பொது செய்தி

இந்தியா

நலிவடைந்த பிரிவினர் கடன்கள் விரைவில் ரத்து

Updated : ஆக 19, 2019 | Added : ஆக 18, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement
 நலிவடைந்த, பிரிவினர்,கடன்கள் ,விரைவில், ரத்து

புதுடில்லி:பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், அரசு நிதி நிறுவனங்களில் வாங்கியுள்ள, குறைந்த தொகை கடன்களை, தள்ளுபடி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. திருப்பிச் செலுத்த முடியாமல், நொடிந்து போயுள்ளவர்களின் கடன்கள் ரத்து செய்யப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, மத்திய அரசின், கம்பெனிகள் விவகாரத்துறை செயலர், இன்ஜெடி ஸ்ரீனிவாஸ் கூறியுள்ளதாவது:கூட்டுறவு கடன் சங்கங்கள் போன்ற, அரசு சார்பு, சிறிய நிதி நிறுவனங்களில் இருந்து கடனாக பணம் பெற்று, திருப்பிச் செலுத்த முடியாதவர்களை பாதுகாக்கும் வகையில், புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதுl பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு மட்டுமே இந்த சலுகை

* கடன் வாங்கியவரின் ஆண்டு வருமானம், 90 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது; அவரின் சொத்து மதிப்பு, 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது.

* அவர் வாங்கிய கடன், 35ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்

* கடன் வாங்கியவருக்கு, சொந்தமாக வீடு இருக்கக் கூடாது. ஒரு முறை கடன் தள்ளுபடி செய்யப்பட்டால், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அந்த சலுகையை எதிர்பார்க்க முடியாது.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் இந்த திட்டம், விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. தேசிய அளவில், இதற்காக, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஆக-201920:45:42 IST Report Abuse
ஆப்பு இப்பவே கார், டூ வீலர் கடனை லேட்டா கட்டலாம்னு SBI சொல்லிருச்சு. இனிமே அங்கே வேலை போனவங்களையும் நலிவடைந்த பிரிவினராக அறிவிச்சுரலாம்.
Rate this:
Cancel
19-ஆக-201920:42:29 IST Report Abuse
ஆப்பு காங்கிரஸ்காரன் கடனை ரத்து பண்ணுனாதான் தப்பு. இவிங்க கடனை ரத்து பண்ணுனா அது கருணை. காங்கிரஸ்காரன் விவசாயிகளுக்கு காசு குடுக்கறேன்னா அது தப்பு..இவிங்க கணக்குல 2000 ரூவா வரவு வெச்சா அது காருண்யம். காங்குரஸ்காரன் நல்லவன்னு சொல்லலை...இவிங்களும் அதே உத்தியைத்தான் கையாளறாங்கன்னு சொல்ல வரேன்.
Rate this:
Cancel
Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா
19-ஆக-201913:30:45 IST Report Abuse
Balamurugan Balamurugan வீட்டு கடனை கட்ட முடியாமல் தவிப்பவர்களுக்கு அரசு உதவி வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X