பொது செய்தி

இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த வியூகம்: மத்திய அரசின் நான்கு அம்ச திட்டம் தயார்

Updated : ஆக 20, 2019 | Added : ஆக 18, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், அமைதியை ஏற்படுத்துவதற்காக, மத்திய அரசு புது வியூகத்தை உருவாக்கியுள்ளது. பிரச்னை ஏற்படுத்தக் கூடியவர்கள் என கருதப்படுவோரை, நான்கு பிரிவுகளாக பிரித்து, தனித்தனியாக அவர்களை சமாளிக்க திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, அரசியல் சாசனத்தின், 370வது பிரிவு சமீபத்தில் ரத்து

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், அமைதியை ஏற்படுத்துவதற்காக, மத்திய அரசு புது வியூகத்தை உருவாக்கியுள்ளது. பிரச்னை ஏற்படுத்தக் கூடியவர்கள் என கருதப்படுவோரை, நான்கு பிரிவுகளாக பிரித்து, தனித்தனியாக அவர்களை சமாளிக்க திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.latest tamil newsஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, அரசியல் சாசனத்தின், 370வது பிரிவு சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. மேலும், ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு, காங்., உட்பட சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.


latest tamil newsஇந்த நிலையில், ஜம்மு - காஷ்மீரின் பாதுகாப்புக்காக கூடுதல் படைகள் அனுப்பப்பட்டுள்ளன. அங்கு பல்வேறு பகுதிகளில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 'மொபைல் போன், இன்டர்நெட்' சேவைகள் முடக்கப்பட்டன.தற்போது, சில இடங்களில், இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பல அரசியல் கட்சி தலைவர்கள், பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்; சிலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கில், முழு அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகளில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக, நான்கு அம்ச திட்டத்தை உருவாக்கியுள்ளது.இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சக உயரதிகாரிகள் கூறியதாவது:

ஜம்மு - காஷ்மீரில் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அங்குள்ள நிலைமைக்கு ஏற்ப, கட்டுப்பாடுகள் படிப்படியாக குறைக்கப்படும். பிரச்னைகளை யார் ஏற்படுத்துவர் என்பதற்கு ஏற்ப, அதை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகள் தேவை. இதற்காக, நான்கு அம்ச திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள், போராட்டங்கள் நடைபெறுவதை தடுக்க, இந்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

முதல் பிரிவினர், நேரடியாக போராட்டம், வன்முறையில் ஈடுபடாவிட்டாலும், தங்களுடைய பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகளால், மற்றவர்களை வன்முறைக்கு துாண்டி விடுபவர்கள். அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரிவினைவாதிகள் இந்தப் பிரிவில் வருகின்றனர். தற்போது, 400க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரிவினைவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சூழ்நிலையைப் பொறுத்து, அவர்களை விடுவிப்பது குறித்து, மத்திய அரசு முடிவு செய்யும்.

இரண்டாவது, கல்வீசி தாக்குதல் நடத்துவோர் மற்றும் வன்முறையை ஏற்படுத்தும் போராட்டம் நடத்துவோர். மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இந்தப் பிரிவில் வருகின்றனர். இவர்களை அமைதிபாதைக்கு அழைத்துசெல்வதற்காக, குடும்பத்தாருடன் இணைந்து, 'இனி இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டோம்' என்ற உறுதிமொழி பத்திரத்தில் அவர்களிடம் கையெழுத்து வாங்கப்படும். அதன்பிறகும், வன்முறையில் ஈடுபட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மூன்றாவது பிரிவினர், பயங்கரவாதிகள். இந்தப் பிரச்னையை சமாளிக்க, எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும். குறிப்பாக, எல்லையைத் தாண்டி, அத்துமீறி நுழையும் பாக்., பயங்கரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க, ராணுவத்துக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மற்றும் ஜம்முவில், எல்லை பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.

நான்காவது பிரிவினர், மதத் தலைவர்கள். மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும், வன்முறையை துாண்டும் வகையிலும் செயல்படும், மதத் தலைவர்கள் அடையாளம் காணப்படுவர். இவர்களை கைது செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்க, நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தனிமைப்படுத்துவோம்!
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்ப, மாநில போலீஸ், துணை ராணுவப் படைகள் மற்றும் ராணுவம் இணைந்து சிறப்பாக செயல்படுகின்றன. அதேபோல், மக்களுக்கும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். பொய் பிரசாரம் செய்து, மக்களை வன்முறைக்கு துாண்டிவிடும் பயங்கரவாதிகளை தனிமைப்படுத்துவோம். அதன் மூலம், முழு அமைதி விரைவில் திரும்பும்.

