அரசியல் செய்தி

தமிழ்நாடு

'வேலை வாய்ப்பை பாதுகாக்க ஊக்குவிப்பு சலுகை வேண்டும்'

Added : ஆக 18, 2019
Advertisement

சென்னை:'நாட்டில் சரியும் பொருளாதாரம், வேலை வாய்ப்புகளை காக்க, ௧ லட்சம் கோடி ரூபாய்க்கு ஊக்குவிப்பு சலுகைகள் அளிக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:அனைத்து வாகனங்களின் விற்பனையும், கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால், பல பெரிய நிறுவனங்கள் உற்பத்தியை குறைக்கும் வகையில், சில வாரங்களில், இரண்டு முதல் ஒன்பது நாட்களை பணியில்லாத நாட்களாக அறிவித்துள்ளன.சில நிறுவனங்கள், உதிரிபாகங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. இனிவரும் நாட்களில், இந்த நிறுவனங்கள், இன்னும் அதிக பணியில்லாத நாட்களை அறிவிக்கலாம்.மோட்டார் வாகன துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவு, அனைத்து துறைகளிலும் தேக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.கம்ப்யூட்டர் நிறுவனங்களிலும் ஆட்குறைப்பு தொடங்கியுள்ளது. இத்தகைய நிலை நீடிக்குமானால், மிக மோசமான விளைவுகள் ஏற்படும்.நுகர்வை அதிகரிக்கும் வகையிலான ஊக்குவிப்பு நடவடிக்கைகள் வாயிலாகவே, பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க முடியும். கடந்த, 2008 - -09ல் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின் போது, இத்தகைய நடவடிக்கைகள் தான் கை கொடுத்தன.அதேபோல, இப்போதும், குறைந்தது, ௧ லட்சம் கோடி ரூபாய்க்கு, ஊக்குவிப்பு சலுகைகளை அளித்தால் தான், இந்திய பொருளாதாரத்தின் மந்த நிலையை போக்கி, அனைத்து துறைகளையும், வளர்ச்சி பாதையில் எடுத்து செல்ல முடியும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X