3 மாநில சட்டசபை தேர்தல் முதல்வர்கள் தலைமையில் சந்திக்கிறது பா.ஜ.,

Updated : ஆக 20, 2019 | Added : ஆக 18, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி:மஹாராஷ்டிரா, ஹரியானா மற்றும் ஜார்க்கண்டில், இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலை, மாநில முதல்வர்கள் தலைமையில் சந்திக்க, பா.ஜ., திட்டமிட்டுள்ளது.மஹாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு, இந்தாண்டு இறுதியில் சட்ட சபை தேர்தல் நடக்க உள்ளது.கடந்த, 2014ல் இந்த மாநிலங்களுக்கு நடந்த தேர்தலின்போது, முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமல், பா.ஜ.,
 3 மாநில சட்டசபை தேர்தல் முதல்வர்கள் தலைமையில் சந்திக்கிறது பா.ஜ.,

புதுடில்லி:மஹாராஷ்டிரா, ஹரியானா மற்றும் ஜார்க்கண்டில், இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலை, மாநில முதல்வர்கள் தலைமையில் சந்திக்க, பா.ஜ., திட்டமிட்டுள்ளது.

மஹாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு, இந்தாண்டு இறுதியில் சட்ட சபை தேர்தல் நடக்க உள்ளது.கடந்த, 2014ல் இந்த மாநிலங்களுக்கு நடந்த தேர்தலின்போது, முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமல், பா.ஜ., போட்டியிட்டது.தற்போது நடக்க உள்ள தேர்தலில், மாநில முதல்வர்கள் தலைமையில் சந்திக்க, பா.ஜ., திட்டமிட்டு உள்ளது.

இது குறித்து, பா.ஜ., மூத்த தலைவர்கள் கூறியதாவது:கடந்த, 2014ல் தேர்தல் வெற்றிக்குப் பிறகே, இந்த மூன்று மாநிலங்களுக்கும் முதல்வரை தேர்வுசெய்தோம்.மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ஹரியானா முதல்வர், மனோகர் லால் கட்டார், ஜார்க்கண்ட் முதல்வர், ரகுபர் தாஸ் ஆகியோரின், இந்த ஐந்து ஆண்டு கால சிறப்பான ஆட்சியை முன்வைத்தே, இந்தத் தேர்தலை சந்திக்க உள்ளோம்.

இந்த முதல்வர்கள் தலைமையில், தேர்தலை சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஹரியானாவில், சமீபத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய, கட்சித் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான, அமித் ஷா, 'மீண்டும் ஆட்சி அமைந்தால், மனோகர் லால் கட்டார் தான் முதல்வராக இருப்பார்' என்று அறிவித்தார்.

மற்ற இரு மாநிலங்களிலும், இதே நிலை தான் இருக்கும்.இந்த மாநிலங்களில் முந்தைய ஆட்சிகளின்போது, ஊழல் புகார்கள் கூறப்பட்ட நிலையில், இந்த மூவரும், எந்த ஊழல் புகாரும் இல்லாமல், சிறப்பாக நிர்வாகம் செய்துள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NARAYANAN.V - coimbatore,இந்தியா
20-ஆக-201905:47:08 IST Report Abuse
NARAYANAN.V மளிகைக்கடைகளில் ஒயின் விற்க அனுமதி கொடுத்து இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ இருக்கும் இரகுபர்தாசுக்கு வாழ்த்துக்கள்.அவருக்கு என்ன நிர்பந்தமோ? தெரியவில்லை.விரைவில் தெரிந்து கொள்வோம் என்ற நம்பிக்கை மட்டும் நமக்கு இருக்கிறது.இந்தியா விரைவில் வல்லரசாவது மட்டும் உறுதியாகிவிட்டது என்பது தெரிகிறது .
Rate this:
Cancel
rajkumar - Tokyo ,ஜப்பான்
19-ஆக-201918:57:19 IST Report Abuse
rajkumar All the best
Rate this:
Cancel
19-ஆக-201914:14:33 IST Report Abuse
பச்சையப்பன் நிச்சயமாக இந்த 3 மாநிலங்களிலும் எங்கள் அன்னை சொக்கத் தங்கம் சோனியாவின் தலையில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். !!! அதன் பின்னர் மத்தியிலும் ஆட்சி அமைக்கும். அதன் பின்னர் ஆரியப் பாம்புகள் கைபர் கணவாய் வழியே விரட்டியடிக்கப் படுவார்கள்..ஹா ஹா ஹா. 3 மாநிலத்திலும் ஆரிய வந்தேறிகளுக்கு பெரிய ஆப்பு காத்திருக்கின்றது.!!
Rate this:
19-ஆக-201915:42:41 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்சொக்க தங்கம் என்றால் வங்கியில் அடமானம் வை , இங்கே ஏன் மற்றவர்களை படுத்துகிறாய் ,...
Rate this:
மதுரை வாசு - மதுரை மாநகர்,இந்தியா
19-ஆக-201917:42:32 IST Report Abuse
மதுரை வாசுவந்தேறிகள்? ராகுல் காந்தியோட தாத்தா (இந்திராவின் கணவர்) பெரோஸ்கான் பார்சி இனம். அதாவது பாரசீகத்திலிருந்து வந்தவர்கள். பாரசீகம் என்றால் பாரசீக வளைகுடா பகுதி (தற்போதைய ஈரான் & ஈராக் நாடுகள்). ஆரியர்கள் இங்கிருந்து தான் வந்தார்கள். அப்படியானால் ராஜீவ், ராகுல், ப்ரியங்கா ஆகியவர்களும் வந்தேறிகள்தான் (அப்பா ஜாதிதான் சட்டப்படி பிள்ளைகளுக்கும் வரும்)....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X