்பாக இருக்கும். இதற்கு மோடி அரசு ஏற்பாடு செய்து வருகிறது.






காஷ்மீர் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையை நாடி, காங்கிரஸ் தவறு செய்துவிட்டது. இரண்டாவதாக, காஷ்மீரில் பிரச்னை ஏற்படும் போது எலலாம், கடுமையான நடவடிக்கை எடுக்காமல், சமாதானபடுத்துவதையே கொள்கையாக வைத்திருந்தது. காஷ்மீரில் பிரச்னை கொளுந்து விட்டு எரியும் போது, போராட்டக்காரர்களை சமாதானபடுத்துவதாக கூறி சிறப்பு திட்டங்களை அறிவித்தது. இது கல் எறிபவர்களுக்கு மேலும் மகிழ்ச்சியையும் , பிரிவினைவாதிகளுக்கு பாதுகாப்பையும் கொடுத்தது. காங்கிரசின் கொள்கையால், காஷ்மீர் சீரழிந்தது. லடாக் பாதிக்கப்பட்டது.
நாட்டை 55 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்தது. அக்கட்சியால், தைரியமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டவுடன் விமர்சனம் செய்கிறது. ராகுல் சொல்வது பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. இவ்வாறு ஜம்யங் ஷெரிங் நம்கயால் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25-ஆக-201904:21:58 IST Report Abuse
skv srinivasankrishnaveni காசுவெறிபிடிச்சு திமுகாவுடன்கூட்டுவச்சது திமுகளே கொடிகள் சர்வசாதாரணமா பொழங்குதுங்கோ அதிமுகளே சசியால் பலர்க்கொடிகளை சேர்த்துண்டாங்க நாடு இப்போது மக்களுக்குஇல்லீங்க இந்தகேதீஸ்வராக்கைகளிலேதான் மாட்டிண்டு தவிக்குது நேராக்க ஒருமுடியும் அமீதுஷா போராதுங்க மினிமம் 1000பேராச்சும் கிளம்பனும் எல்லா மாநிலம்களிலேயும்
Rate this:
Share this comment
Cancel
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
19-ஆக-201905:19:31 IST Report Abuse
Mannai Radha Krishnan சரியாகத்தான் சொல்கிறார். மாநிலத்திலும் எல்லா கட்சிகளும் விலை இல்லா பொருள்கள், சலுகைகள் கொடுத்து குட்டிச் சுவராக மாற்றுகிறார்கள். எல்லாத்துக்கும் எல்லை உண்டு. சலுகைகள் ஏழை=பணக்காரன் என்றுதான் இருக்கனும், சாதி மதத்தை காட்டி சலுகை தருவது அபத்தம்.
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
19-ஆக-201911:28:00 IST Report Abuse
Darmavanதீவிரவாதிக்கும் /கல்லெறிபவனுக்கும் லஞ்சம் கொடுத்தால் நம் பலவீனம் தெரிகிறது. மேலும் அதை தீவிரப்படுத்துகிறான்.கேடுகெட்ட கட்சி காங்கிரஸ்....
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19-ஆக-201903:42:59 IST Report Abuse
J.V. Iyer தாக்கு என்பது தவறான சொல். உண்மையை புட்டு புட்டு வைக்கிறார். இன்னும் ஏராளமான மறைக்கப்பட்ட உண்மைகள் உள்ளன. கான்-க்ராஸ் என்பது பொய்யில் புனையப்பட்ட கட்சி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X