தில்பாக் சிங், டி.ஜி.பி.,ஜம்மு - காஷ்மீர்


மீண்டும் கட்டுப்பாடு

ஜம்மு - காஷ்மீரில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள், நேற்று முன்தினம் சில பகுதிகளில் தளர்த்தப்பட்டன. ஸ்ரீநகர் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில், சில இடங்களில் நடந்த போராட்டங்களின் போது, சிறியளவில் வன்முறை ஏற்பட்டது. அதையடுத்து, இந்தப்பகுதிகளில், மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, ஹஜ் பயணம் மேற்கொண்ட, 300க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள், நேற்று ஸ்ரீநகருக்கு திரும்பினர். விமான நிலையத்தில் அவர்களை கவர்னரின் ஆலோசகர் பரூக் கான் வரவேற்றார். அங்கிருந்து, யாத்ரீகர்களை, அவர்களுடைய இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

'மொபைல் இன்டர்நெட்' சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, நேற்று முன்தினம் விலக்கி கொள்ளப்பட்டது. இந்த நிலையில், பொய் செய்திகளும், வதந்திகளும் பரப்பப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், ஜம்மு பிராந்தியத்தில், ஐந்து மாவட்டங்களில், நேற்று மீண்டும் தடை விதிக்கப்பட்டது.


'ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேச்சு'


ஜம்மு - காஷ்மீரில் மத்திய அரசு எடுத்த முடிவுகளுக்கு, நமது அண்டை நாடான பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், சர்வதேச அமைப்புகளுக்கும் இந்தப் பிரச்னையை எடுத்துச் சென்றது. காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்க, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், பாக்., மற்றும் சீனா எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்து, மூக்குடைபட்டன. இதைத் தொடர்ந்து, எந்த விளைவுகளை சந்திக்கவும் தயார் நிலையில் இருப்பதாக பாக்., ராணுவம், திடீரென அறிவித்தது.

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 'அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்பதே, இந்தியாவின் கொள்கை. ஆனால், எதிர்காலத்திலும் அது தொடருமா என்பதை உறுதியாக தெரிவிக்க முடியாது' என, ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், ஹரியானாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான, ராஜ்நாத் சிங் பேசியதாவது:அண்டை நாடான பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த வேண்டுமானால், முதலில் பயங்கரவாதத்துக்கு அளித்து வரும் ஆதரவை, அந்த நாடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பாக்., உடனான பேச்சுகள் இனி, ஜம்மு - காஷ்மீர் தொடர்பாக இருக்காது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்தே இனி, எங்களுடைய பேச்சு இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.பாகிஸ்தான், ஜம்மு - காஷ்மீர் விவகாரம் குறித்து பேசி வருவதால், அதற்கு பதிலடி தரும் வகையில், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி பேசுவோம் என, ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panorama - Chennai ,இந்தியா
27-ஆக-201914:32:21 IST Report Abuse
Panorama Let's all hereby be determined to vote and crown the current Government for the next term (and further) too. The so called congress unscrupulous elements support anti-social elements and enemies. Allegations of corruptions by erstwhile congress veterans proliferating from all corners. Every time Rahul speaks, he helps every Indian to firm up our above determination.
Rate this:
Cancel
JSS - Nassau,பெர்முடா
20-ஆக-201917:49:36 IST Report Abuse
JSS கைது செய்யப்பட்டவர்கள், வீடு காவலில் வைக்கப்பட்டவர்கள் சத்தமில்லாமல் காணாமல் போவதுதான் சிறந்தது. அடுத்த சிறந்த வழி encounter செய்வது. மூன்றாவது உலகில் வேறு எங்காவது இவர்கள் எந்தவழக்கிலாவது தேவை பட்டாள் அங்கே அனுப்புவதும் நல்லதே, நான்காவதாக ஒரே இடத்தில வைத்து பாகிஸ்தானியர் குண்டு வீசுவதற்கு எதுவாக இருப்பது., 5 வதாக சண்டை நடக்கும்போது ச்ரவ தேச எல்லையில் நிறுத்துவது. இது போல் பலவழிகள் இருக்கின்ற்ன.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
19-ஆக-201908:40:13 IST Report Abuse
RajanRajan காஸ்மீர் பிரிவினைவாதிகளை சீனாவின் பாணியில் கதையை முடித்துவிட வேண்டும். அவர்கள் மீது விசாரணை தண்டனை எனும் பேச்சுக்கே இடமில்லை. தேச துரோகிகளை ஒருக்காலும் உயிருடன் விட்டு வைக்க கூடாது. அவர்கள் சமுதாயத்தின் சீரழிவுக்கு வழிவகுப்பவர்கள். சுட்டு தள்ளிவிடுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X