முஸ்லிம்களுக்கே பயன்!

Added : ஆக 18, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
 முஸ்லிம்களுக்கே பயன்!

நாட்டின் பிரிவினைக்கு வித்திட்ட, திருப்திப்படுத்தும் அரசியல் போக்கு தான், முத்தலாக் என்ற, பாவச் செயல் தொடர்வதற்கு காரணமாக இருந்தது. தற்போது, முத்தலாக் தடை சட்டம் வந்திருப்பதால், பயன்பெறப் போவது முஸ்லிம்கள் தவிர, மற்றவர்கள் அல்ல. ஆனால், இப்படி ஒரு கொடுமை நீடித்து வருவதற்கு காரணமாக இருந்த காங்., அதற்காக வெட்கப்படாமல், முத்தலாக் சட்டத்தையும் எதிர்க்கிறது.-அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,
பாதிப்புக்கு காரணம்!
ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில், காங்.,கின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள், நல்ல நோக்கத்துடன் இருந்ததில்லை. ஜம்மு - காஷ்மீர், லடாக் இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டதற்கு, 55 ஆண்டுகள் ஆண்ட, காங்.,கின் நடவடிக்கைகளே காரணம். மிகவும் தைரியத்துடன் அவர்கள் நடவடிக்கை எடுத்ததில்லை. ஆனால், தற்போது விமர்சிக்கிறார்கள். அவர்களுடைய பேச்சுக்கு நாங்கள் கவலைப்படப் போவதில்லை.-ஜாம்யாங் ஸெரிங் நாம்க்யால், லடாக் எம்.பி., - பா.ஜ.,
சிறந்த பேச்சு!
நான் பா.ஜ.,வில் இருந்தபோது, வெளிப்படையாக பேசக் கூடியவன் என்ற பெயரை பெற்றவன். பிரதமர் நரேந்திர மோடியின், இந்தாண்டு சுதந்திர தின உரை, உண்மையில், மிகவும் தைரியமானதாகவும், சிந்தனையை தூண்டக் கூடியதாகவும் அமைந்துள்ளது. நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து அவர் பேசியுள்ளார்.-சத்ருகன் சின்ஹா, மூத்ததலைவர், காங்.,

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
19-ஆக-201917:39:04 IST Report Abuse
Malick Raja முத்தலாக் சட்டம் இயற்றியது .. உயிரற்ற உடலுக்கு விருந்து கொடுப்பது போலத்தான் .. மூன்று முறை தலாக் வார்த்தையை ஒரே தடைவையில் ஒருவன் சொல்லி விவாகரத்து செய்ய முடியாது என்ற நிலையில் சட்டம் யாருக்கு என்பது சட்டத்தை இயற்றியவர்களுக்கும் ஓட்டளித்து நிறைவேற்றியவர்களுக்குமே பயன்படட்டும் .. முஸ்லீம் என்ற பெயரில் ஒவ்வொருவர் செய்வதற்கும் அந்த சமூகம் பொறுப்பேற்க முடியாது எனவே சட்டம் முஸ்லீம் பெயரில் முஸ்லீம் அல்லாத முறையில் வாழ்வோருக்கு பொருந்திக் கொள்ளட்டும் .. ஜெய் ஹிந்த்
Rate this:
Indian - Bangalore,இந்தியா
19-ஆக-201919:06:12 IST Report Abuse
IndianI guess, as per the Islam law, minimum 3 month gap between each talaq. But some Muslims saying talaq continuously at the same time and they saying divorce is done. This new law is opposition only for those people who saying talaq immediately. and government will take action when the wife went to police station, Otherwise government wont arrest him.Then people are worrying about this new law.? I'm not hater of Muslims and not even supporter of BJP/ RSS. It's just my opinion....
Rate this:
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
19-ஆக-201919:18:07 IST Report Abuse
கதிரழகன், SSLCமுத்த லாக்கு ஷரி ஆஹ் க்கு எதிரானது, ஹரம் ன்னு ஒரு பாட்வா போடேன்? எது எதுக்கெல்லாமோ படவா போடற?...
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24-ஆக-201918:25:43 IST Report Abuse
Malick Rajaஉனக்கு தெரிந்ததெல்லாம் அதுதான் ..அது ஊட்டுல போய் பார்த்துக்கோ...
Rate this:
Cancel
Anjali - chennai,இந்தியா
19-ஆக-201914:27:06 IST Report Abuse
Anjali இது முசுலீம் மக்களுக்கு எதிரானது என்று திணிப்பதுக்கு காங்கிரஸ் தேவை இல்லாமல் முயற்சிக்குது, இது நாகரிகமான ஒரு நல்ல வாழ்க்கையை முசுலீம் பெண்களுக்கு கிடைக்க ஒரு அடித்தளம் அளிபதை அரசியல் ஆக்காமல் இருப்பது நல்லது, BJP வாக்கு வாங்கி அரசில் பண்ணவில்லை தைரியமான சமுக மாற்றத்திற்கான முயற்சி
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
19-ஆக-201908:45:10 IST Report Abuse
ஆரூர் ரங் முத்தலாக் தடை சட்டத்தால் கூடுதல் இந்து கிறித்தவ வாக்குகள் பாஜகவுக்கு கிடைக்கப் போவதில்லை .மாறாக இஸ்லாமிய வாக்குகள் குறையலாம் . ஆனாலும் வாக்குவங்கியைப் பற்றிக் கவலைப்படாமல் இஸ்லாமியப்பெண்களுக்கு நன்மை செய்தது ஆச்சர்யம்தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X