பா.ஜ., அரசுக்கு காங்., மாஜி முதல்வர் ஆதரவு

Updated : ஆக 19, 2019 | Added : ஆக 18, 2019 | கருத்துகள் (17)
Advertisement
B.J.P,BJP,Bharatiya Janata Party,Congress,Kashmir, காங்கிரஸ், காஷ்மீர்,பா.ஜகாஷ்மீர், விவகாரம், பா.ஜ., காங்., மாஜி முதல்வர், ஆதரவு, பூபேந்தர் சிங் ஹூடா

சண்டிகர்: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை வரவேற்பதாக, காங்., மூத்த தலைவரும், அரியானா முன்னாள் முதல்வருமான பூபேந்தர் சிங் ஹூடா கூறியுள்ளார்.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதுடன், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசமாகவும் பிரித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சோனியா, ராகுல், சிதம்பரம், குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அக்கட்சியின் ராஜ்யசபா கட்சி கொறடா, காங்கிரசின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது பதவியை ராஜினாமா செய்து பா.ஜ.,வில் இணைந்தார். அக்கட்சியை சேர்ந்த சிந்தியா உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், அரியானாவில் நடந்த பேரணியில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பூபேந்தர் சிங் ஹூடா பேசியதாவது: அரியானாவில் நாங்கள் ஆட்சி அமைத்தால், வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய ஆந்திராவை போல், நாங்களும் சட்டம் கொண்டு வருவோம்.

அரசு சரியான விஷயத்தை செய்தால், அதனை வரவேற்பேன். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு காங்கிரசில் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போதே கட்சி தனது இலக்கை இழந்து பாதை மாறி விட்டது. காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட சட்டத்திற்கு வரவேற்பு தெரிவிக்கிறேன். காஷ்மீரில் அரியானாவை சேர்ந்த எங்களின் சகோதரர்கள் ராணுவ வீரர்கள் பணியில் உள்ளனர். இதனால், அந்த மசோதாவை ஆதரிக்கிறேன்.
நான் தேசப்பற்று மிக்க குடும்பத்தில் பிறந்தவன். இதனால், எதற்காகவும் யாருடனும் தேசப்பற்றை சமரசம் செய்து கொள்ள மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
19-ஆக-201906:12:43 IST Report Abuse
Indhuindian அப்படியே அப்ரூவரா மாறி சோனியா மருமகனோட திருவிளையாடல்களை விலா வாரியா சொல்லிடீங்கன்னா சட்டத்தை பாது காக்கும் இப்போது அவரோட தில்லு முல்லுகளை விசாரித்து வரும் ஏஜென்சிகளுக்கு ரொம்ப சௌகர்யமா இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
18-ஆக-201920:11:19 IST Report Abuse
A.George Alphonse இந்த வயதான மாஜி முதலமைச்சர் ஆதரவு தருவதில் எதற்கோ அல்லது யாருக்கோ பிஜேபியில் துண்டு போடுவதுபோல் தெரிகிறது.
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
18-ஆக-201919:25:21 IST Report Abuse
 N.Purushothaman தேசப்பற்றை பற்றி எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்ன்னு எங்கூருல ஒரு கூமுஸ் சொல்லுச்சு ...அது சொன்ன நேரமோ என்னமோ அவிங்க அடிமை ஒருத்தன் தேசிய செய்தி சேனல்ல ஜம்மு -காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் அங்கமே இல்லன்னு சொல்லிட்டான்னா பார்த்துக்கிடுங்க ...அவனுங்களோட தேசப்பற்று எந்த அளவுக்கு இருந்திருந்தா மூளையில் இருந்து ஓவர் ப்லொவ் ஆகி வெளியே வந்திருக்கும் ...அந்த களவாணிகளுக்கெல்லாம் சொம்படிக்க இங்க வாழ் நாள் அடிமைங்க எல்லாம் இருக்கானுங்க ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X