பிரதமர் மோடியின் பூடான் பயணம் நிறைவு

Updated : ஆக 20, 2019 | Added : ஆக 18, 2019 | கருத்துகள் (5+ 17)
Advertisement
 பிரதமர்,மோடி, பூடான் ,பயணம், நிறைவு

திம்பு:அண்டை நாடான பூடானுக்கு, இரண்டு நாள் பயணமாக சென்றிருந்த பிரதமர் மோடி, நேற்று நாடு திரும்பினார்.

முன்னதாக, அந்நாட்டின் பிரதமர் மற்றும் மன்னரை சந்தித்து, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.கடந்த சனிக்கிழமை, பிரதமர் மோடி, பூடான் சென்றார். அவர் பூடான் செல்வது, இது இரண்டாவது முறை. மீண்டும் பிரதமரான பிறகு, மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் இது.

அந்நாட்டின் தலைநகர், திம்புவில் தங்கியிருந்த மோடி, பூடான் பிரதமர், லோடே ஷெரிங்கை சந்தித்து, பல துறைகளில், இரு நாடுகளின் உறவு குறித்து பேச்சு நடத்தினார்.குறிப்பாக, விண்வெளி ஆராய்ச்சி, விமான போக்குவரத்து துறை, தகவல் தொழில்நுட்பம், மின்சாரம் மற்றும் கல்வி தொடர்பாக, இரு நாடுகளுக்கும் இடையே, 10 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டன. பூடான் தற்போதைய மன்னர், ஜிக்மே கேசர் நாம்கியெல் வாங்சுக்கை சந்தித்து, இரு நாடுகளின் ஒற்றுமையை, மேலும் முன்னெடுத்துச் செல்வது குறித்து விவாதித்தார்.

அந்நாட்டின், நான்காவது மன்னர், ஜிக்மே சிங்யே வாங்சுக்கையும் சந்தித்து, இருதரப்பு உறவை பலப்படுத்தும் அம்சங்கள் குறித்து பேசினார்.நேற்று அவர், பூடான் ராயல் பல்கலைக் கழகம் சென்று, மாணவர்கள் மத்தியில், உற்சாகமாக உரையாற்றினார்.அப்போது அவர், ''இந்தியாவும், பூடானும், இயற்கையிலேயே ஒரே குடும்ப உறவு கொண்ட பங்காளி நாடுகள். இரு நாடுகளும் பரஸ்பரம், புரிந்து கொண்ட நாடுகள். மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்; நாட்டை முன்னேற்ற வேண்டும்,'' என்றார்.

அதன் பின், அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர், பெமா கியாம்ட்ஷோவை சந்தித்தார். மூன்றாம் மன்னர் நினைவாக கட்டப்பட்டுள்ள, சோர்டென் தேசிய நினைவிடம் சென்று, மறைந்த மன்னருக்கு அஞ்சலி செலுத்தினார். இந்த மன்னர் தான், பூடான் நாட்டை, உலகம் தெரிந்து கொள்ளச் செய்தார். அதற்கு முன் வரை, வெளிநாட்டினர் பயணிக்காத நாடாக, வெளி உலகத்தினர் புரிந்து கொள்ளாத நாடாக அது விளங்கியது.பிரதமர் மோடிக்கு, பூடான் மன்னர், நேற்று மதிய விருந்தளித்தார். அதையடுத்து, இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, பிரதமர் மோடி, நாடு திரும்பினார்.

Advertisement




வாசகர் கருத்து (5+ 17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suresh - chennai,இந்தியா
19-ஆக-201910:39:24 IST Report Abuse
Suresh கள்ளங் கபடமற்ற வெள்ளை மனசு கொண்ட பூடான் தேசத்தில், பல கலை வித்தகர் மோடி போய் கலக்கி விட்டு வந்து இருக்கார். பூட்டானுக்கு பா ஜ க பிரதிநிதியா நம்ம ஊரு ஹெச் ராஜாவை அப்பாயிண்ட்மெண்ட் பண்ணலாமே? நாங்க எல்லாம் இங்க ப்ரீயா இருப்போம்ல?
Rate this:
Share this comment
Anand - chennai,இந்தியா
19-ஆக-201916:51:59 IST Report Abuse
Anandஇந்தியாவிலேயே சிறந்த மனிதர் சுடலை தான் என கேரளாவில் உள்ள ஒரு அமைப்பு ஆய்வை நடத்தி கண்டுபிடித்துள்ளது என சுடலையே ஒரு பேட்டியில் கூறியிருந்தார், அவரை அங்கு அனுப்பிவைத்தால் ஒரு வாரத்தில் தன்னுடைய தொண்டர் படைகளை வைத்து கலக்கு கலக்குனு கலக்கி விடுவார்....
Rate this:
Share this comment
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
19-ஆக-201909:13:14 IST Report Abuse
Allah Daniel வரவேற்கதக்க பயணம்..
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
19-ஆக-201908:16:58 IST Report Abuse
Nallavan Nallavan கார்ப்பரேட்டுகள் கடன் வாங்கிவிட்டு ஏப்பம் விட்டு ஓடுகிறார்கள் ...... எந்தெந்த நாடுகளுக்கு ஓடுகிறார்களோ அந்தந்த நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும்படி பயணங்கள் செய்யலாமே ?? இன்னும் கொஞ்சம் பயனுள்ளதாக இருக்குமே ??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X