தினமலர் செய்தி எதிரொலி: மின்கம்பம் மாற்றியமைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'தினமலர்' செய்தி எதிரொலி: மின்கம்பம் மாற்றியமைப்பு

Added : ஆக 18, 2019
Share
மேட்டுப்பாளையம்:காரமடை - மேட்டுப்பாளையம் இடையே, விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் நான்கு வழிச்சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின்கம்பம் மாற்றி அமைக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் - காரமடை இடையே உள்ள இருவழிச்சாலையை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. இதில், நான்கு இடங்களில் பாலங்கள் கட்டும் பணிகளும், சாலையின் இரு பக்கம் புதிதாக
 'தினமலர்' செய்தி எதிரொலி:  மின்கம்பம் மாற்றியமைப்பு

மேட்டுப்பாளையம்:காரமடை - மேட்டுப்பாளையம் இடையே, விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் நான்கு வழிச்சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின்கம்பம் மாற்றி அமைக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் - காரமடை இடையே உள்ள இருவழிச்சாலையை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.
இதில், நான்கு இடங்களில் பாலங்கள் கட்டும் பணிகளும், சாலையின் இரு பக்கம் புதிதாக சாலை அமைக்கும் பணியும் நடக்கிறது. இந்த விரிவாக்க சாலையின் மையப்பகுதியில் பல இடங்களில் மின்கம்பங்கள் அகற்றப்படாமல் இருந்தன. மின் கம்பங்களை மாற்றி அமைக்காமலேயே மீண்டும் தார் சாலை அமைக்கப்பட்டது. இரவு நேரத்தில் மின்கம்பத்தில் வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டு வந்தது. இந்த மின் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என, 'தினமலரில்' செய்தி வெளியானது. இதையடுத்து இடையூறாக இருந்த மின் கம்பங்களை மின்வாரியத்தினர் அப்புறப்படுத்தி சாலைக்கு ஒதுக்குப்புறமாக அமைத்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X