அரசியல் செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் கருத்தரங்கம் 28ல் நடத்துகிறது தி.மு.க.,

Updated : ஆக 19, 2019 | Added : ஆக 18, 2019 | கருத்துகள் (9)
Advertisement
விவசாயிகள் ,கருத்தரங்கம், 28ல், நடத்துகிறது, தி.மு.க.,

சென்னை:'தஞ்சாவூரில், வரும், 28ம் தேதி, காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம் நடைபெறும்' என, தி.மு.க., அறிவித்துள்ளது.

தி.மு.க., தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:மத்திய, மாநில அரசுகளின் அலட்சித்தால், ஏழாண்டுகளுக்கும் மேலாக, காவிரி டெல்டா பகுதிகள், வறண்டு கொண்டிருக்கின்றன. தொடர்ந்து, குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை உள்ளது. மேட்டூர் அணை, உரிய நேரத்தில், பாசனத்திற்கு திறந்து விடப்படாததாலும், தமிழகத்தின் நெற்களஞ்சியத்தில், விவசாயமும், விவசாய தொழில்களும் முழுமையாக நலிவடைந்து விட்டன.

அதனால், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும், பிற மாநிலங்களுக்கு வேலை தேடி செல்லும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த அவலநிலையை போக்க, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 28ம் தேதி, தஞ்சாவூரில், கட்சி தலைவர், ஸ்டாலின் தலைமையில், காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம் நடக்க உள்ளது.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagu - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஆக-201921:36:25 IST Report Abuse
Thiagu சூசை கலக்கு சித்தப்பு, நீ தான் வருங்கால ஜனாதிபதி, தமிழ் அடிமைகள் நீ எத பண்ணாலும் நம்புவாங்க,
Rate this:
Share this comment
Cancel
சமத்துவம் - Chennai,இந்தியா
19-ஆக-201917:55:28 IST Report Abuse
சமத்துவம் ரொம்பத்தான் ஓவரா போய்ட்டிருக்கு... கர்நாடக அரசு தண்ணி விட்டா காவேரி விவசாயம் செழிக்குமுங்கோ ...அதற்கு கண்டனம் தெரிவிச்சு உங்கள் குடும்ப கம்பெனி உதயா டிவி யையும் மற்றும் பெங்களூர் நகரில் பாதியளவில் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களையும் விட்டுவிட்டு தமிழ் உணர்வோடு வெளியே வரச்சொல்லுங்கோ... பாதிக்கு பாதி மண்ணு லோடு ஏத்தி ஆறுகளையெல்லாம் கற்பழிச்சது உங்க கழக கண்மணிகள் தானுங்கோ... அத்தனை வண்டியயும் அரை விலைக்கு வித்துட சொல்லீருங்கோ... விவசாயமும், விவசாயியும் பொழைச்சுப்பானுங்கோ. இன்னும் ஒன்னு, உங்கள் சேரி வளர்ப்பில் உள்ள முக்கால்வாசி டிக்கெட்டுகள் விவசாய கூலிகளுங்கோ, உங்கப்பாரு குடுத்த இலவசத்த நம்பி ஓட்டுபோட விவசாயத்தை மறந்து சென்னைக்கு வந்தாங்கோ...பஸ் டிக்கெட் போட்டு அவங்கவுங்க சொந்த கிராமத்துக்கு முடுக்கிவிடுங்கோ, விவசாயி பொழைச்சுப்பானுங்கோ. விவசாயத்திற்கே மூடுவிழா செய்து, மக்களுக்கு இலவசத்தை வாரிகொடுத்து உழைத்து பிளைக்கும் எண்ணத்தையே சீரழித்த கட்சிகளில் ஒன்றான திமுக, விவசாயி மாநாடு நடத்துவது புதுமையிலும் புதுமை... ஆடு நனையுதுன்னு ஓநாயி முதலை கண்ணீர் விடுகிறது. திமுக கட்சி தலைவரின் மகளுக்காக கவேரியையே விட்டு தந்த தந்திரத்தை, துரோகத்தை உண்மை விவசாயியும், மனசாட்சி உள்ளவனும் என்றுமே மறக்க மாட்டான்.
Rate this:
Share this comment
Cancel
Idithangi - SIngapore,சிங்கப்பூர்
19-ஆக-201911:05:20 IST Report Abuse
Idithangi //ஏழாண்டுகளுக்கும் மேலாக, காவிரி டெல்டா பகுதிகள், வறண்டு கொண்டிருக்கின்றன.// கடந்த 5 வருஷம் மோடி ஆட்சி., அதற்கு முன் மன்மோகன் ஆட்சி. இரண்டு வருடம் பதவியில் திமுக இருந்த தி மு க என்ன செய்தது..?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X